)
இந்திய கிரிக்கெட் வரலாற்றில் தோனி போல் ஒரு சிறந்த கேப்டன் யாரும் இருக்க முடியாது. காரணம் இந்திய அணிக்கு அனைத்து கோப்பைகளையும் வென்று கொடுத்துள்ளார். கேப்டனாக பொறுப்பேற்ற முதல் தொடரிலேயே டி20 உலக கோப்பையை வென்று கொடுத்தார், அதனை தொடர்ந்து ஒரு நாள் உலக கோப்பை மற்றும் சாம்பியன்ஸ் டிராபி என அடுத்தடுத்து கோப்பைகளை வென்று கொடுத்துள்ளார் தோனி. ஐசிசியின் மூன்று உலக கோப்பைகளையும் வென்ற ஒரே கேப்டன் என்ற சாதனையும் தோனி தான் வைத்துள்ளார். தோனியுடன் நீண்ட நாட்கள் விளையாடி இருந்தாலும், அவரைப்போல கேப்டன்ஷி மற்றும் புகழ் கிடைக்காத மூன்று இந்திய வீரர்கள் உள்ளனர். அவர்கள் யார் யார் என்று பார்ப்போம்.

விரேந்திர சேவாக்
இந்திய அணியின் அதிரடி வீரரான விரேந்திர சேவாக் தோனி போல மிகப் பெரிய வீரராக வருவதற்கான வாய்ப்பு இருந்தது. இந்திய அணிக்கு சேவாக் ஒரு சில போட்டிகளில் கேப்டன் ஆகவும் இருந்துள்ளார். நீண்ட நாட்கள் இந்திய அணிக்கு துணை கேப்டன் ஆகும் இருந்தார். ஓப்பனிங் இறங்கும் வீரர்கள் எப்படி ஆட வேண்டும் என்ற அடித்தளத்தை சேவாக தான் அமைத்துக் கொடுத்தார். இருப்பினும் கேப்டனாக அவர் பெரிய வெற்றியை பெற முடியவில்லை, ஐபிஎல்லிலும் சில ஆண்டுகள் கேப்டனாக செயல்பட்டார் சேவாக். ஆனாலும் அவரால் கேப்டன்சியை தொடர முடியவில்லை.
கவுதம் கம்பீர்
இந்திய அணியின் தற்போதைய தலைமை பயிற்சியாளராக கவுதம் நம்பர் செயல்பட்டு வருகிறார். சில போட்டிகளில் இந்திய அணியின் கேப்டனாகவும் செயல்பட்டுள்ளார் கவுதம் கம்பீர். இருப்பினும் அவருக்கு தொடர்ச்சியான வாய்ப்பு கிடைக்கவில்லை. ஐபிஎல்லில் கொல்கத்தா அணியின் கேப்டனாக இருந்து இரண்டு முறை கோப்பையை வென்றார். ஆனாலும் அவரால் தோனி போல வெற்றிகரமான கேப்டனாக செயல்பட முடியவில்லை. 2007 மற்றும் 2011 ஆம் ஆண்டு உலக கோப்பை வென்ற அணியில் முக்கிய வீரராக கவுதம் கம்பீர் இருந்தார்.
யுவராஜ் சிங்
2011 ஆம் ஆண்டு இந்திய அணி உலக கோப்பை வெல்வதற்கு முக்கியமான வீரராக யுவராஜ் சிங் இருந்தார். தோனிக்கு முன்பே இந்திய அணியில் இடம் பெற்று இருந்தாலும் அவருக்கு கேப்டன்சி வாய்ப்பு கிடைக்கவில்லை. 2007 ஆம் ஆண்டு நடைபெற்ற டி20 உலக கோப்பையில் துணை கேப்டனாக செயல்பட்டார் யுவராஜ் சிங். ஐபிஎல்லில் சில ஆண்டுகள் கேப்டனாக இருந்தார், இருப்பினும் அவரால் தோனி போல கேப்டன்ஷியில் வெற்றி பெற முடியவில்லை.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ