)
2026 சட்டமன்ற தேர்தலை நோக்கி தமிழக அரசியல் கட்சிகள் பயணித்து வருகிறது. திமுக, அதிமுக, நாதக உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் மக்களை சந்தித்து பிரச்சாரம் செய்து வருகின்றனர். அந்த வகையில், புதிதாக தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி நடத்தி வரும் விஜய், கடந்த இரண்டு வாரங்களாக மாவட்டம் வாரியாக சென்று மக்களிடையே பிரச்சாரம் செய்து வருகிறார். தனது பிரச்சார திட்டங்களை வாரம்தோறும் சனிக்கிழமை என ஒதுக்கி அப்பணிகளை மேற்கொண்டு வருகிறார்.
கடந்த இரண்டு வாரங்களில் தருச்சி, அரியலூர், நாகப்பட்டினம், திருவாரூர் பகுதிகளில் பிரச்சாரம் மேற்கொண்ட விஜய், இந்த வாரம் நேற்று (செப்டம்பர் 27) நாமக்கல் மற்றும் கரூரில் பிரச்சாரம் மேற்கொண்டார். முதலில் நேற்று மதியம் நாமக்கல்லில் பிரச்சாரம் செய்தார். பின்னர் கரூருக்கு வருகை தந்தார். ஆனால் அவர் திட்டமிட்டிருந்த நேரம்படி மிகவும் தாமதமாக வந்தார். அவர் பேசிக்கொண்டிருக்கும்போதே அம்புலன்ஸ் சென்ற வண்ணம் இருந்தன. சிலருக்கு தண்ணீர் பாட்டிலையும் விஜய் வாகணத்தில் இருந்தபடி கொடுத்தார்.தொடர்ந்து போலீசார் விஜய்யை புறப்படும்படி கூறியதை அடுத்து, அவசர அவசரமாக விஜய் பேச்சை முடித்துக்கொண்டு கிளம்பினார்.
இதனைத் தொடர்ந்து கடுமையான கூட்டநெரிசல் காரணமாக மூச்சுத்திணறல் ஏற்பட்டு இதுவரை 38 பேர் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது. கிட்டத்தட்ட 81 பேர் மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளதாக தெரிகிறது. முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, கரூர் மாவட்ட ஆட்சியர் உடனடியாக பாதிக்கப்பட்டவர்கள் அனுமதிக்கப்பட்டிருந்த கரூர் மருத்துவமனைக்குச் சென்றனர். பின்னர் அமைச்சர்கள் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, மா. சுப்பிரமணியம் ஆகியோர் மருத்துவமனைக்கு விரைந்தனர்.
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் இரவோடு இரவாக கரூர் சென்றார். அங்கு பாதிக்கப்பட்ட குடும்பத்தினர்களுக்கு தனது இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்தார். மேலும், கூட்ட நெரிசலில் இறந்தவரின் குடும்பத்தினருக்கு ரூ. 10 லட்சம் அரசு சார்பில் வழங்குவதாகவும் அவர் தெரிவித்திருந்தார். இந்த சூழலில், நடிகரும் தவெக தலைவருமான விஜய் கரூர் வருவாரா? பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை சந்திப்பாரா? என்ற பல கேள்விகள் எழுந்துள்ளன.
இந்த நிலையில், விஜய் கரூர் செல்லும் திட்டம் இல்லை என தகவல் வெளியாகி உள்ளது. 38 பேர் கரூர் மாவட்டத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் பரப்புரையின் போது கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த நிலையில் விஜய் உயிரிழந்தவர்களின் குடும்பங்களை சந்தித்து ஆறுதல் கூறுவார்கள் என்று எதிர்பார்த்த நிலையில், விஜய் கரூர் செல்லும் எந்த ஒரு திட்டமும் இல்லை என விஜய் தரப்பில் தகவல் கிடைத்துள்ளது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ