Tamil Nadu Government Jobs 2025 : செங்கல்பட்டு மாவட்டத்தில் பள்ளிகளில் செயல்படும் சத்துணவு மையங்களில் காலியாக உள்ள 154 சமையல் உதவியாளர் பணியிடங்கள் நேரடியாக நியமனம் செய்யப்படவுள்ளன. வட்டாரம் வாரியாக நேரடி நியமணம் செய்யப்படவுள்ள சமையல் உதவியாளர் பணியிடங்களின் எண்ணிக்கை அந்தந்த வட்டார அலுவலகங்களில் இனசுழற்சி வாரியாக தகவல் பலகையில் ஒட்டப்படும். மாதிரி விண்ணப்ப படிவங்கள் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகம், அனைத்து வட்டாரங்கள் மற்றும் மாநகராட்சி அலுவலகங்களில் தகவல் பலகையில் ஒட்டப்படும். விண்ணப்பங்களை https//chonggattik.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்துகொள்ளுமாறு தெரிவிக்கப்படுகிறது.
தொகுப்பூதிய விவரம்: தொகுப்பூதியத்தில் பணி நியமனம் செய்யப்படும் சத்துணவு சமையல் உதவியாளர்கள் தொடர்ந்து பன்னிரெண்டு மாத காலம் பணியினை முடித்த பின் அவர்கள் சிறப்பு காலமுறை ஊதியத்தின் கீழ் ஊதியம் பெறுவர். அதன்படி, சத்துணவு சமையல் உதவியாளர் தொகுப்பூதிய மாதமொன்றுக்கு (ஒரு ஆண்டு காலத்திற்கு) ரூ. 3000/- பெறுவர். பன்னிரெண்டு மாத காலத்திற்கு பின் மாதமொன்றுக்கு, ஊதிய நிலை -1 (சிறப்பு காலமுறை ஊதியம் Level of Pay 3000- 9000) என்ற விகிதம் வழங்கப்படும் இப்பணிக்கு 21 வயது முதல் 40 வயதுடைய பெண்கள் மட்டுமே விண்ணப்பிக்கலாம். வயது நிர்ணயம் அறிவிப்பு தேதியினை அடிப்படையாகக் கொண்டு கணக்கிடப்படும்.
வயது வரம்பு
1. 21 முதல் 40 வரை (பொது மற்றும் தாழ்த்தப்பட்டோர்)
2.18 முதல் 40 வரை (பழங்குடியினர்)
3.20 முதல் 40 வரை (விதவை, கணவரால் கைவிடப்பட்டவர்)
குறைந்தபட்ச கல்வித்தகுதி 10 ஆம் வகுப்பு தோல்வி / தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தமிழில் சரளமாக எழுதப்படிக்கத் தெரிந்திருக்க வேண்டும். நியமனம் கோரும் மையத்திற்கும் விண்ணப்பதாரரின் குடியிருப்பிற்கும் இடைப்பட்ட தூரம் 3 கி.மீ-க்குள் இருக்க வேண்டும். (ஊராட்சி - குக்கிராமம் - வருவாய் கிராமம் போன்றவைகள் கணக்கில் எடுத்துக் கொள்ள தேவையில்லை). மாற்றுத்திறனாளிகள் ஒதுக்கீட்டில் 4 சதவீதம் இடஒதுக்கீடு கீழ்கண்ட குறைபாடு உள்ளவர்கள் மட்டும் (உரிய அடையான அட்டையுடன்) விண்ணப்பிக்க வேண்டும்.
1. குறைவான பார்வைத்திறன் (மூக்குக் கண்ணாடி மூலம் சரி செய்யப்பட்டது 2. உடல் இயக்க குறைபாடு (ஒருகால்)
3, குணப்படுத்தப்பட்ட தொழுநோய் (40% கைகளின் முழு செயல்பாட்டு திறன். உணர்திறன் மற்றும் செயல்திறன் உள்ளடக்கியது)
4. திரவ வீச்சினால் பாதிக்கப்பட்டவர்கள்
5. குறிப்பிட்ட கற்றல் திறன் குறைபாடு (மிதமான)
6. காதுகேளாதோர் (கருவி பொறுத்தப்பட்டவர்)
7. குள்ளத்தன்மை கொண்டவர்
விதவைகள், கணவரால் கைவிடப்படோர் மற்றும் ஆதரவற்ற பெண்களுக்கு 25 சதவீதம் இட ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. காலிப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் போது உரிய விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து தொடர்புடைய ஊராட்சி ஒன்றிய அலுவலகம் /மாநகராட்சி அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும். 17.04.2025 முதல் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள்29.04.2025 மாலை 5.45 மணி வரை மட்டுமே அதன் பின்னர் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது.
விண்ணப்பத்துடன் இணைக்கப்பட வேண்டிய சான்றிதழ்களின் நகல்கள்.
1. பள்ளி மாற்றுச் சான்றிதழ்
2. SSLC மதிப்பெண் சான்றிதழ்
3. குடும்ப அட்டை
4. இருப்பிட சான்று
5. ஆதார் அட்டை
6. சாதிச் சான்று
7. விதவை, கணவரால் கைவிடப்பட்டோர் மற்றும் ஆதரவற்ற பெண்கள் சான்றிதழ்
8. மாற்றுத்திறனாளிகள் அதற்கான சான்றிதழ்
மேற்கண்ட சான்றிதழ்களின் நகல்கள் விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டும். அஞ்சல் துறையின் மூலம் காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் அனுப்பப்படும் போது ஏற்படும். காலதாமதங்களுக்கு துறை பொறுப்பேற்காது. தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் மட்டுமே நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படுவார்கள். நேர்முகத் தேர்வின்போது அசல் சான்றுகளுடன் கலந்து கொள்ளவேண்டும். வேறு அலுவலகங்களிலோ மற்ற அலுவலர்களிடமோ அளிக்கப்படும் மனுக்கள் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட மாட்டாது. உரிய சான்றிதழ்கள் இல்லாத விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும். காரணம் ஏதும் குறிப்பிடாமல் நியமன அறிவிப்பு அறிக்கையினை இரத்து செய்வதற்கு / திரும்ப பெறுவதற்கு / திருத்துவதற்கு / கெடு தேதியினை நீட்டிப்பதற்கு மாவட்ட ஆட்சியருக்கு முழு உரிமையுண்டு என தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.
திருநெல்வேலி மாவட்ட காலிப் பணியிட விவரம்
திருநெல்வேலி மாவட்டத்தின் கீழ் இயங்கும் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் சத்துணவுத் திட்ட பள்ளி சத்துணவு மையங்களில் ஏற்பட்டுள்ள 119 சமையல் உதவியாளர் காலிப்பணியிடங்களுக்கு ரூ.3,000/- என்ற தொகுப்பூதியத்தின் அடிப்படையில் நேரடி நியமனம் மூலம் நிரப்பிட (ஓராண்டு கால பணிக்குப் பின்பு சிறப்பு காலமுறை ஊதியத்தில் (ஊதிய நிலை 1 Level of Pay - ரூ.3000-9000)) தகுதியான பெண் விண்ணப்பதாரர்களிடமிருந்து மட்டும் 15.04.2025 முற்பகல் 10.00 முதல் 26.04.2025 பிற்பகல் 05.45 முடிய விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இனசுழற்சி வாரியான காலிப்பணியிட விவரம்:
அரசு மற்றும் சிறுபான்மையற்ற பள்ளிகள் - 40
ஆதிதிராவிடர் (அருந்ததியினர்) - 3
ஆதிதிராவிடர் - 12
பழங்குடியினர் - 6
மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மற்றும் சீர்மரபினர்- 21
பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் முஸ்லீம்கள் - 2
பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் முஸ்லீம் தவிர - 16
பொதுப்பிரிவு - 19
1. கல்வித்தகுதி: விண்ணப்பதாரர்கள் 15.04.2025-ம் தேதியில் பத்தாம் வகுப்பு தேர்ச்சி அல்லது தோல்வி பெற்றிருக்க வேண்டும்.
2. வயது வரம்பு: 15.04.202 தேதியில் 21 முதல் 40 வரை (பொது மற்றும் தாழ்த்தப்பட்டோர்), 18 முதல் 40 வரை (பழங்குடியினர்), 20 முதல் 40 வரை (விதவை, கணவரால் கைவிடப்பட்டவர்)
3. கல்வித் தகுதி, இருப்பிடம், சாதி, விதவை / கணவரால் கைவிடப்பட்டோர் மற்றும் இதர முன்னுரிமைகள் கோருவதற்கான சான்றுகள் கண்டிப்பாக இணைக்கப்பட வேண்டும்.
4. நியமனம் கோரும் பணியிடத்திற்கும் விண்ணப்பதாரின் குடியிருப்புக்கும் இடையே உள்ள துாரம் 3 கிலோ மீட்டருக்குள் இருக்க வேண்டும். (ஊராட்சி / குக்கிராமம் / வருவாய் கிராமம் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட மாட்டாது.)
5. ஆதரவற்ற விதவைகள் / ஆதரவற்ற பெண் / கணவரால் கைவிடப்பட்டடோருக்கான பணியிடங்கள் நிரப்பப்படும் போது 25 விழுக்காடு கணக்கீடு செய்து நிரப்பப்படும்.
6. மாற்றுத்திறனாளி ஒதுக்கீடு தொடர்பாக 4 விழுக்காடு பணியிடங்கள் அரசாணை(நிலை) எண்32 கீழ்கண்டவாறு பரிந்துரைத்துள்ளது.
• குறைவான பார்வைத்திறன் (மூக்குக்கண்ணாடி மூலம் சரி செய்யப்பட்டது)
* உடல் இயக்க குறைபாடு (ஒரு கால்)
* குணப்படுத்தப்பட்ட தொழுநோய் (40%கைகளின் முழு செயல்பாட்டுதிறன், உணர்திறன் மற்றும் செயல்திறன் உள்ளடக்கியது)
* திரவ வீர்சினால் பாதிக்கப்பட்டவர்கள்
* குறிப்பிட்ட கற்றல்திறன் குறைபாடு (மிதமான)
7. சமையல் உதவியாளர் காலிப்பணியிடத்திற்கான மாதிரி விண்ணப்பப் படிவம் திருநெல்வேலி மாவட்ட இணைய தளத்தில் (www.irunelvcl.nic.iறு) வெளியிடப்பட்டுள்ளது. மேற்படி, இணைய தளத்திலிருந்து சமையல் உதவியாளர் பணியிடத்திற்கான மாதிரி விண்ணப்ப படிவத்தினை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். (உரிய விண்ணப்ப படிவத்தில் விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் விண்ணப்பம் மட்டுமே பரிசீலனைக்கு ஏற்றுக் கொள்ளப்படும்.)
8. காலிப்பணியிடங்களின் விவரம், பணியிடங்களுக்கான இனசுழற்சி விவரம் மற்றும் மாதிரி விண்ணப்பப் படிவம் திருநெல்வேலி, மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மற்றும் சம்பந்தப்பட்ட ஊராட்சி ஒன்றியம் / மாநகராட்சி அலுவலக விளம்பர பலகையிலும் அறிவிப்பு செய்யப்படும்.
9. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவத்துடன் மாற்றுச் சான்றிதழ், SSLC மதிப்பெணி சான்றிதழ், இருப்பிடம், குடும்ப அட்டை, ஆதார் அட்டை, மாற்றுத்திறனாளி அடையாள அட்டை, சாதி மற்றும் விதவை / கணவரால் கைவிடப்பட்டோருக்கான சான்றிதழ்களின் நகல்களை இணைத்து நேரிலோ அல்லது பதிவஞ்சலிலோ சம்பந்தப்பட்ட ஊராட்சி ஒன்றியம் / மாநகராட்சி அலுவலகங்களுக்கு 26.04.2025 பிற்பகல் 05.45 மணிக்குள் வந்து சேர வேண்டும்.
10. (ஞாயிறு மற்றும் அரசு விடுமுறை நாட்கள் தவிர) 26.04.2025 பிற்பகல் 05.45 மணிக்குப் பின் நேரிலோ, பதிவஞ்சலிலோ பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது.அஞ்சல் துறையின் மூலம் விண்ணப்பங்கள் அனுப்பப்படும் போது ஏற்படும் காலதாமதங்களுக்கு துறை பொறுப்பேற்காது.
11. நிரப்பப்பட உள்ள காலிப்பணியிடங்களுக்கு பெறப்படும் விண்ணப்பங்களில் தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு நேர்காணல் அழைப்புக் கடிதம் பின்னர் அனுப்பப்படும். நேர்காணலுக்கு வரும்பொழுது அசல் நேர்காணல் அழைப்புக் கடிதம் மற்றும் அசல் சான்றுகள் தவறாது எடுத்து வரவேண்டும் என மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க | கடைசி வாய்ப்பு.. உங்கள் ரேஷன் கார்டு ரத்து செய்யப்படலாம்? இதை செய்ய மறக்காதீர்கள்..
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









