புத்தாண்டை முன்னிட்டு இரவு குடிபோதையில் வாகனம் ஓட்டியதாக 147 வழக்குகள் பதிவு
சென்னையில் தடையை மீறி ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டத்தில் ஈடுபட்டதாக 269 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது.
2022ம் ஆண்டு புத்தாண்டை முன்னிட்டு, சென்னை பெருநகர காவல்துறையினரால் டிசம்பர் 31 2021 அன்று இரவு 09.00 மணி முதல் 01 ஜனவரி 2022 அதிகாலை வரையில் மெரினா கடற்கரை காமராஜர் சாலை மற்றும் பெசன்ட்நகர் எலியட்ஸ் கடற்கரை ஒட்டிய சாலைகளில் வாகனங்கள் செல்ல தடைவிதிக்கப்பட்டது,. அத்துடன் அங்கு சில கட்டுப்பாடுகளும் அறிவிக்கப்பட்டது. மேலும், சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சங்கர் ஜிவால் உத்தரவின்பேரில், சென்னை பெருநகர காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்கள் அடங்கிய காவல் குழுவினர் மூலம் சென்னையில் முக்கிய சாலைகள் மற்றும் சந்திப்புகளில் தற்காலிக தடுப்புகள் மற்றும் சோதனைச்சாவடிகள் அமைக்கப்பட்டு, வாகனத் தணிக்கைகள் மற்றும் சிறப்பு ரோந்து பணிகள் மேற்க்கொள்ளப்பட்டது.
சென்னை பெருநகர காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் மேற்கண்ட தீவிர பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதால் கொடுங்குற்றங்கள் மற்றும் அடிதடி வழக்குகள் என ஏதும் நடைபெறவில்லை. மேலும், போக்குவரத்து காவல் துறையினரின் அதிரடி நடவடிக்கைகளால் இளைஞர்களால் மேற்கொள்ளப்படும் பைக் ரேஸ் மற்றும் குடிபோதையில் வாகனங்கள் ஓட்டுவது வெகுவாக மட்டுப்படுத்தப்பட்டது.
இது தொடர்பாக 35 கார்கள், 103 இருசக்கர வாகனங்கள், 02 ஆட்டோக்கள் மற்றும் 7 இதர வாகனங்கள் என மொத்தம் 147 வாகனங்களை குடிபோதையில் ஓட்டியது தொடர்பாக வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதிவேகமாக வாகனம் ஓட்டுதல், தலைகவசம் இல்லாமல் வாகனம் ஓட்டியது உட்பட மோட்டார் சட்டத்தின் கீழ் 269 வழக்குகள் பதிவு செய்யப்பட்டது.
இந்த சீரிய பணியினால் இந்த ஆண்டு ஒரே ஒரு வாகன சாலை விபத்தில் ஆகாஷ் என்பவர் அவரது நண்பர் நரேஷ் என்பவருடன் நள்ளிரவு டியோ இருசக்கர வாகனத்தில் ஈஞ்சம்பாக்கம் பேருந்து நிறுத்தம் அருகே சென்றபோது, நிலைதடுமாறி சென்டர் மீடியனில் மோதியதில் விபத்து ஏற்பட்டு ஆகாஷ் சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டார். காயமடைந்த நரேஷ் என்பவர் இராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இது குறித்து அடையாறு போக்குவரத்து புலனாய்வு பிரிவில் வழக்குப் பதிவு செய்து புலன் விசாரணை நடைபெற்று வருகிறது. இது தவிர 2 வெவ்வேறு இடங்களில் இருசக்கர வாகனங்களில் சென்றபோது விபத்து ஏற்பட்டு வாகனங்கள் மட்டும் சேமடைந்தது தொடர்பாக 2 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டுகளை ஒப்பிடுகையில் இந்த வருடம் புத்தாண்டில் எந்த விதமான அசம்பாவிதங்களும் நடைபெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ALSO READ | MARS TRANSIT: இந்த 5 ராசிக்காரர்களின் வாழ்க்கையில் அதிர்ஷ்ட அலை வீசப்போகிறது
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.
Android Link: https://bit.ly/3hDyh4G
Apple Link: https://apple.co/3loQYeR