மே 22: புதிதாக 786 பேருக்கு COVID-19 தொற்று; இன்று 846 பேர் குணமடைந்தனர்

தமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு நிலவரம் குறித்து தகவல்கள் வெளியாகி உள்ளது. அதில் மேலும் 786 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது.

Shiva Murugesan சிவா முருகேசன் | Updated: May 22, 2020, 07:23 PM IST
மே 22: புதிதாக 786 பேருக்கு COVID-19 தொற்று; இன்று 846 பேர் குணமடைந்தனர்
Photo: Zee Network

சென்னை: தமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு நிலவரம் குறித்து தகவல்கள் வெளியாகி உள்ளது. அதில் மேலும் 786 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. அதில் சென்னையில் மட்டுமே 569 பேருக்கு பாதிப்பு. இன்று கொரோனா தொற்று உறுதிப்படுத்தப் பட்டவர்களில் நூற்றுக்கும் மேற்பட்டோர் வெளி மாநிலங்களிலிருந்து வந்தவர்கள் எனக் கூறப்பட்டு உள்ளது. அதேபோல ஒரே நாளில் 846 பேர் சிகிச்சை முடிந்து வீடு திருபியுள்ளனர். 

இன்றைய நிலவரப்படி தமிழகத்தில் COVID-19 மொத்த பாதிப்பு எண்ணிக்கை 14 ஆயிரத்து 753 ஆக உயர்ந்துள்ளது. அதில் 7128 பேர் குணமடைந்துள்ளனர். தற்போது 7524 பேர் கண்காணிப்பில் வைக்கப்பட்டு உள்ளனர். அதேநேரத்தில் இன்று மேலும் 4 பேர் உயிரிழந்துள்ளதால் இறப்பு எண்ணிக்கை தமிழகத்தில் 98 ஆக அதிகரித்துள்ளது. 

தமிழகத்தை பொறுத்த வரை அதிகபட்சமாக 9364 பேர் என சென்னையில் பாதிப்பு அதிகமாக இருக்கிறது. அதற்கு அடுத்த இடத்தில் செங்கல்பட்டு மாவட்டம் உள்ளது. அங்கு 695 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது