Crime News In Tamil: 22 ஆண்டுகால பகையில் வழிநெடுக கொலைகள்தான்....தனிப்பட்ட இரண்டு பேரோட விரோதம் அவங்களையும், அவங்களோட சொந்தக்காரங்களையும் புரட்டிப்போட்டிருக்கு. சினிமாவை மிஞ்சுற அளவுக்கு நடந்த கொலைகள், கொலை வழக்குகள தற்போது பார்க்கலாம்.!
Crime News In Tamil: 22 வருஷ பகை... 21 கொலைகள்
மதுரைய சேந்த ரவுடி சுபாஷ் சந்திரபோஸ் போலீஸோட எண்கவுண்டர்ல சுட்டுக் கொல்லப்பட்டிருக்காரு. க்ளாமர் காளின்ற ஒருத்தரோட கொலை வழக்குல தேடினு இருந்த சுபாஷ் சந்திர போஸ, போலீஸார் சுத்தி வளைச்சி துப்பாக்கியால சுட்டு எண்கவுண்டர் பண்ணிருக்காங்க. இந்த கொலை வழக்குக்கு பின்னாடி 22 வருஷ பகை இருக்கு. பழிக்குப்பழி, ரத்தத்துக்கு ரத்தம்னு நடந்த இந்தப் பகையால இதுவரைக்கும் 21 கொலைங்க நடந்திருக்கு...போலீஸார் சார்பா 2 பேர் எண்கவுண்டர் செய்யப்பட்டிருக்காங்க. சுபாஷ் சந்திர போஸோட சேத்து இப்ப 3 பேர் எண்கவுண்டர் லிஸ்ட்ல வந்திருக்காங்க.
இந்த பகை எப்ப முடியும்னு போலீஸ்க்கும் புரில. இந்தப் பகைல சிக்கி வாழ்க்கைய தொலச்சவங்களுக்கும் புரில. வன்மம், கோவம், குரோதம், வெறி, கெத்துனு மாறி மாறி கொலைங்க நடந்தாலும், இந்த பகை, 20 வருஷத்துக்கு முன்னாடி நடந்த ஒரு கொலைல இருந்து ஆரம்பிச்சிச்சு....
Crime News In Tamil: கிட்டத்தட்ட 22 வருஷத்துக்கு முன்னாடி....
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி தாலுகாவ சேந்த வீ.கே.குருசாமி, ராஜாபாண்டிங்கிற 2 பேர் ஒரே சாதிய சேந்தவங்க. இரண்டு பேரும் சொந்தங்காரளும்கூட. இவங்க குடும்பத்தோட மதுரை மாவட்டம் கீரத்துறை ஏரியாவுல செட்டிலாகி கொஞ்ச நாள்ல இரண்டு பேரும் அரசியலுக்கு போக முடிவெடுக்கிறாங்க. அதுல வி.கே.குருசாமி திமுகல சேர, ராஜாபாண்டி அதிமுகல சேர்ராரு. இரண்டு பேருக்கும் அடிக்கடி தகராறு வர, உள்ளாட்சி தேர்தல் அப்போ கட்சி பிரச்சன மெல்ல மெல்ல தனிப்பட்ட விரோதமா மாறுது.
2003 வது வருஷம். எலக்சன் டைம்ல, ராஜாபாண்டிக்கு எல்லா வகையிலும் உதவியா இருந்த அவரோட அண்ணன் பையன் சின்ன முனீஸ, வி.கே.குருசாமி கேங் சுத்திவளைச்சி அடிச்சி கொலை மிரட்டல் பண்றாங்க. ‘இப்பவே என்ன கொன்னுடுங்க...இல்லனா உங்க எல்லாரோட உயிரையும் நான் எடுத்துருவனு’ சின்ன முனீஸ் சொல்ல, குருசாமி கேங் அங்கேயே சின்ன முனீஸ வெட்டிப்படுகொலை செய்றாங்க.
Crime News In Tamil: ஆரம்பமான பகை
இந்தக் கொலைல இருந்து ஆரம்பிக்குது இருதரப்பு பகை. சின்ன முனீஸ கொலை செஞ்ச வழக்குல, குருசாமி கேங்ல இருந்து வி.கே.குருசாமி, பாம்பு பாண்டி, மாரிமுத்து, ராம மூர்த்தி, வழுக்க முனீஸ், கணுக்கன் முனியசாமி அரெஸ்ட் ஆகி ஜெயிலுக்கு போறாங்க. அப்புறம் ஜாமீன்ல வெளி வராங்க.
நிலைமை கொஞ்ச இயல்பா ஆன உடனே, 2006வது வருஷம் மதுரை மாநகராட்சி கிழக்கு மண்டல தலைவரா வி.கே.குருசாமி தேர்வாகுராரு. இதனால ராஜாபாண்டி கேங் ஆத்திரத்தில இருந்திருக்காங்க. 2008ம் வருஷம் சின்ன முனிஸ கொலை செஞ்ச கேங்கல இருந்த வழுக்கை முனீஸ, ராஜாபாண்டியோட சொந்தக்காரர் சப்பானி முருகன்ன்றவர் வெட்டிப்படுகொலை செய்ராரு. அதில்லாம, கொலை செய்யப்பட்ட சின்ன முனீஸோட தம்பி வெள்ளக்காளி, அண்ணன கொலை செஞ்ச மாரிமுத்து, ராம மூர்த்தி ஆகிய 2 பேர 2008ம் வருஷம் வில்லாபுரம் ஏரியால இரட்டைக் கொலை செய்யுறாரு.
Crime News In Tamil: அடுத்த தலைமுறைக்கு போன பகை
இந்த கேஸ்ல வெள்ளக்காளி, அவரோட ப்ரெண்ட் சகுனி கார்த்திக்...இவங்க ரெண்டு பேரும் ஜெயிலுக்குப் போக, அங்க வேற ஒரு கேஸ்ல வர முத்து இருளாண்டி-ன்றவர் இவங்க ரெண்டு பேருக்கும் ப்ரண்ட் ஆகுறாரு. ஜாமீன்ல வர 3 பேரும், 2013வது வருஷம் வெங்காய மார்க்கெட்ல வி.கே.குருசாமியோட தங்கச்சி புருஷன் பாம்பு பாண்டிய கொலை செய்றாங்க. இதனால ஆத்திரமடைஞ்ச குருசாமி கேங், சகுனி கார்த்தியோட தாய்மாமன் மயில் முருகன அதே வருஷம் கொலை செய்றாங்க. இந்த கேஸ்ல வி.கே.குருசாமியோட பையன் மணி, ஜெயிலுக்குப் போறாரு. இதுக்குப்பழிக்குப் பழியா அடுத்தடுத்து 2 கொலை நடந்தாலும், 2017வது வருஷம் நடந்த கொலை இந்தப் பகைய மேலும் அடுத்த தலைமுறைக்கு கொண்டு போச்சு.
வி.கே.குருசாமியோட பையன் மணி, ராஜபாண்டியோட பையன் தொப்பிலி முனுசாமிய, கமுதிக்கு கடத்தினு போய் பைக்கோட கட்டிவெச்சி பெட்ரோல் ஊத்தி கொலை செஞ்ச சம்பவம் பலரையும் உலுக்கிச்சி. தொப்பிலியோட உடம்ப காட்டுல போட்டுட்டு போனதால சாம்பல் கூட கிடைக்காம போயிருக்கு.
இந்த கொலை வழக்குல மணி, கணுக்கன் ஜெயிலுக்குப் போய் ஜாமீன்ல வெளிய வந்த நிலைல, வெள்ளக்காளி, சகுனி கார்த்திக், ஜெயில்ல இவங்களுக்கு ப்ரெண்ட் ஆன முத்து இருளாண்டி மூணு பேரும் சேந்து வி.கே.குருசாமியோட ஆதரவாளர கவர்மெண்ட் ஆஸ்பிட்டல் குள்ளயே புகுந்து வெட்டிக்கொலை செய்றாங்க.
Crime News In Tamil: குண்டு தான் பிறந்தநாள் பரிசு
இந்தக் கொலைக்கு அப்புறம், வெள்ளக்காளி கேங் மக்கள மிரட்டுறது, கொலை முயற்சினு ஆரம்பிச்சி உச்சக்கட்டமா போலீஸ்க்கே ஆடியோ அனுப்பி மிரட்டியிருக்காங்க. பொறுத்துப்பாத்த போலீஸ், சிக்கந்தர்சாவடில வசமா சிக்குன சகுனி கார்த்திக், முத்து இருளாண்டிய எண்கவுண்டர்ல சுட்டுக்கொலை பண்றாங்க. வெள்ளக்காளி மட்டும் மிஸ் ஆனதால, அவர தேடி வந்தாங்க. இந்த என்கவுண்டருக்கு வி.கே.குருசாமி தான் காரணம்னு வெள்ளக்காளி கேங் திரும்பியும் கொலைல இறங்குச்சு.
இதுக்கு பழியா வி.கே.குருசாமியின் மகளோட புருஷன் பாண்டிய கொலை செய்றாங்க. இதுக்குப்புறம், 2020 ஆம் ஆண்டு ஜூலை 28ந்தேதி வெள்ளகாளியோட பொறந்தநாள். அன்னிக்கி, வி.கே.குருசாமியோட வீட்டுல பெட்ரோல் வெடிகுண்ட தூக்கிப் போட்டுட்டு, ‘இதான் பொறந்த நாள் பரிசு’னு கத்திட்டு ஓட்ன வெள்ளக்காளி ப்ரெண்டுங்க அகோரி கார்த்தி, டோரி மாரி கைதாகுறாங்க.
இரண்டு தரப்பும் மாறி மாறி கொலை செஞ்சிட்டு வந்ததால குருசாமியோட பையன் மணியும், வெள்ளக்காளியும் தேடப்படுற குற்றவாளியா போலீஸால அறிவிக்கப்பட்டாங்க. இதுமாதிரியான சூழல்ல, மதுரை ஐகோட் கேஸ்ல ஆஜராயிட்டு பேங்களூர் போன வி.கே.குருசாமி, பெங்களூர் பனசாவடி ஏரியால கார வழில நிறுத்தி டீ குடிச்சிட்டு இருக்கப்போ, டக்குனு இன்னொரு கார்ல வந்த 5 பேர் பயங்கரமா வி.கே.குருசாமிய வெட்டிட்டு போறாங்க. இதுல ரொம்ப காயமடைஞ்ச குருசாமி வீட்டுல தங்குனபடி வைத்தியம் பாத்துனு வராரு.
Crime News In Tamil: கிளாமர் காளி கொலை
இந்த வழக்குல ஆரம்ப புள்ளியா இருந்த ராஜாபாண்டி வயசாகி இறந்துபோக, பல வருஷத்து பகை முடிஞ்சிதுனு நெனச்சிட்டு இருக்கும்போது, கடந்த 22ம் தேதி நடந்த ஒரு கொலை திரும்பவும் பகைய தொடர வெச்சிருக்கு. வி.கே.குருசாமியோட தங்கச்சி பையன் ‘கிளாமர் காளி’ய வெள்ளக்காளி கேங் கொலை செய்ய, இந்த முறை போலீஸ் தீ்விரமாக இறங்க ஆரம்பிச்சாங்க.
Crime News In Tamil: சுபாஷ் சந்திர போஸ் என்கவுண்டர்
இந்த கொலை கேஸ்ல ரவுடி வெள்ளக்காளியோட அம்மா ஜெயக்கொடியோட சேத்து 7 பேர போலீஸ் ஸ்பெஷல் டீம் அரெஸ்ட் பண்ணாங்க. இதுக்குப்புறம் இரண்டு தரப்புலயும் காம்பரமைஸ் பண்ண முயற்சி பண்ணிட்டு வராங்க. இந்த கேப்ல, கிளாமர் காளி கொலை வழக்குல ரவுடி சுபாஷ் சந்திரபோஸ்ன்றவர ஸ்பெஷல் டீம் தேடினு வந்தப்ப, தெப்பக்குளம் ஏரியால கஞ்சா வித்தினு இருக்கும்போது போலீஸ் சுத்திவளைசிச்சி. அப்போ, போலீஸ அவர் துப்பாக்கிய காட்டி மிரட்ட, தற்காப்புக்கு போலீஸ் சுபாஷ் சந்திர போஸ எண்கவுண்டர்ல சுட்டுக்கொல்றாங்க.
பல வருஷத்து பகை, எப்ப முடியும்னு போலீஸ் காம்பரமைஸ்ல இறங்கியிருக்கிறதால, இனிமே கொலை கிலனு யார்னா இறங்குனா கடுமையா ஏக்சன் எடுப்போம்னு மதுரை போலீஸ் ஸ்டிக்ட்டா சொல்லிட்டாங்க. ரெண்டு பேரோட விரோதம் இன்னும் எத்தன உயிரத்தான் காவு கொடுக்கும்னு ஊர்ல பேசிக்கிட்டாலும், இனி எந்தக் கொலயும் நடக்காதுனு போலீஸ் நம்பிக்கையா சொல்றாங்க....!
மேலும் படிக்க | நித்யானந்தாவுக்கு என்ன ஆச்சு... மரண செய்தி உண்மையா
மேலும் படிக்க | ஆதவ் மீது கொந்தளித்த மச்சான்... மார்டின் மகனுக்கு திடீர் கோபம் ஏன்
மேலும் படிக்க | மகளின் ஆசிரியை விரித்த வலை... தொக்காக சிக்கிய தந்தை - கடைசியில் பெரிய ட்விஸ்ட்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









