தமிழக விவசாயிகளுக்கான 3 முக்கிய அறிவிப்புகள்: பிஎம் கிசான் டூ இ-நாம் திட்டம் வரை

Tamil Nadu Government : பிஎம் கிசான் விண்ணப்பம், இ-நாம் இணைய தளம் மற்றும் வாடகைக்கு மஞ்சள் அறுவடை இயந்திரம் குறித்து கடலூர், மயிலாடுதுறை மறறும் ஈரோடு மாவட்ட ஆட்சியர்கள் முக்கிய அறிவிப்புகளை கொடுத்துள்ளனர். 

Written by - Karthikeyan Sekar | Last Updated : Mar 3, 2026, 08:59 PM IST
  • விவசாயிகளுக்கு 3 அறிவிப்புகள்
  • பிஎம் கிசான் முதல் இ-நாம் வரை
  • ஈரோடு, கடலூர், மயிலாடுதுறை ஆட்சியர்களின் அறிவிப்புகள்
தமிழக விவசாயிகளுக்கான 3 முக்கிய அறிவிப்புகள்: பிஎம் கிசான் டூ இ-நாம் திட்டம் வரை

Tamil Nadu Government : தமிழக வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில், விவசாயிகளின் நலனை முன்னிறுத்திப் பல்வேறு புதிய திட்டங்களும், நடைமுறை மாற்றங்களும் அறிவிக்கப்பட்டுள்ளன. கடலூர், மயிலாடுதுறை மற்றும் ஈரோடு ஆகிய மாவட்டங்களுக்கான விரிவான செய்தித்தொகுப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

Add Zee News as a Preferred Source

1. கடலூர் மாவட்டம்: இ-நாம் 2.0 - டிஜிட்டல் முறையில் விளைபொருள் விற்பனை

கடலூர் மாவட்ட விவசாயிகள் மற்றும் வணிகர்கள் தங்கள் விளைபொருட்களை வெளிப்படையான முறையில் வர்த்தகம் செய்ய, புதிய இ-நாம் 2.0 (e-NAM 2.0) இணையதளத்தில் இணையுமாறு மாவட்ட ஆட்சியர் ஆதித்யா செந்தில்குமார் ஐஏஎஸ் தெரிவித்துள்ளார். ஏற்கனவே இருந்த இ-நாம்-1 இணையதளம் மாற்றப்பட்டு, கூடுதல் வசதிகளுடன் கூடிய புதிய இ-நாம் 2.0 தளம் உருவாக்கப்பட்டுள்ளது. இனிவரும் காலங்களில் அனைத்து ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களிலும் இந்த புதிய இணையதளம் மூலமே வேளாண் விளைபொருள் பரிவர்த்தனை நடைபெறும்.

பதிவு செய்யத் தேவையானவை: விவசாயிகள் ஆதார் அட்டை நகல், வங்கி கணக்கு புத்தக நகல் மற்றும் ஆதாரோடு இணைக்கப்பட்ட கைபேசி எண் ஆகிய ஆவணங்களுடன் அருகிலுள்ள விற்பனைக்கூடங்களை அணுகலாம்.

தொடர்பு எண்கள்: விருத்தாசலம் (04143-238258), பண்ருட்டி (9790670513), கடலூர் முதுநகர் (9994996866), திருமுட்டம் (8610903803), குறிஞ்சிப்பாடி (9976866364), சேத்தியாத்தோப்பு (8098899638), காட்டுமன்னார்கோயில் (9500787325) மற்றும் வேப்பூர் (8610708252) ஆகிய எண்களைத் தொடர்பு கொள்ளலாம்.

2. மயிலாடுதுறை விவசாயிகள் கவனத்திற்கு

மயிலாடுதுறை மாவட்டத்தில் மத்திய மற்றும் மாநில அரசின் திட்டப்பலன்களைத் தடையின்றிப் பெற, 'வேளாண் அடுக்ககம்' (Agri Stack) திட்டத்தில் விவரங்களைப் பதிவு செய்வது அவசியம் என மாவட்ட ஆட்சியர் கேட்டுக்கொண்டுள்ளார். மாவட்டத்தில் இதுவரை 22,781 பட்டாதாரர்கள் மட்டுமே பதிவு செய்துள்ளனர். இன்னும் 30% விவசாயிகள் விவசாயி ஐடி இத்திட்டத்தில் இணையாமல் உள்ளனர். இதில் பதிவு செய்தால் மட்டுமே PM-KISAN மற்றும் பயிர் காப்பீடு (PMFBY) போன்ற திட்டங்களின் பலன்களை பெற முடியும்.

எப்படிப் பதிவு செய்வது?: விவசாயிகள் தங்கள் நில ஆவணங்கள், ஆதார் அட்டை, கணினி சிட்டா மற்றும் பட்டா ஆகிய விவரங்களுடன் கிராம நிர்வாக அலுவலகம் (VAO) அல்லது பொதுச் சேவை மையங்களை (CSC) அணுகலாம்.

3. ஈரோடு மாவட்டம்: ரூ.460 வாடகைக்கு மஞ்சள் அறுவடை இயந்திரம்

ஈரோடு மாவட்டத்தில் மஞ்சள் அறுவடைப் பணிகளை எளிதாக்க, வேளாண் பொறியியல் துறை சார்பில் இயந்திரங்கள் வாடகைக்கு விடப்படுவதாக மாவட்ட ஆட்சியர் கந்தசாமி, ஐஏஎஸ் தெரிவித்துள்ளார். மஞ்சள் பயிரிட்டுள்ள விவசாயிகள் அறுவடை காலத்தில் ஏற்படும் ஆட்கள் பற்றாக்குறையைத் தவிர்க்கவும், கால விரயத்தைக் குறைக்கவும் இந்த இயந்திரம் உதவும். டிராக்டரால் இயக்கப்படும் இந்த மஞ்சள் தோண்டும் இயந்திரத்திற்கு (Turmeric Digger) ஒரு மணி நேரத்திற்கு வெறும் ரூ.460/- மட்டுமே வாடகையாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஈரோடு உபகோட்டத்தில் 3 இயந்திரங்களும், கோபிசெட்டிபாளையம் உபகோட்டத்தில் 3 இயந்திரங்களும் விவசாயிகளின் பயன்பாட்டிற்காகத் தயார் நிலையில் உள்ளன. இந்த வசதியைப் பெற விரும்பும் விவசாயிகள் ஈரோடு (0424-2904843, 9894183367) அல்லது கோபிசெட்டிபாளையம் (04285-290069, 9443547484) அலுவலகங்களைத் தொடர்பு கொண்டு முன்பதிவு செய்து கொள்ளலாம். இந்த அறிவிப்புகள் அனைத்தும் 2025-26 நிதி ஆண்டிற்கான திட்டப்பலன்களை மையமாகக் கொண்டவை. விவசாயிகள் தங்கள் மாவட்ட அறிவிப்புகளைப் பின்பற்றி உரிய காலத்தில் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

மேலும் படிக்க | திமுக - காங்கிரஸ்: தூது வந்த ப.சிதம்பரம்... அடம்பிடிக்கும் ராகுல் - ஸ்டாலினின் முடிவு என்ன?

மேலும் படிக்க | ஒரு குடும்பத்துக்கு ரூ. 8000! கலைஞர் மகளிர் உரிமைத்தொகை போல் முதலமைச்சரின் அடுத்த சர்ப்பிரைஸ்

மேலும் படிக்க | வங்கி கணக்கில் ரூ. 4000.. இன்ப அதிர்ச்சி கொடுத்த முதலமைச்சர் ஸ்டாலின்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

About the Author

Karthikeyan Sekar

Karthikeyan Sekar

...Read More

Trending News