கடந்த 24 மணி நேரத்தில் இரண்டு கோவிட் -19 நோயாளிகள் உயிர் இழந்தனர் மற்றும் 447 பேர் தமிழகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர் என மாநில சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மாநில தலைநகரான சென்னை தொடர்ந்து அதிக எண்ணிக்கையிலான தொற்றுநோய்களை பதிவு செய்துவருகிறது. இன்றைய அறிக்கையின் படி சென்னையில் 363 தொற்றுகள் பதிவானது. மொத்த எண்ணிக்கையை 5,625-ஆக அதிகரித்தது.


தமிழ்நாட்டில் இன்று 447 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் மொத்த எண்ணிக்கையை 9,674-ஆக அதிகரித்துள்ளது.


வரிசை எண் மாவட்டம் மே 13, 2020 வரை மே 14, 2020 அன்று வெளி மாநிலம், நாட்டில் இருந்து வந்தவர்கள் மொத்தம் குணமடைந்தோர் செயலில் உள்ளவை இறப்பு
1 அரியலூர் 348 0   348 13 335  
2 செங்கல்பட்டு 421 9   430 67 358 4
3 சென்னை 5274 363   5637 758 4834 44
4 கோவை 146 0   146 144 0 1
5 கடலூர் 413 0   413 28 384 1
6 தர்மபுரி 5 0   5 1 4  
7 திண்டுக்கல் 111 1   112 80 31 1
8 ஈரோடு 70 0   70 69 0 1
9 கள்ளக்குரிச்சி 61 0   61 10 51  
10 காஞ்சீபுரம் 156 8   164 66 97 1
11 கன்னியாகுமாரி 26 5   31 16 14 1
12 கரூர் 54 1 1 – மகாராஷ்டிரா 56 43 13  
13 கிருஷ்ணகிரி 20 0   20 0 20  
14 மதுரை 123 2 7 – மகாராஷ்டிரா 132 83 47 2
15 நாகப்பட்டினம் 47 0   47 44 3  
16 நாமக்கல் 77 0   77 61 16  
17 நீலகிரி 14 0   14 11 3  
18 பெரம்பலூர் 133 4   137 13 124  
19 புதுக்கோட்டை 6 0   6 1 5  
20 ராமநாதபுரம் 30 1   31 21 9 1
21 ராணிப்பேட்டை 76 0   76 41 35  
22 சேலம் 35 0   35 30 5  
23 சிவகங்கை 12 0 1 – மகாராஷ்டிரா 13 12 1  
24 தென்காசி 53 1   54 34 20  
25 தஞ்சாவூர் 70 0   70 47 23  
26 தேனி 71 1   72 42 29 1
27 திருப்பதூர் 28 0   28 18 10  
28 திருவள்ளூர் 480 15   495 82 410 3
29 திருவண்ணாமலை 128 8   136 13 123  
30 திருவாரூர் 32 0   32 29 3  
31 தூத்துக்குடி 35 1 2- மகாராஷ்டிரா 38 26 11 1
32 திருநெல்வேலி 98 3 11- மகாராஷ்டிரா, 2- கத்தர் 114 62 51 1
33 திருப்பூர் 114 0   114 114 0  
34 திருச்சி 67 0   67 56 11  
35 வேலூர் 34 0   34 20 13 1
36 விழுப்பூரம் 306 0   306 53 251 2
37 விருதுநகர் 44 0   44 32 12  
38 Airport Quarantine 9 0   9 0 9  
மொத்தம் 9227 423 24 9674 2240 7365 66

வெளியிடப்பட்ட அறிக்கையில், இரண்டு COVID-19 நோயாளிகள் இறந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் மூலம் மாநிலத்தில் மொத்த இறப்பு எண்ணிக்கை 66-ஆக அதிகரித்துள்ளது. மற்றும் வியாழக்கிழமை குணப்படுத்தப்பட்டு வெளியேற்றப்பட்ட COVID-19 நோயாளிகளின் எண்ணிக்கை 64-ஆக இருந்தது, இதனையடுத்து மாநிலத்தில் மொத்தம் 2,240 இதுவரை தொற்றுநோயில் இருந்து மீண்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கிறது.


அரசாங்கத்தின் கூற்றுப்படி, கடந்த 24 மணி நேரத்தில் 11,965 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டன, இது வரை மொத்தம் 2.91 லட்சம் மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டு இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.