)
Aadi Amavasya 2025 Full Details In Tamil: வரும் ஜூலை 24, 2025 அன்று ஆடி அமாவாசை ஆகும். ஆடி அமாவாசை விரத பலன்கள் என்ன?, எத்தனை மணிக்கு தர்ப்பணம் கொடுக்கலாம்?, யார் தர்ப்பணம் கொடுக்க வேண்டும்?, யார் விரதம் இருக்கலாம்? ஆடி அமாவாசை நாளில் செய்யக்கூடியவை மற்றும் செய்யக்கூடாதவை போன்ற விவரங்கள் கீழே தொகுக்கப்பட்டு உள்ளது.
தமிழ் மாதங்களில் ஆன்மிக சிறப்புமிக்க மாதம் என்றால், அது ஆடி மாதம் தான். ஏனென்றால் ஆடி மாதத்தில் தான் ஆடிப்பூரம், ஆடிப் பெருக்கு , வரலட்சுமி விரதம், ஆடி வெள்ளிக்கிழமைகள், ஆடி ஆமாவாசை, ஆடி கிருத்திகை என அதிக ஆன்மிக நாட்கள் வருகிறது. இதனால் தான் ஆடி மாதத்தை அம்மனுக்கு உகந்த மாதம் என்றும், சக்தி மாதம் என்றும் கூறப்படுகிறது.
பல சிறப்பு நாட்களை உள்ளடக்கிய ஆடி மாதத்தில் வரும் அமாவாசை "ஆடி அமாவாசை" என்று அழைக்கப்படுகிறது. இது இந்து தமிழர்களுக்கு மிகவும் புனிதமான நாளாகக் கருதப்படுகிறது. மேலும் ஆடி அமாவாசை அன்று முன்னோர்களை வழிபட வேண்டிய மிக முக்கியமான நாளாகும். இன்றைய நாளில் தர்ப்பணம் மற்றும் பித்ரு பூஜைகள் மேற்கொள்ளப்படுகிறது.
இந்து தமிழர்களை பொறுத்த வரை, ஆண்டு முழுவதும் 12 அமாவாசைகள் வந்தாலும், குறிப்பாக ஆடி அமாவாசை, புரட்டாசி அமாவாசை மற்றும் தை அமாவாசை என இந்த மூன்று அமாவாசைகள் மிக முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.
வரும் ஜூலை 24, 2025 அன்று ஆடி அமாவாசை ஆகும். ஆடி அமாவாசை திதி ஆரம்பிக்கும் நேரம்: ஜூலை 23 ஆம் தேதி புதன்கிழமை நள்ளிரவு 2.28 மணிக்கு தொடங்கி, அமாவாசை திதி முடியும் நாள்: ஜூலை 24 ஆம் தேதி இரவு 12:40 மணிக்கு முடிகின்றது.
மற்ற அமாவாசையை விட ஆடி அமாவாசை சிறப்பு வாய்ந்தது. இந்த நாளில் நாம் இருக்கும் விரதம் அளவில்லாத புண்ணிய பலன்களை அள்ளித் தரக்கூடியது. முன்னோர்களுக்கு அவர்களின் மறைவிற்கு பிறகு செய்ய வேண்டிய பித்துரு கடன் எனப்படும் தர்ப்பணம் அளித்து விரதம் இருந்து அவர்களிடமிருந்து ஆசி பெறுவதற்கும் வேண்டிய வரங்களை பெறுவதற்கும் மிகவும் ஏற்ற நாள் ஆடி அமாவாசை.
ஆடி மாதத்தில் வாழ்ந்து மறைந்து முக்தி பெற்ற முன்னோர்களை நினைத்து வழிபட வேண்டியது அவசியம். இப்படி வழிபடுவதால் நிறைவேறாத ஆசைகள் சாபங்கள் ஆகியவற்றால் பித்துரு லோகத்தில் இருக்கும் முன்னோர்களின் ஆன்மாக்களுக்கு சாந்தி கிடைக்கும். இந்த நாளில் நாம் செய்யும் தர்மங்கள் தர்ப்பணங்கள் தலைமுறை தலைமுறையாக நம்முடைய பாவங்கள் சாபங்கள் நீங்கும்.
ஆடி அமாவாசை நாளில் எல்லும் தண்ணீரும் இறைத்து தர்பையும் அளிப்பது அளவில்லாத புண்ணியத்தை தரும். பித்துரு கடன்களை முறையாக நிறைவேற்றாவிட்டால், பித்துரு தோஷம் வந்து சேரும். பித்துரு தோஷம் இருந்தால், எந்த தெய்வமும் நமக்கு அருள் செய்ய நினைத்தால், அது தடைப்படும், அதனால் தெய்வங்களின் அருள் கிடைக்க வேண்டும் என்றால் பித்துருக்களின் ஆசி நம் முதலில் பெற வேண்டியது அவசியம்.
ஆடி மாதம் வரும் அமாவாசை அன்று மூதாதயர்களை வரவேற்கும் நாள். அமாவாசை அன்று நீர்நிலைகளான கடல், ஆறு, குளம், ஏரி உள்ளிட்ட இடங்களில் முன்னோர்களுக்கு பிடித்த உணவுகளை படைத்தும் திதி தர்ப்பணம் கொடுத்தும் அன்னதானம் கொடுப்பது மிகவும் சிறப்பு.
நீர் நிலைகளுக்கு சென்று தர்ப்பணம் கொடுக்க முடியாதவர்கள் வீட்டிலே தர்ப்பணம் கொடுக்கலாம். இறந்தவர்களின் இறந்த தேதி தெரியாதவர்கள் ஆடி மாதத்தில் வரக்கூடிய அமாவாசை தை அமாவாசை, மகாலாய அமாவாசை தினங்களில் திதி தர்ப்பணம் கொடுப்பது மிகவும் சிறப்பு.
அமாவாசை திதி தர்ப்பணம் கொடுக்க வேண்டிய நாள் வியாழக்கிழமை சூரிய உதயத்திற்கு பிறகு நீங்க தர்ப்பணம் கொடுக்க வேண்டும். வியாழக்கிழமை 7:30 மணிக்கு மேல நீங்க தர்ப்பணம் கொடுக்கலாம்.
ஆடி அமாவாசை விரதம் விருந்தால் கிடைக்கக்கூடிய பலன்கள் என்ன வென்றால், பித்துரு தோஷம் நீங்கும். பசுக்களுக்கு அகத்திக்கீரை வழங்க வேண்டும். பித்துரு தோஷத்தால் தடைப்பட்டிருந்த குலதெய்வத்தின் அருளும் கிடைக்கும். குடும்பத்தில் அனைவருக்கும் ஆரோக்கியம் தருவதுடன் நிதி பிரச்சனையையும் தீர்க்கும்.
அன்னதானம் வழங்கலாம். காக்கைக்கு உணவு அளிக்கலாம். இரவு சாப்பிடும் பொழுது ஒரு கைப்பிடி அன்னம் முதலில் எடுத்து சாப்பிட வேண்டும். கிழக்கு திசை பார்த்தவாறு அமர்ந்துதான் தர்ப்பணம் செய்ய வேண்டும்.
கோலம் போடக்கூடாது. அசைவம் சாப்பிடக்கூடாது. சமைக்கவும் கூடாது. சுமங்களி பெண்கள் தர்ப்பணம் தரக்கூடாது. சுமங்களி பெண்கள் அமாவாசை நாளில் பட்டினியுடன் சமைக்க கூடாது. ஒருபோதும் அமாவாசை தர்ப்பணம் கொடுக்க கூடாது. முன்னோர்களுக்கு தர்ப்பணம் அளித்து வீட்டில் வழிபாடு செய்து முடிக்கும் வரை வீட்டில் தெய்வ சம்பந்தமான பூஜைகளை ஒத்தி வைப்பது நல்லது. தர்ப்பணம் கொடுக்கும் பொழுது கருப்பு எல்லை மற்றவர்களிடமிருந்து கடன் வாங்க கூடாது. கணவனை இழந்த பெண்கள் மட்டுமே தர்ப்பணம் கொடுக்க வேண்டும். கணவனை இழந்த பெண்களும் அமாவாசை விரதம் இருந்து படையல் போடலாம்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ