Golden Era For Tamil Nadu Government Employees: முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசு பல அதிரடி அறிவிப்புகளை அடுத்தடுத்து அறிவித்து வருகிறார்கள். குறிப்பாக அரசு ஊழியர்களுக்கு இன்பதிர்ச்சியை தமிழக அரசு கொடுத்து வருகிறது எனக் கூறலாம். இந்த வருஷம் ஆரம்பித்தில் இருந்தே கவர்மெண்ட் எம்ப்ளாயீஸ் சார்ந்த நிறைய அப்டேட் வந்திருக்கு. அரசு ஊழியர்களுக்கு சார்ந்த என்ன முக்கிய அப்டேட்? அதன் மூலம் அரசு ஊழியர்களுக்கு என்ன பலன் கிடைக்கும்? போன்ற முக்கிய 10 அறிவிப்புகள் குறித்து பார்ப்போம்.
தமிழக அரசு ஊழியர் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு 10 முக்கிய அறிவிப்புகள்:
1. போக்குவரத்து ஊழியர்களுக்கு 6% ஊதிய உயர்வு
தமிழக போக்குவரத்து கழக ஊழியர்களுக்கு 6% ஊதிய உயர்வு உயர்வு கொடுக்க வேண்டும் என திமுக அரசு ஒப்புதல் அளித்துள்ளது. மேலும் கடந்த ஆண்டு 15வது ஊதிய ஒப்பந்தத்திற்கு பிறகு, இந்த 6% ஊதிய உயர்வு வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்த ஊதிய உயர்வு மூலம் சுமார் 1.09 லட்சம் அரசு போக்குவரத்து ஊழியர்கள் பயன் அடைவார்கள்.
2. டாஸ்மார்க் ஊழியர்களுக்கு சம்பளம் உயர்வு
டாஸ்மார்க் ஊழியர்களுக்கு மாசம் ரூ. 2000 சம்பள உயர்வு அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த சம்பள உயர்வு ஏப்ரல் 1, 2025 முதல் முன் தேதியிட்டு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இந்த ஊதிய உயர்வு மூலம் சுமார் 23,629 ஊழியர்கள் பயனடைவார்கள். அனைத்து பணியாளர்களுக்கும் ரூ.1000 அடிப்படை சம்பள உயர்வு இருக்கு. வேலைத்திறன் அடிப்படையில கூடுதலாக ரூ. 1000 வழங்கப்படும். மதுபாட்டிகளுக்கு கூடுதல் விலை வசூலித்த ஊழியர்களுக்கு ரூ. 1000 மட்டும் ஊதிய உயர்வு கிடைக்கும்.
3. ஓய்வூதியதாரர்கள் பொங்கல் பரிசுத்தொகை உயர்வு
ஓய்வூதியதாரர்களுக்கு நிறைய புதிய நலத்ததிட்டங்கள் அறிவிக்கப்பட்டு இருக்கிறது. ஓய்வூதியதாரர்களுக்கு ஆண்டுதோறும் வழங்கப்படும் பொங்கல் பரிசுத்தொகை ரூ. 500-ல் இருந்து ரூ. 1000 ஆக உயர்த்தப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டது.
4. ஓய்வூதியதாரர்கள் பண்டைகால முன்பணம் அதிகரிப்பு
அதேபோல பண்டைகால முன்பணம் ரூ. 4000 -ல் இருந்து ரூ. 6,000 ஆக உயர்த்தப்பட்டு உள்ளது என தமிழக அரசு அறிவித்துள்ளது. இதன்மூலம் சுமார் 52,000 ஓய்வூதியதாரர்கள் பயனடைவார்கள்.
5. பெண்களுக்கான மகப்பேறு விடுப்பில் மாற்றம்
இனி தகுதிக்காண் பருவத்திலும் (Probation Period) மகப்பேறு விடுப்பு கணக்கில் எடுத்து கொள்ளப்படும். இதனால் பணியாளர்களின் பதவி உயர்வு தடை பிரச்சனையை நீங்கும் மற்றும் பணிமூப்பினை பாதுகாக்கும். தகுதிக்காண் பருவ மகப்பேறு விடுப்பு குறித்து மே 29, 2025 தமிழக அரசு அறிவித்தது.
6. அரசு ஊழியர்களுக்கு இலவச ஆயுள் மற்றும் விபத்து காப்பீடு
தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கு இலவச ஆயுள் மற்றும் விபத்து காப்பீடுகளை வழங்குவதற்காக பல பேங்க் கூட புரிந்துணர்வு (MoU) ஒப்பந்தம் போடப்பட்டு உள்ளது. இந்தியாவில் அரசு ஊழியர்களுக்கு முதல் முறையா இலவச காப்பீடு திட்டம் நடைமுறைக்கு வருகிறது என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கூறியிருந்தார். மேலும் தமிழ்நாடு அரசின் அனைத்துப் பணியாளர்களும் இந்த திட்டத்தின் கீழ் பயனடைவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
7. அரசு ஊழியர்களுக்கு அகவிலைபடி (DA) 2 சதவீதம் உயர்வு
மத்திய அரசைத் தொடர்ந்து, தமிழக அரசும் அகவிலைபடி உயர்வை 2 சதவீதம் உயர்த்தி இருக்கிறது. இந்த அகவிலைப்படி உயர்வால் சுமார் 16 லட்சம் தமிழக அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்கள் பயனடைவார்கள்.
8. அரசு ஊழியர்களுக்கு பண்டிகை கால முன்பணம்
தமிழக அரசு ஊழியர்களுக்கு மற்றும் ஆசிரியர்களுக்கான பண்டிகை கால முன்பணம் அதிகரிக்கப்பட்டு உள்ளது. அதாவது ரூ. 10,000-ல் இருந்து ரூ. 20,000 ஆக உயர்த்தப்பட்டது. இதன்மூலம் தமிழக அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்கள் பயனடைவார்கள்.
9. கல்வி முன்பணம் உயர்வு.
தமிழக அரசு ஊழியர்களுக்கான கல்வி முன்பணம் (Education Advance) உயர்த்தப்பட்டு இருக்கிறது. அதாவது குழந்தைகளின் உயர்கல்விக்காக பெறும் கல்விக் கடனுக்கான உச்சவரம்பை தமிழக அரசு உயர்த்தியுள்ளது. முதுகலை படிப்புகளுக்கு ரூ. 1.25 லட்சத்திலிருந்து ரூ. 1.50 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. அதேபோல டிப்ளோமா, தொழில் கல்விக்கு முன்பணம் ரூ. 75,000-ல் இருந்து ரூ. 1 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. அதேபோல கலை, அறிவியல், பாலிடெக்னிக் படிப்புகளுக்கு முன்பணம் ரூ.50,000 ஆக அதிகரிக்கப்பட்டு உள்ளது.
10. திருமண முன்பணம் வழங்கும் திட்டம்
தமிழக அரசு ஊழியர்களுக்கு (தங்கள் திருமணம் அல்லது மகன்/மகள் திருமணம்) திருமண முன்பணம் வழங்கும் திட்டம் நடைமுறையில் இருக்கிறது. இதன்மூலம் திருமண ஏற்பாடுகளுக்கான நிதித் தேவைகளைப் பூர்த்தி செய்துக்கொள்ளலாம். அரசு ஊழியர்களுக்கு திருமணச் செலவுகளுக்காக வழகப்படும் முன்பணத்தின் அளவு ரூபாய் 5 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த உயர்வு குறித்த அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
தமிழ்நாடு உள்ளூர் செய்திகள் மேலும் படிக்க..
மேலும் படிக்க - PG மாணவர்களுக்கு சூப்பர் வாய்ப்பு... தமிழ்நாடு அரசின் அறிவிப்பு இதோ!
மேலும் படிக்க - கலைஞர் மகளிர் உரிமைத் தொகை : ஜாக்பாட்! இந்த குடும்பங்களுக்கு ரூ.2000 கிடைக்கும்..!!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









