)
தமிழ்நாட்டில் பள்ளி மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த மாநிலத்திற்கான புதிய கல்வி கொள்கையை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று வெளியிட்டார். இதன் முக்கிய அம்சமாக, இந்த ஆண்டு முதலே 11 ஆம் வகுப்புக்கான பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுவதாக அதிரடியாக அறிவிக்கப்பட்டுள்ளது.
11ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து; 8ஆம் வகுப்பு வரை ஆல் பாஸ்#zeetamilnews #dmk #anbilmaheshpoyyamozhi #publicexamcancelled #stateeducationpolicy #breakingnewshttps://t.co/fARkdqlHXz pic.twitter.com/HL6EaiZ98I
— Zee Tamil News (@ZeeTamilNews) August 8, 2025
புதிய மாநில கல்விக் கொள்கை
மத்திய அரசின் தேசிய கல்வி கொள்கையை ஏற்க மறுத்த தமிழக அரசு, மாநிலத்திற்கென ஒரு தனித்துவமான கல்விக் கொள்கையை உருவாக்க 2022 ஆம் ஆண்டு ஓய்வுபெற்ற டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி முருகேசன் தலைமையில் 14 பேர் கொண்ட ஒரு நிபுணர் குழுவை அமைத்தது. இந்த குழு, துணைவேந்தர்கள், கல்வியாளர்கள், ஆசிரியர்கள், தனியார் பள்ளி நிர்வாகிகள் மற்றும் பெற்றோர் என பல்வேறு தரப்பினரிடம் கருத்துக்களை கேட்டறிந்து, 650 பக்கங்கள் கொண்ட வரைவு அறிக்கையை தயாரித்தது. அந்த அறிக்கை கடந்த 2024 ஆம் ஆண்டு ஜூலை 1 ஆம் தேதி அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டது.
முக்கிய அறிவிப்புகள்
சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் இன்று நடைபெற்ற நிகழ்வில், பள்ளிக்கல்வித் துறைக்கான மாநில கல்வி கொள்கையின் முதற்கட்ட அம்சங்களை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டார். அதன் முக்கிய விவரங்கள்
இந்த அறிவிப்புகள், மாணவர்கள் மற்றும் கல்வியாளர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ