Krishnagiri News : கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை வட்டம், சென்னானூர் அகழாய்வு மையத்தை மாவட்ட ஆட்சித்தலைவர் நேரில் பார்வையிட்டார். இதன்பிறகு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்ததாவது: புதிய கற்கால மக்கள் வேளாண்மை மேற்கொள்வதற்கும் ஆடு மாடுகளை வளர்ப்பதற்கும் ஏற்ற இடமாக அமைந்துள்ளதால் தென்பெண்ணையாற்றின் கிளையாறான பாம்பாறு பாயும் சென்னானூரில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை 2024- 2025 ஆண்டில் அகழாய்வு மேற்கொண்டது. மலையின் மேற்கு பக்க அடிவாரத்தில் அகழாய்வு குழிகள் தோண்டப்பட்டன.
அகழாய்வு குழிகளின் மண்ணடுக்குகளில் கீழே நுண்கற்கால கற்கருவிகள் பெருமளவில் கிடைக்கப் பெற்றுள்ளன. அதற்கு மேலே புதிய கற்கால பண்பாடு நிலவியதற்கான சான்றுகளாக புதிய கற்கால மெருகேற்றப்பட்ட கற்கோடாரிகள் கிடைக்கப்பெற்றுள்ளன. இக்கருவிகள் வேட்டையாடுவதற்கும் மரங்களை வெட்டுவதற்கும், குழிகள் தோண்டுவதற்கும், நிலத்தினை உழுவதற்கு ஏற் கலப்பையாகவும் பயன்பட்டிருக்கலாம். மேலும் புதிய கற்காலத்தில் பயன்படுத்திய கையால் வனையப்பட்ட பானைகள், தேய்த்து வழவழப்பாக்கப்பட்ட சிவப்பு, பழுப்பு மற்றும் ஒரு சில சாம்பல் நிற பானை ஓடுகள் கிடைக்கப் பெற்றுள்ளது.
இதற்கு மேல் உள்ள அடுக்கில் இரும்புக்கால கலாச்சாரத்தின் கூறுகளான கருப்பு- சிவப்பு மட்பாண்டகளும் இரும்புக் கருவிகளும் கிடைத்துள்ளன. மிக முக்கியமாக இரும்பிலான ஏர் கலப்பையின் கொழுமுனை இந்தியாவிலேயே முதன்முறையாக இங்குக் கிடைத்துள்ளது. இதனைத் தொடர்ந்து மேல் மண்ணடுக்கில் "ஊகூடர், (சா)த்தான் மற்றும் பேசு அந்(தை) என்று எழுதப்பட்ட 3 கருப்பு - சிவப்பு பானையோட்டு தமிழி எழுத்துப் பொறிப்புகள் கிடைத்தது. இம்மக்கள் வரலாற்றுக் காலத்தில் காலடி எடுத்து வைத்ததற்கான உறுதியான சான்றாகும். சிறப்பு வாய்ந்த இச் சென்னானூர் தமிழக வரலாற்றில் புதிய கற்கால அகழாய்வுக்கென தனி இடத்தைப் பெற்றுள்ளது. இம்மாவட்டத்திற்கு பெருமை சேர்ப்பதாகும் என மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. ச.தினேஷ் குமார் இ.ஆ.ப. அவர்கள் தெரிவித்தார்.
முன்னதாக மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் கிருஷ்ணகிரி வரலாற்று ஆய்வு மற்றும் ஆவணப்படுத்தும் குழுவின் வேண்டுகோளினை ஏற்று சென்னானூர் அகழாய்வு தளம் குறித்த தகவல் பலகை திறந்து வைத்தார். தொடர்ந்து சென்னானூர் புதரில் இருந்த சுமார் 1200 ஆண்டுகளுக்கு முற்பட்ட விஷ்ணு கற்சிற்பத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் அருக்காட்சியகத்துக்கு வழங்கினார்.
மேலும் படிங்க: தமிழக அரசின் அதிரடி திட்டம்! ரூ. 200 செலவில் வீடுகளுக்கு இணைய சேவை!
மேலும் படிங்க: அரசு பள்ளி மாணவர்களுக்கு குட்நியூஸ், ஐஐடி மெட்ராஸ்-ல் படிக்கும் வாய்ப்பு..!!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









