விராட் கோலி, ரோகித் சர்மா ஆகியோர் மனதில் அவர்கள் கடவுள், சிறந்தவர், ஜாம்பவான் போன்ற நினைப்பு இருக்கின்றன என யுவராஜ் சிங்கின் தந்தை யோக்ராஜ் சிங் கூறி கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.

இந்திய அணியில் மிகவும் முக்கியமானவர்கள் விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா. இவர்கள் இந்திய அணியில் 15 ஆண்டுகளுக்கு மேல் பயணித்து வருவதால், இவர்களுக்கென மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டமே இருக்கிறது. ஏற்கனவே இவர்கள் டி20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்திருந்தார்கள். தற்போது டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்று விட்டார்கள். இன்னும் ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் மட்டும் இருவரும் ஓய்வு பெறாமல் இருக்கின்றனர்.
விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா இருவரும் 2027 ஒருநாள் உலகக் கோப்பை தொடர் வரை இந்திய ஒருநாள் அணியில் நீடிக்க விரும்புகின்றனர். ஆனால், அப்போது அவர்களுக்கு 39,40 வயது ஆகிவிடும் என்பதால், அவர்களை அணியில் பிசிசிஐ வைத்திருக்காது என்று பல்வேறு தகவல்கள் வெளியாகி வருகின்றன. இந்த நிலையில், விராட் கோலி மற்றும் ரோகித் சர்மாவை கடுமையாக விமர்சித்து இருக்கிறார். இந்திய அணியின் முன்னாள் வீரர் யுவராஜ் சிங்கின் தந்தை யோக்ராஜ் சிங்.
அதாவது, அவர்கள் தங்களை பெரிய நட்சத்திர வீரர்களாக நினைப்பதால், அவர்கள் முன்பு போல் கடினமாக உழைப்பதில்லை என அவர் குற்றம்சாட்டி இருக்கிறார். இது தொடர்பாக பேசிய அவர், விராட் கோலி, ரோகித் சர்மா இருவருமே சிறந்த திறமையை கொண்டிருப்பதாக நான் நம்புகிறேன். நான் அவர்களை தினமும் அதிகாலை 5 மணிக்கு எழுந்து பயிற்சி செய்யுங்கள் என கூறுவேன். இங்கே கிரிக்கெட்டை விட பெரியவர்கள் யாரும் இல்லை என நான் நினைக்கிறேன்.
விராட் கோலி ஆஸ்திரேலியா தொடரில் ஒரே மாதிரியாக அவரது விக்கெட்டை இழந்தார். அப்போது அவரிடம் சென்று நீங்கள் தவறாக விளையாடுகிறீர்கள் என யாரும் ஏன் கூறவில்லை என்று தெரியவில்லை. ரோகித் சர்வாவிடம் அதிகாலை 5 மணிக்கு எழுந்து 10 கிலோமீட்டர் ஓடு என்று யார் சொல்ல போகிறார்கள்? மீண்டும் கூறுகிறேன், இங்கு கிரிக்கெட்டை விட யாரும் பெரியவர்கள் கிடையாது. எனவே நீங்கள் எல்லா நேரங்களிலும் அசத்த வேண்டும்.
நீங்கள் 10 போட்டிகளில் விளையாடினால், அதில் 5ல் தோல்வியடைகிறீர்கள். டான் ப்ராட்மேன் 99.9 சராசரியை வைத்திருக்கும்போது, நீங்கள் ஏன் 54 - 55 கொண்டிருக்கிறீர்கள். ஏனென்றால், நீங்கள் பெரும்பாலும் சுமாராக செயல்படுகிறீர்கள். உங்கள் மனதில் நீங்கள் கடவுள், சிறந்தவர், ஜாம்பவான் போன்ற நினைப்பு இருக்கின்றன. சச்சின் டெண்டுல்கர் ஏன் 43 வயது வரை விளையாடினார்? ஏனெனில் எப்போதும் அவர் மும்பைக்காக ரஞ்சிக்கோப்பையில் விளையாடுவார். முன்னாள் வீரர் முகமது கைஃப்பிடம் பயிற்சியாளர் சந்திரகாந்த், ஒன்று சிறப்பாக விளையாடுங்கள், இல்லையென்றால் வெளியே செல்லுங்கள் என கூறியதை நான் பார்த்திருக்கிறேன். எனவே ரோகித் சர்மா போன்றவர்கள் கடினமாக உழைக்க வேண்டும் என அவர் கூறினார்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ