சென்னை உள்ளிட்ட பிற மாவட்ட பெண்களுக்கு குட்நியூஸ் - தமிழ்நாடு அரசின் 3 முக்கிய அறிவிப்புகள்..!

Tamil Nadu government : சென்னை உள்ளிட்ட பிற மாவட்ட பெண்களுக்கு தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள 3 முக்கிய அறிவிப்புகள் வெளியிட்டுள்ளது. அது குறித்த முழு விவரத்தையும் இங்கே தெரிந்து கொள்ளுங்கள். 

Written by - Karthikeyan Sekar | Last Updated : Jun 4, 2025, 04:51 PM IST
  • தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்புகள்
  • சென்னை உள்ளிட்ட பிற மாவட்ட பெண்களுக்கு குட்நியூஸ்
  • கைம்பெண்கள், சுய உதவிக்குழு பெண்கள் பயன்படுத்திக் கொள்ளவும்
சென்னை உள்ளிட்ட பிற மாவட்ட பெண்களுக்கு குட்நியூஸ் -  தமிழ்நாடு அரசின் 3 முக்கிய அறிவிப்புகள்..!

Tamil Nadu government women schemes : சென்னையில் வசிக்கும் பெண்களுக்காக சென்னை மாவட்ட ஆட்சியர் வெளியிட்டிருக்கும் முதல் அறிவிப்பில், கைம்பெண்கள் மற்றும் ஆதரவற்ற மகளிர் நல வாரியத்தில் உறுப்பினர் சேர்க்கை முகாம் 12.06.2025 அன்று நடைபெறவுள்ளது என தெரிவித்துளார். சென்னை மாவட்டத்தில் உள்ள கைம்பெண்கள், கணவனால் கைவிடப்பட்ட பெண்கள், நலிவுற்ற பெண்கள், ஆதரவற்ற பெண்கள், முதிர்கன்னிகள் ஆகியோர்களுக்கான நலவாரியத்தில் உறுப்பினர் சேர்க்கை முகாம் சென்னை மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் 8ஆவது தளத்தில் 12.06.2025 அன்று காலை 11.00 மணிக்கு நடைபெறவுள்ளது.

Add Zee News as a Preferred Source

சென்னை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

இம்முகாமில் கலந்து கொள்ள பயனாளிகள் தொலைபேசி எண், குடும்ப அட்டை நகல், ஆதார் நகல், அலைபேசி ஆகியவற்றை எடுத்து வந்து www.tnwidowwelfareboard.tn.gov.in என்ற இணையதளத்தில் தங்களை உறுப்பினராக பதிவு செய்து கொண்டு பயனடையுமாறு தெரிவித்துக்கொள்ளப்படுகிறது. கைம்பெண்கள் மற்றும் ஆதரவற்ற மகளிர் நல வாரியத்தில் உறுப்பினராக பதிவு செய்வதால் அவர்கள் விரும்பும் திறன் பயிற்சிக்கு விண்ணப்பிக்க உதவ முடியும். இத்திறன் பயிற்சி மேற்கொள்ளுதல் வாயிலாக சுய தொழில் புரிய மாவட்ட தொழில் மையம் (DIC) மற்றும் தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டு கழகம் (TADHCO)ன் கீழ் செயல்படுத்தப்படும் சுய தொழில் திட்டங்களில் மானியத்துடன் கூடிய வங்கிக் கடன் பெறுவதற்கு வழிவகை செய்யப்படும் என தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.

எனவே, சென்னை மாவட்டத்தில் உள்ள கைம்பெண்கள், கணவனால் கைவிடப்பட்ட பெண்கள், நலிவுற்ற பெண்கள், ஆதரவற்ற பெண்கள், முதிர்கன்னிகள் ஆகியோர் இம்முகாமில் கலந்து கொண்டு கைம்பெண்கள் மற்றும் ஆதரவற்ற மகளிர் நல வாரியத்தில் உறுப்பினர் ஆகுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது என சென்னை மாவட்ட ஆட்சியர் கூறியுள்ளார். 

சென்னை மகளிர்சுய உதவிக்குழு பெண்களுக்கான அறிவிப்பு

தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகத்தின் மூலம் சிறுபான்மையினருக்கு சுய வேலைவாய்ப்புகளுக்கு குறைந்த வட்டி விகிதத்தில் தனிநபர் கடன், சுயஉதவிக்குழுக்களான சிறு தொழில் கடன், விராசத் (கைவினை கலைஞர்களுக்கான கடன் திட்டம்) மற்றும் கல்விகடன் திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் பயன்பெற குடும்ப ஆண்டு வருமானம் கிராமப்புறங்களில் ரூ. 3,00,000/- ற்கு மிகாமலும் நகர்புறங்களில் ரூ. 8,00,000/- வரை ஆண்டு வருமானம் இருக்க வேண்டும்.

மேலும், பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள சிறுபான்மையின கைவினை கலைஞர்களுக்கு பொருளாதாரத்தை மேம்படுத்தும் பொருட்டு விராசத் கடன் கைவினை கலைஞர்களுக்கு குறைந்த வட்டி விகிதத்தில் மூலப்பொருட்களான களான உபகரணங்கள், கருவிகள், இயந்திரங்கள் வாங்குவதற்கு இக்கடன் வழங்கப்படுகிறது. எனவே சிறுபான்மையின மக்கள் இத்திட்டத்தை அதிக அளவில் பயன்படுத்தி கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

எனவே சென்னை மாவட்டத்தில் வசிக்கும் கிறித்துவர்கள், முஸ்லீம்கள், புத்த மதத்தினர், சீக்கியர்கள், பார்சிகள் மற்றும் ஜெயின் சமூகத்தினர் ஆகிய சிறுபான்மையின மக்கள் கடன் விண்ணப்பங்களை சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட சிறுபான்மையினர் நல அலுவலகம், 6வது தளம், சிங்காரவேலர் மாளிகை, இராஜாஜி சாலை, சென்னை-600 001 என்ற முகவரியிலும் மற்றும் மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் அலுவலகம் மாவட்ட கூட்டுறவு வங்கி அல்லத அதன் கிளைகள் ஆகிய அலுவலகங்களில் பெற்று அதனை பூர்த்தி செய்து வங்கிகோரும் ஆவணங்களுடன் சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் மேற்காணும் கடனுக்கு விண்ணப்பிக்கும் போது வங்கி கோரும் இதர ஆவணங்கள் சமர்ப்பிக்குமாறு சென்னை மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

திருப்பத்தூர் மாவட்ட சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறையின் மூலம் செயல்படுத்தப்பட்டுவரும் முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் 18 வயது முதிர்வு பெற்றும், முதிர்வு தொகை பெறாத பயனாளிகளை கண்டறியும் பொருட்டு கண்டறிய இயலாதவர்கள் விவரங்கள் tirupathur.nic.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. முதல் கட்டத்தில் 406 பயனாளிகள் மற்றும் இரண்டாம் கட்டத்தில் 22 பயனாளிகள் ஆக மொத்தம் 428 பயனாளிகள் கண்டறிய இயலாத காரணத்தால் அவர்களை கண்டறியும் பொருட்டு பயனாளிகளின் விவரங்களை மாவட்ட இணையதளமான tirupathur.nic.in என்னும் இணையதளத்தில் பார்வையிட்டு, இணையதள இணைப்பில் உள்ள கண்டறியபடாத பயனாளிகள் யாரேனும் இருப்பின் சம்மந்தப்பட்ட பயனாளிகள் முதிர்வு தொகை பெறும் பொருட்டு கீழ்க்கண்ட ஆவணங்களை கொண்டு வர வேண்டும்.

1. வைப்புத் தொகை பத்திரம் அசல் மற்றும் நகல்
2. பத்தாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் நகல்
3. வங்கி கணக்கு புத்தகம் (பயனாளியின் பெயரில் தனி வங்கிக்கணக்கு)
4. கடவுச்சீட்டு அளவிலான புகைப்படம்
5. பிறப்புச் சான்றிதழ் நகல்
6. ஆதார் கார்டு நகல்

மேற்காணும் ஆவணங்களுடன் திருப்பத்தூர் மாவட்ட சமூகநல அலுவலகத்தில் சமர்ப்பிக்குமாறு மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி:

மாவட்ட சமூகநல அலுவலர்,
மாவட்ட சமூகநல அலுவலகம்,
"பி" பிளாக் முதல் தளம்.
மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம்,
திருப்பத்தூர் தொலைபேசி எண் - 04119299561. 

மேலும் படிக்க | கலைஞர் உரிமைத் தொகை : டிஎன்பிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்ற அரசு ஊழியர்கள் பெயர் நீக்கம்?

மேலும் படிக்க | நாளை (ஜூன் 5) கடைசி நாள்.. கிருஷ்ணகிரி மாவட்ட ஓய்வூதியதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

About the Author

Karthikeyan Sekar

Karthikeyan Sekar

...Read More

Trending News