கடந்த 24 மணி நேரத்தில் இரண்டு கோவிட் -19 நோயாளிகள் உயிர் இழந்தனர் மற்றும் 447 பேர் தமிழகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர் என மாநில சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மாநில தலைநகரான சென்னை தொடர்ந்து அதிக எண்ணிக்கையிலான தொற்றுநோய்களை பதிவு செய்துவருகிறது. இன்றைய அறிக்கையின் படி சென்னையில் 363 தொற்றுகள் பதிவானது. மொத்த எண்ணிக்கையை 5,625-ஆக அதிகரித்தது.
தமிழ்நாட்டில் இன்று 447 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் மொத்த எண்ணிக்கையை 9,674-ஆக அதிகரித்துள்ளது.
வரிசை எண் | மாவட்டம் | மே 13, 2020 வரை | மே 14, 2020 அன்று | வெளி மாநிலம், நாட்டில் இருந்து வந்தவர்கள் | மொத்தம் | குணமடைந்தோர் | செயலில் உள்ளவை | இறப்பு |
1 | அரியலூர் | 348 | 0 | 348 | 13 | 335 | ||
2 | செங்கல்பட்டு | 421 | 9 | 430 | 67 | 358 | 4 | |
3 | சென்னை | 5274 | 363 | 5637 | 758 | 4834 | 44 | |
4 | கோவை | 146 | 0 | 146 | 144 | 0 | 1 | |
5 | கடலூர் | 413 | 0 | 413 | 28 | 384 | 1 | |
6 | தர்மபுரி | 5 | 0 | 5 | 1 | 4 | ||
7 | திண்டுக்கல் | 111 | 1 | 112 | 80 | 31 | 1 | |
8 | ஈரோடு | 70 | 0 | 70 | 69 | 0 | 1 | |
9 | கள்ளக்குரிச்சி | 61 | 0 | 61 | 10 | 51 | ||
10 | காஞ்சீபுரம் | 156 | 8 | 164 | 66 | 97 | 1 | |
11 | கன்னியாகுமாரி | 26 | 5 | 31 | 16 | 14 | 1 | |
12 | கரூர் | 54 | 1 | 1 – மகாராஷ்டிரா | 56 | 43 | 13 | |
13 | கிருஷ்ணகிரி | 20 | 0 | 20 | 0 | 20 | ||
14 | மதுரை | 123 | 2 | 7 – மகாராஷ்டிரா | 132 | 83 | 47 | 2 |
15 | நாகப்பட்டினம் | 47 | 0 | 47 | 44 | 3 | ||
16 | நாமக்கல் | 77 | 0 | 77 | 61 | 16 | ||
17 | நீலகிரி | 14 | 0 | 14 | 11 | 3 | ||
18 | பெரம்பலூர் | 133 | 4 | 137 | 13 | 124 | ||
19 | புதுக்கோட்டை | 6 | 0 | 6 | 1 | 5 | ||
20 | ராமநாதபுரம் | 30 | 1 | 31 | 21 | 9 | 1 | |
21 | ராணிப்பேட்டை | 76 | 0 | 76 | 41 | 35 | ||
22 | சேலம் | 35 | 0 | 35 | 30 | 5 | ||
23 | சிவகங்கை | 12 | 0 | 1 – மகாராஷ்டிரா | 13 | 12 | 1 | |
24 | தென்காசி | 53 | 1 | 54 | 34 | 20 | ||
25 | தஞ்சாவூர் | 70 | 0 | 70 | 47 | 23 | ||
26 | தேனி | 71 | 1 | 72 | 42 | 29 | 1 | |
27 | திருப்பதூர் | 28 | 0 | 28 | 18 | 10 | ||
28 | திருவள்ளூர் | 480 | 15 | 495 | 82 | 410 | 3 | |
29 | திருவண்ணாமலை | 128 | 8 | 136 | 13 | 123 | ||
30 | திருவாரூர் | 32 | 0 | 32 | 29 | 3 | ||
31 | தூத்துக்குடி | 35 | 1 | 2- மகாராஷ்டிரா | 38 | 26 | 11 | 1 |
32 | திருநெல்வேலி | 98 | 3 | 11- மகாராஷ்டிரா, 2- கத்தர் | 114 | 62 | 51 | 1 |
33 | திருப்பூர் | 114 | 0 | 114 | 114 | 0 | ||
34 | திருச்சி | 67 | 0 | 67 | 56 | 11 | ||
35 | வேலூர் | 34 | 0 | 34 | 20 | 13 | 1 | |
36 | விழுப்பூரம் | 306 | 0 | 306 | 53 | 251 | 2 | |
37 | விருதுநகர் | 44 | 0 | 44 | 32 | 12 | ||
38 | Airport Quarantine | 9 | 0 | 9 | 0 | 9 | ||
மொத்தம் | 9227 | 423 | 24 | 9674 | 2240 | 7365 | 66 |
வெளியிடப்பட்ட அறிக்கையில், இரண்டு COVID-19 நோயாளிகள் இறந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் மூலம் மாநிலத்தில் மொத்த இறப்பு எண்ணிக்கை 66-ஆக அதிகரித்துள்ளது. மற்றும் வியாழக்கிழமை குணப்படுத்தப்பட்டு வெளியேற்றப்பட்ட COVID-19 நோயாளிகளின் எண்ணிக்கை 64-ஆக இருந்தது, இதனையடுத்து மாநிலத்தில் மொத்தம் 2,240 இதுவரை தொற்றுநோயில் இருந்து மீண்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கிறது.
அரசாங்கத்தின் கூற்றுப்படி, கடந்த 24 மணி நேரத்தில் 11,965 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டன, இது வரை மொத்தம் 2.91 லட்சம் மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டு இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.