Zee Exclusive, Hosur Illegal Land Registration: கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் மாநகராட்சியின் 9வது வார்டுக்கு உட்பட்ட பாரதியார் நகரில் மேய்ச்சல் புறம்போக்கு என்னும் அரசுக்கு சொந்தமான நிலம் 8.60 ஏக்கர் உள்ளது.
இந்நிலையில், இந்த இடத்தில் மாநகராட்சி உயர்நிலைப்பள்ளியும், நகர்ப்புற அரசு ஆரம்ப சுகாதார நிலையம் செயல்பட்டு வருவதுடன் சலவை தொழிலாளர்கள் 100 நபர்களுக்கு இலவச வீட்டுமனை பட்டாக்கள் வழங்கி அனைவரும் வீடுகள் கட்டி வசித்து வருகின்றனர்.
போலி ஆவணங்கள் மூலம் பத்திரப்பதிவு
இந்நிலையில், 150 கோடி ரூபாய் மதிப்பிலான இந்த நிலத்தை ஒசூர், தேன்கனிக்கோட்டை பகுதியை சேர்ந்த ரவிக்குமார்(55), சந்திரசேகர்(47), விஜயகுமார்(48) உள்ளிட்ட 15 பேர் போலியான ஆவணங்களை காண்பித்து குறிப்பாக 1970ஆம் ஆண்டு ஆகஸ்ட் 26ஆம் தேதி அன்றைய தேதியில் மாவட்ட ஆட்சியர் கையொப்பமிட்டு உத்தரவிட்டதாக காண்பிக்கப்பட்டுள்ளது.
மேலும் பிறப்பு - இறப்பு வாரிசு சான்றிதழ் உள்ளிட்டவை போலியாக தயாரித்து அரசு நிலத்தை விற்க முறைகேடாக பெங்களூரை சேர்ந்த சத்தியன் (51) என்பவருக்கு GPA என அழைக்கப்படும் பொது அதிகார பத்திரப் பதிவை கடந்த வாரம் 5ஆம் தேதி ஒசூரில் உள்ள சார் பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
எப்படி பத்திரப்பதிவு செய்யப்பட்டது?
பட்டா நிலத்தை பத்திரப்பதிவு செய்ய சென்றால் போதிய ஆவணங்களை கேட்கும் அதிகாரிகள், உண்மை தன்மைக்கான சான்றிதழ்களை பெற்று வருமாறு வருவாய்த்துறையினரிடம் அனுப்பி அலைக்கழிப்பதுடன் நேரில் பார்வையிட வேண்டுமென கறார் காட்டுவது காலங்காலமாக கடைப்பிடிக்கப்பட்டு வரும் எழுதப்படாத விதியாக உள்ளது.
இந்நிலையில், 150 கோடி ரூபாய் மதிப்பிலான நிலத்தில் அரசுப்பள்ளி, அரசு மருத்துவமனை மட்டுமல்லாமல் 100 வீடுகளில் பொதுமக்கள் வசித்து வருகின்றனர். அரசு நிலம் என்பதால் அங்கு நிலத்தின் மதிப்புகூட தெரியாத சூழ்நிலையில் எவ்வித விசாரணையோ - ஆவணங்களையோ முழுமையாக ஆராயாமல் எப்படி பத்திரப்பதிவு நடந்தது என்கிற கேள்வி அங்கு வசிக்கும் மக்களிடையே எழுந்துள்ளது.
மாவட்ட ஆட்சியரிடம் புகார்
ஒசூர் பகுதியில் ரியல் எஸ்டேட் கொடிக்கட்டி பறக்கும் நிலையில் ஏழை எளியோர் வீட்டுமனை பத்திரப்பதிவுக்கு சென்றால் அதிகாரம் காட்டும் அதிகாரிகள், முறைகேடான நிலங்களுக்கு பணம் கைமாறினால் எந்த தடையுமின்றி பத்திரப்பதிவுகள் நடப்பதாக புகார் எழுந்துள்ளது.
புகாருக்கு உள்ளான அரசு நிலத்துக்கு சார் பதிவாளர் ஜெயசிலராணி என்பவர்தான் பத்திரப்பதிவை செய்துள்ளார் என கூறப்படுகிறது. இந்நிலையில், இதில் சம்பந்தப்பட்டவர்கள் யார்? போலி ஆவணங்கள் தயாரித்தது எப்படி? அதிகாரிகள் ஆய்வு செய்யாதது ஏன்? என்கிற பல கேள்விகள் எழுந்தது. இதுகுறித்த புகாரை ஒசூர் சார் ஆட்சியர் பிரியங்கா கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டதாக கூறப்படும் நிலையில், இது தொடர்பாக விசாரணை நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது.
தமிழ்நாடு அரசு தலையிடுமா?
ஆனால், அது எந்தளவுக்கு உண்மை என்பதை போகப் போகத்தான் தெரியவரும். இந்நிலையில் ஒசூரில் நாளுக்குநாள் அதிகரிக்கும் போலி ஆவண பத்திரப்பதிவுகளை தடுக்கும் விதமாக தீவிர நடவடிக்கை தேவை என்கிற கோரிக்கை பாதிக்கப்பட்ட மக்களிடையே எழுந்துள்ளது.
இச்சம்பவத்தில் தமிழ்நாடு அரசு உடனடியாக தலையிட்டு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பதே பாதிக்கப்பட்ட அப்பகுதி மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. அந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் அரசு உடனடியாக தலையிட்டு நடவடிக்கை எடுக்குமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்...
மேலும் படிக்க | கடந்த 6 வருடமாக பொள்ளாச்சி வழக்கு கடந்து வந்த பாதை! முழு விவரம்!
மேலும் படிக்க | இந்த ஊர்களில் அடுத்த சில நாட்களுக்கு கனமழை இருக்கும் - வானிலை மையம்!
மேலும் படிக்க | பொள்ளாச்சி பாலியல் வழக்கு! தமிழக அரசுக்கு விஜய் வைத்த கோரிக்கை!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ