)
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த புஞ்சை புளியம்பட்டி பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமிக்கு கடந்த 15-ம் தேதி உறவுக்கார இளைஞரான சக்திவேல் என்பவருடன் திருமணம் நடந்துள்ளது. திருமணம் ஆன அடுத்த நாள் சிறுமி வயிற்று வலியால் துடித்துள்ளார். இதனால் அவரை குடும்பத்தினர் கோவை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால் சிகிச்சை பலனின்றி சிறுமி 17-ம் தேதி உயிரிழந்தார். இதனையடுத்து சிறுமியின் தாய் புஞ்சை புளியம்பட்டி காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
இதுகுறித்து புஞ்சைபுளியம்பட்டி காவல்துறையினர் சிறுமியின் கணவர் சக்திவேலை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது தான் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.
சிறுமி ஏற்கனவே கர்ப்பமாக இருந்துள்ளார். இதனால் சிறுமியின் கர்ப்பத்தை கலைக்க அவருக்கு மாத்திரை கொடுக்கப்பட்டுள்ளது. இதனால் சிறுமிக்கு அதிக அளவு ரத்தப்போக்கு ஏற்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக மருத்துவமனைக்கு அழைத்துச்செல்லப்பட்ட சிறுமி உயிரிழந்துள்ளார். சிறுமியின் வயிற்றில் இருந்த சிசுவை வீட்டின் அருகே புதைத்ததாக கணவர் கொடுத்த வாக்குமூலத்தை அடுத்து அங்கு சென்ற போலீசார், மருத்துவக் குழுவின் உதவியுடன் தோண்டி எடுத்தனர். 3 மாத கருவை ஆய்வுக்காக மருத்துவர்கள் கொண்டு சென்றுள்ளனர்.
மேலும் இது குறித்து செய்தி சேகரிக்க சென்ற செய்தியாளர்களை புஞ்சைபுளியம்பட்டி காவல் துறையினர் அனுமதிக்காமல் அலட்சியம் செய்தது மேலும் சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது. அதோடு சிறுமிக்கு நடந்தது என்ன? கர்ப்பத்தை கலைக்க மாத்திரை வாங்கிக்கொடுத்தது யார்? என பல்வேறி கோணங்களில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ