)
இந்தியாவில் கால்பந்து ரசிகர்களுக்கு மிகப்பெரிய மகிழ்ச்சியான செய்தி வெளியாகியுள்ளது. முன்னணி மீடியா மற்றும் டெக்னாலஜி நிறுவனமான Zee Entertainment Enterprises Ltd. (Z), உலகின் மிகவும் பிரபலமான கால்பந்து லீக்களில் ஒன்றான இத்தாலியின் Serie A மற்றும் அதன் முக்கிய கோப்பைத் தொடர்களான Coppa Italia, Supercoppa Italiana ஆகியவற்றின் பிரத்தியேக (Exclusive) ஒளிபரப்பு மற்றும் டிஜிட்டல் உரிமையை 5 ஆண்டுகளுக்கு பெற்றுள்ளது.
இந்த ஒப்பந்தத்தின் மூலம் 2026 ஆகஸ்ட் 22 முதல் 2031 வரை, இந்தியா மட்டுமின்றி வங்கதேசம், இலங்கை, நேபாளம், பூடான், ஆப்கானிஸ்தான் மற்றும் மாலத்தீவு ஆகிய நாடுகளிலும் இந்த போட்டிகளை ரசிகர்கள் Zee5 மற்றும் Unite8 Sports சேனல்கள் மூலம் நேரலையாகக் காண முடியும்.
கடந்த சில ஆண்டுகளாக இந்தியாவில் கால்பந்தின் மீதான ஆர்வம் கணிசமாக அதிகரித்து வருகிறது. குறிப்பாக FIFA World Cup, UEFA Champions League, English Premier League, Bundesliga போன்ற போட்டிகளுக்கு இந்திய ரசிகர்கள் அதிக ஆதரவு அளித்து வருகின்றனர்.
இந்த நிலையில், இத்தாலியின் மிகப்பெரிய லீக் தொடரான Serie A-வின் உரிமையை கைப்பற்றியிருப்பது, Zee நிறுவனத்தின் விளையாட்டு துறையில் மிகப்பெரிய முன்னேற்றமாக பார்க்கப்படுகிறது.
ஏசி மிலன் (AC Milan), இன்டர் மிலன் (Inter Milan), யுவென்டஸ் (Juventus) போன்ற உலகப்புகழ் பெற்ற பல வரலாற்றுச் சிறப்புமிக்க கால்பந்து கிளப்களின் தாய்வீடாக விளங்குவது 'சீரி ஏ' தொடராகும். லௌடாரோ மார்டினெஸ், போலோ டிபாலா, மேடியோ ரெட்டேகி போன்ற முன்னணி சர்வதேச நட்சத்திரங்கள் களம் காணும் இப்போட்டிகள், உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்களைக் கொண்டுள்ளன.
வரும் 2026 ஆகஸ்ட் 22 முதல் தொடங்கும் புதிய சீசன் போட்டிகள், சிறப்பம்சங்கள் (Highlights) மற்றும் பிரத்யேக கால்பந்து நிகழ்ச்சிகள் அனைத்தும் ஜி நிறுவனத்தின் ஜீ5 (ZEE5) டிஜிட்டல் தளத்திலும், யுனைட்8 ஸ்போர்ட்ஸ் (Unite8 Sports) தொலைக்காட்சி அலைவரிசைகளிலும் நேரலையாக ஒளிபரப்பப்பட உள்ளன.
இந்த முக்கிய ஒப்பந்தம் குறித்து யுனைட்8 ஸ்போர்ட்ஸின் முதன்மை வணிக அதிகாரி (CBO) பாவேஷ் ஜனவ்லேகர் கூறுகையில்:
"இந்திய ரசிகர்களுக்கு தரமான ஒளிபரப்பு அனுபவத்தையும், பிரீமியம் விளையாட்டு உள்ளடக்கங்களையும் வழங்குவதே ஜி நிறுவனத்தின் முதன்மை நோக்கமாகும். சர்வதேச அளவில் மிகவும் மதிக்கப்படும் 'சீரி ஏ', 'கோப்பா இத்தாலியா' மற்றும் 'சூப்பர்கோப்பா இத்தாலியானா' தொடர்களை எங்கள் தளத்தில் சேர்ப்பது ரசிகர்களின் கால்பந்து ஆர்வத்திற்கு நாங்கள் அளிக்கும் முக்கியத்துவத்தைக் காட்டுகிறது.
ஏற்கனவே எங்களிடம் உள்ள பிஃபா (FIFA) மற்றும் புன்டஸ்லிகா (Bundesliga) தொடர்களுடன், இந்த இத்தாலிய லீக்குகளும் இணைவது, தெற்காசிய பிராந்தியத்தில் கால்பந்து ரசிகர்களுக்கான சிறந்த மையமாக எங்களை உயர்த்தும்
இந்த ஒப்பந்தத்தின் மூலம் கால்பந்து ரசிகர்களுக்கு பல நன்மைகள் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
2026-27 Serie A சீசன் ஆகஸ்ட் 22, 2026 முதல் தொடங்குகிறது. அன்றுமுதல் அனைத்து முக்கிய போட்டிகளையும் ரசிகர்கள் Zee5, Unite8 Sports Channels மூலம் நேரலையாகக் காண முடியும்.
சமீபகாலமாக இந்தியாவில் ஐரோப்பிய மற்றும் சர்வதேச கால்பந்து போட்டிகளுக்கான பார்வையாளர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்து வருகிறது. இதனை கருத்தில் கொண்டு, ஜி நிறுவனம் தனது டிஜிட்டல் மற்றும் தொலைக்காட்சி கட்டமைப்பை வலுப்படுத்தி வருகிறது.
பிஃபா தொடர்கள், ஜெர்மனியின் 'புன்டஸ்லிகா' மற்றும் தற்போது இணைந்துள்ள இத்தாலியின் 'சீரி ஏ' ஆகிய முன்னணித் தொடர்கள் மூலம், அனைத்துத் தரப்பு ரசிகர்களையும் கவரும் வகையில் ஒரு முழுமையான ஸ்போர்ட்ஸ் தளமாக ஜி நிறுவனம் உருவெடுத்துள்ளது. இது விளம்பரதாரர்களுக்கும் வணிக கூட்டாளிகளுக்கும் புதிய வாய்ப்புகளை உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.