Coronavirus: கொரோனாவால் பாதிக்கப்பட்ட 35 வயது இளைஞர் உயிரிழந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

2019ஆம் ஆண்டு கொரோனா என்ற கொடிய தொற்று பரவ தொடங்கி 2022ஆம் ஆண்டு வரை உலகையே ஒரு வழி ஆக்கியது. தடுப்பூசியால் கட்டுப்படுத்தப்பட்ட நிலையில், மக்கள் சற்று நிம்மதி பெருமூச்சுவிட்ட நிலையில், மீண்டும் கொரோனா தொற்று பரவ தொடங்கி உள்ளது. முதலில் ஹாங்காங் உள்ளிட்ட நாடுகளில் பரவிய கொரோனா தொற்று தற்போது இந்தியாவிலும் வேகமாக பரவி வருகிறது.
குறிப்பாக கேரளா, தமிழ்நாடு, டெல்லி, மகராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் கொரோனா வைரஸ் தீவிரமடைந்து வருகிறது. இந்தியாவில் நேற்று (ஜூன் 05) ஒருநாள் மட்டும் சுமார் 498 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், இதுவரை மொத்தமாக 5,364 பேர் இந்த தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதுமட்டுமின்றி நேற்று ஒரு நாளில் மட்டும் 4 பேர் உயிரிழந்துள்ளனர். மொத்தமாக உயிரிழப்புகள் 50ஐ நெருங்கி உள்ளது.
இச்சூழலில் பொதுமக்கள் முக கவசம் அணிய வேண்டும் என சுகாதாரத்துறை அறிவுறுத்தி வருகிறது. குறிப்பாக கர்ப்பிணி பெண்கள், முதியவர்கள் பொது இடங்களுக்கு செல்லும்போது கட்டாயம் முகக்கவசம் அணிவது அவசியம் என அறிவுறுத்தி உள்ளது. காய்ச்சல், தலைவலி, இருமல் உள்ளிட்ட அறிகுறிகள் இருந்தால், உடனடியாக மருத்துவமனைக்கு செல்ல வேண்டும் என்றும் கூறி உள்ளனர்.
இந்த நிலையில், விழுப்புரம் மாவட்டம் பெரப்பேரியை சேர்ந்தவர் தியாகராஜன். இவருக்கு 35 வயது ஆகிறது. இவர் ஹைதராபாத்தில் பில்டிங் காண்ட்ராக்டராக வேலை செய்து வந்துள்ளார். இவருக்கு திடீரென காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. அவர் பரிசோதனை மேற்கொண்ட நிலையில், அது கொரோனா தொற்றாக உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதன் காரணமாக வார் சொந்த ஊரான விழுப்புரம் மாவட்டம் பெரப்பேரிக்கு திரும்பி உள்ளார். இதையடுத்து அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று (ஜூன் 06) திடீரென அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ