1986 பணியில் சேர்ந்த காவலர்களின் 40 ஆம் ஆண்டு சங்கமம்: நல்லுறவை புதுப்பித்த நிகழ்வு

1986 ஆம் ஆண்டு தமிழக காவல்துறையில் இணைந்த காவல்துறை அதிகாரிகள், 40 ஆண்டுகால சேவையையும், அனுபவங்களையும் கொண்டாடும் வகையில் ஒரு பிரம்மாண்டமான சந்திப்பு நிகழ்ச்சியை சென்னையில் நடத்தினர்.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Jul 29, 2025, 09:45 PM IST
  • நல்லிணக்கத்தையும், சகோதரத்துவத்தையும் வளர்க்க உதவுகின்றன.
  • மருத்துவ முகாம் ஆகியவை நடத்தப்பட்டன.
1986 பணியில் சேர்ந்த காவலர்களின் 40 ஆம் ஆண்டு சங்கமம்: நல்லுறவை புதுப்பித்த நிகழ்வு

சென்னை கிழக்கு கடற்கரைச் சாலையில் ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள ஒரு தனியார் ரிசார்ட்டில் நடைபெற்ற இந்த நிகழ்வு, முன்னாள் மற்றும் இந்நாள் காவல்துறை அதிகாரிகளின் நெகிழ்ச்சியான மறுசந்திப்பாக அமைந்தது.

Add Zee News as a Preferred Source

நிகழ்ச்சியில் பங்கேற்ற காவலர்கள், தாங்கள் பணியில் சேர்ந்தது முதல் இன்று வரையிலான தங்களது அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டனர்.

பல்வேறு சவால்கள், வெற்றிகள், நகைச்சுவையான தருணங்கள் என 40 ஆண்டு கால நினைவுகள் அசைபோடப்பட்டன.

ஓய்வுபெற்ற காவலர்கள் மற்றும் இன்னும் பணியில் உள்ள காவலர்கள் எனப் பலரும் உற்சாகத்துடன் கலந்து கொண்டு, நீண்ட நாட்களுக்குப் பிறகு சந்தித்து மகிழ்ந்தனர். இந்தச் சந்திப்பு, அவர்களது நட்புறவை மேலும் வலுப்படுத்தியதுடன், தங்களது கடந்தகால வாழ்க்கையை நினைவுகூர்ந்து கொள்ள ஒரு பொன்னான வாய்ப்பையும் வழங்கியது.

இந்தக் கொண்டாட்ட நிகழ்வின் ஒரு பகுதியாக, பங்கேற்பாளர்களின் நலனை முன்னிட்டு சிறப்பு மருத்துவ முகாம்களும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. கண் சிகிச்சை முகாம், பல் மருத்துவ முகாம் மற்றும் பொது மருத்துவ முகாம் ஆகியவை நடத்தப்பட்டன.

ஒரே நேரத்தில் பணியில் சேர்ந்த காவலர்கள், இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் சந்தித்து, தங்களது அனுபவங்களையும், நினைவுகளையும் பகிர்ந்து கொண்டது இந்த நிகழ்வின் சிறப்பம்சமாக அமைந்தது. இத்தகைய சந்திப்புகள், காவல்துறை குடும்பத்தினரிடையே நல்லிணக்கத்தையும், சகோதரத்துவத்தையும் வளர்க்க உதவுகின்றன.

மேலும் படிக்க - தமிழக அரசு வெளியிட்டுள்ள 15 முக்கியமான அதிரடி அறிவிப்புகள்! மிஸ் பண்ணிடாதீங்க!

மேலும் படிக்க - ஏன்? நான் முதலமைச்சர் ஆக தகுதி இல்லையா? திருமாவளவன் கேள்வி!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

About the Author

Vijaya Lakshmi

விஜயலட்சுமி, ஜீ தமிழ் நியூஸ் இணையதளத்தில் பணியாற்றி வருகிறேன். கடந்த 2016ஆம் ஆண்டு ஜீ தமிழ் நியூஸில் பணியைத் தொடங்கி உள்ளேன். தற்போது சினிமா, பொருளாதாரம், வாழ்க்கை முறை, ஜோதிடம் சார்ந்த செய்திகளை எழுதி வருகிறேன். பொதுமக்களின் பணம் மற்றும் பட்ஜெட் சார்ந்த விஷயங்களை எழுதுவதில் ஆர்வம் அதிகம். சினிமா, சேமிப்பு, முதலீடு, தமிழ அரசின் முக்கிய அறிவிப்புகள் போன்ற செய்திகளை எழுதுவதிலும் ஆர்வம் அதிகம்.

...Read More

Trending News