)
Tamil Nadu Latest Announcements: அடுத்த வருடம் சட்டசபை தேர்தல் நடக்க இருப்பதால், அரசியல் கட்சிகள் தேர்தலுக்கான முன்னேற்பாடுகளில் கவனம் செலுத்தி வருகிறது. ஆளும் கட்சியான திமுக அரசு மீண்டும் ஆட்சி அமைக்கும் நோக்கில் பல அதிரடி அறிவிப்புக்களை அறிவித்து வருகிறது. அந்த வரிசையில் ஜூலை 28, 2025 நிலவரப்படி தமிழக அரசு வெளியிட்டுள்ள 15 முக்கியமான அறிவிப்புகள் என்னென்ன என்பதை பற்றி அறிந்துக்கொள்ளுவோம்.
தமிழ்நாட்டில் பெரும் வரவேற்பை பெற்றுள்ள உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தை போலவே ஆகஸ்ட் இரண்டாம் தேதி 'நலம் காக்கும் ஸ்டாலின்' என்ற திட்டத்தையும் முதலமைச்சர் தொடங்கி வைக்கிறார். இதுவரை தொடங்கப்பட்ட மருத்துவ திட்டங்களிலேயே இந்த திட்டம் மிக சிறப்பு வாய்ந்ததாக இருக்கும் எனவும், சென்னையில் மட்டும் 400 இடங்களில் திட்டமிடப்பட்டுள்ளது என தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் கூறியுள்ளார்.
ரூ.37 கோடி மொத்த பரிசு தொகையுடன் நடைபெறவுள்ள முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிகளுக்கு ஆகஸ்ட் 16 ஆம் தேதி வரை https://sdat.tn.gov.in அல்லது https://cmtrophy.sdat.in என்ற இணையத்தளத்தில் முன்பதிவு செய்யலாம் என தமிழ்நாடு தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் அறிவித்துள்ளது. இந்தப் போட்டிகள் ஆகஸ்ட் 22, 2025 முதல் செப்டம்பர் 12, 2025 வரை நடைபெறவுள்ளன. இப்போட்டிகள் குறித்த மேலும் விவரங்கள் அறிந்துக்கொள்ளலா 7401703459 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்புகொள்ளலாம் எனவும் கூறப்பட்டு உள்ளது.
நீலகிரி, கோவை, தேனி, தென்காசி மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் இன்று முதல் ஏழு நாட்கள் ஓரிரு இடங்களில் மிதமான மலைக்கு வாய்ப்புள்ளது என்றும், அடுத்த மூன்று நாட்கள் 50 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் எனவும் வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.சென்னையில் இரண்டு நாட்கள் ஒரு சில இடங்களில் மிதமான மலைக்கு வாய்ப்புள்ளது.
குரூப் 2A பதவிக்கான சான்றிதழ் சரிபார்ப்பு கலந்தாய்வு இன்று தொடக்கம். சென்னை பிராடுவேயில் உள்ள டிஎன்பிஎசி அலுவலகத்தில் சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வு நடக்கிறது. வரும் ஒன்றாம் தேதி வரை இந்த சான்றிதழ் சரிபார்ப்பு கலந்தாய்வு நடைபெறுகிறது. ஒருவேளை கலந்து கொள்ள தவறினால் மறுவாய்ப்பு அளிக்கப்படாது என்று டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.
தமிழகம் முழுவதும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் மாணவர்களுக்கான கலை திருவிழா போட்டிகள் ஆகஸ்ட் 4 முதல் நவம்பர் 28 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது என பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது. அதனை தொடர்ந்து குறுவட்ட அளவில் ஆகஸ்ட் 25 முதல் 29 வட்டார அளவில் ஆகஸ்ட் 13 முதல் 17 மாவட்ட அளவில் ஆகஸ்ட் 27 முதல் 31 மாநில அளவில் நவம்பர் 24 முதல் 28 போட்டிகள் நடைபெறும் எனவும் மாநில அளவிலான போட்டிகளில் வெற்றி பெறும் மாணவ மாணவிகளுக்கு கலையரசன் கலையரசி விழுதுகள் வழங்கப்படும் எனவும், மேலும் தரவரிசை பட்டியலில் முதன்மை இடம் பெறும் 25 மாணவர்கள் வெளிநாடுகளுக்கு கல்வி சுற்றுலா அழைத்து செல்லப்படுவார்கள் எனவும் கூறப்பட்டு உள்ளது.
12 ஆம் வகுப்பு துணை தேர்வு எழுதிய மாணவர்கள் மதிப்பெண் பட்டியலை பதிவிறக்கம் செய்துக்கொள்ளலாம் என அறிவிப்பு. www.dge.tn.gov.in in என்ற இணையதளத்தில் 12 ஆம் வகுப்பு துணை தேர்வு மதிப்பெண் பட்டியலை பதிவிறக்கம் செய்யலாம் எனவும், விடைத்தாள் நகல் பெறும் விரும்புவோர் இன்று ஜூலை 28 மற்றும் ஜூலை 29 நாட்களில் சம்பந்தப்பட்ட மாவட்ட அலுவலகத்தை அணுகி பெறலாம் எனவும், ஒவ்வொரு பாடத்துக்கும் விடைத்தாள் நகல் பெற 275 கட்டணம் செலுத்தி பதிவு செய்ய வேண்டும எனவும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது. விடைத்தாள் நகல் கோரும் தேர்வர்கள் மட்டுமே மறுக்கூட்டல் மறு மதிப்பீட்டுக்கு விண்ணப்பிக்க இயலும் எனவும் கூறப்பட்டுள்ளது.
காயமடைந்து நோய்வாய்பட்ட தெருநாய்களை கருணை கொலை செய்ய தமிழ்நாடு அரசு அனுமதி அளித்துள்ளது. தெருநாய்களால் ரேபிஸ் உள்ளிட்ட நோய் பாதிப்புகள் ஏற்படும் நிலையில், கால்நடைத்துறை அரசாணையை வெளியிட்டுள்ளது. பதிவு செய்யப்பட்ட கால்நடை மருத்துவர்கள் மூலமாக கருணை கொலை செய்யப்பட வேண்டும் எனவும், கருணை கொலை செய்யப்படும் தெரு நாய்களை முறையாக அடக்கம் செய்ய வேண்டும் என உத்தரவு. மேலும் கருணை கொலை செய்யப்படும் நாய்கள் குறித்து ஆவணங்களும் பராமரிக்கப்பட வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
சென்னையில் சொந்தமாக வலையொளி (YouTube) சேனலை உருவாக்குதல் என்ற தலைப்பில் மூன்று நாள் பயிற்சி முகாம் தமிழக அரசு சார்பில் நடைபெற உள்ளது. நாளை 29 ஆம் தேதி முதல் 31 ஆம் தேதி வரை, காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை தமிழக அரசின் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் வளாகத்தில் நடைபெற உள்ளது.
பணிநிரவல் கலந்தாய்வில் மாறுதல் செய்யப்பட்ட ஆசிரியர்களின் விவரங்களை அனுப்பி வைக்குமாறு தொடக்க கல்வி இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது.
சட்ட விதிகளை பின்பற்றியே கோயில் நிலத்தில் கோயில் நிதியில் கட்டுமானங்கள் என்று அறநிலையத்துறை தெரிவித்துள்ளது. இதுகுறித்து இந்து சமய அறநிலைத்ததுறை அதிகாரிகள் சென்னை உயர்நீதிமன்றத்தில் விளக்கம் அளித்தும் இருக்கிறார்கள். அப்பொழுது கோயில் நிலங்களில் கட்டுமானம் மேற்கொள்ள கோயில் உபரி நிதியை பயன்படுத்தக் கூடாது என்று சட்டத்தில் இல்லை என தமிழக அரசு அறநிலைத்ததுறை தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் கோவில், மசூதி, தேவாலயம் என பொது வழிபாட்டு தளங்கள் அனைத்துக்குமே ஒரே மாதிரியான மின்கட்டணமே நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. கடந்த 2024 ஆம் ஆண்டு கட்டண விதியின் படி கோவில், மசூதி, தேவாலயம் உள்ளிட்ட பொது வழிபாட்டு தளங்களுக்கு ஒரு யூனிட்டுக்கு ரூ.6.20 காசு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதில் முதல் 120 யூனிட்டுக்கு அரசு மானியமாக ஒரு யூனிட்டுக்கு ரூ.3.13 காசு தரப்படுகிறது. எனவே பொய்யான தகவல் மற்றும் வதந்தியை பரப்ப வேண்டாம் எனவும் தமிழக அரசு கேட்டுக்கொண்டு உள்ளது.
அரசு பள்ளி மாணவர்களுக்கு தற்காப்பு கலை பயிற்சி வழங்குவதற்காக 15 கோடியே 48 லட்ச ரூபாயை பள்ளி கல்வித்துறை ஒதுக்கீடு செய்துள்ளது. இந்த நிதி மூலம் அரசு பள்ளி மாணவிகளுக்கு கராத்தே, ஜூடோ, சிலம்பம் உட்பட பல்வேறு பயிற்சிகளும் வழங்கப்பட வேண்டும். மாணவிகளுக்கு கையில் எளிதில் கிடைக்கக்கூடிய பென்சில், பேனா போன்ற பொருட்களை கொண்டு தற்காத்து கொள்வது தொடர்பாக பயிற்சிகளும் கற்று தர வேண்டும் எனவும் பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
எம்பிபிஎஸ், பிடிஎஸ் மருத்துவ படிப்புக்கான தரைவரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. மருத்துவ படிப்புக்கான அரசு ஒதுக்கீடு இடங்களுக்கான தரவரிசை பட்டியலை தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் வெளியிட்டார். தமிழகத்தில் மருத்துவ படிப்புக்கான முதல் கட்ட கலந்தாய்வு ஜூலை 30 ஆம் தேதி தொடங்குகிறது.
அரசு பள்ளிகளில் காலியாக உள்ள முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் உடற்கல்வி இயக்குநர் நிலை-1, மற்றும் கணினி பயிற்றுநர் நிலை-1 ஆகிய பணியிடங்களை நிரப்புவதற்கான போட்டித் தேர்வு குறித்த அறிவிப்பு ஆசிரியர் தேர்வு வாரிய இணையத்தளத்தில் கடந்த 10 ஆம் தேதி வெளியிடப்பட்டது. இதற்கான போட்டி தேர்வுகள் செப்டம்பர் 28 ஆம் தேதி நடத்தப்படும் எனவும் அறிவிக்கப்பட்டு உள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்திற்கு ஆகஸ்ட் 5 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியரான இளம்பகவத் உத்தரவிட்டிருக்கிறார். தூத்துக்குடி பனிமய மாதா ஆலய பெருவிழாவையொட்டி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டு உ ள்ளது. உள்ளூர் விடுமுறையை ஈடு செய்யும் வகையில் ஆகஸ்ட் 9 ஆம் தேதி பணி நாளாக செயல்படும் எனவும் ஆட்சியர் அறிவித்திருக்கிறார்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ