)
கடலூர் மாவட்டம், பண்ருட்டி அருகே 80 வயது மூதாட்டியை சிலர் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து, அவர் அணிந்திருந்த கம்மல் மற்றும் மூக்குத்தியையும் மர்ம நபர்கள் திருடி சென்றுள்ளனர். மூதாட்டி காட்டுக்குள் பலாத்காரம் செய்யப்பட்டு கிடந்த நிலையில், அவ்வழியாக சென்றவர்கள் மூதாட்டியை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். மூதாட்டி தற்போது, சிகிச்சை பெற்று வருகிறார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கடலூர் மாவட்டம், பண்ருட்டி அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் 80 வயது மூதாட்டி. இவர் நேற்று மதியம் சுமார் 3 மணி அளவில் வெளியில் சென்றிருக்கிறார். அவர் அங்குள்ள சவுக்கு தோப்பு என்ற பகுதியில் நின்று கொண்டிருந்தபோது, அங்கு வந்த 4 இளைஞர்கள் திடீரென மூதாட்டியை மறைவான இடத்திற்கு தூக்கி சென்றுள்ளனர். இதையடுத்து அந்த வாலிபர்கள் மூதாட்டியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது.
மேலும், மூதாட்டி சத்தம் போட்ட நிலையில், இளைஞர் மூதாட்டியின் வாயில் மண்ணை அள்ளி போட்டதாகவும், பின்னர் மூதாட்டி தங்க கம்மல், மூக்குத்தி உள்ளிட்ட தங்க நகைகளை அவர்கள் பறித்துக்கொண்டு தப்பி ஒடியதாகவும் கூறப்படுகிறது. இதில் மூதாட்டியின் உடல் பாதிக்கப்பட்டு மயக்க மடைந்த நிலையில், கிடந்துள்ளார். இச்சூழலில், அவ்வழியாக சென்றவர்கள், மூதாட்டியை மீட்டு மருத்துவமனையில் அனுமத்தித்துள்ளனர். தற்போது மூதாட்டி சிகிச்சை பெற்று வருகிறார்.
இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த போலீசார், வழக்கு பதிவு செய்து திவீர விசாரணையில் மேற்கொண்டனர். இந்த நிலையில், இவ்வழக்கில் தொடர்புடைய சுந்தரவேல் என்பவரை போலீசார் பிடித்து விசாரித்தனர். அப்போது சுந்திரவேல் தப்ப முயன்ற நிலையில், அவரை துப்பாக்கியால் சுட்டு போலீசார் பிடித்துள்ளனர். சமீபமாகவே பாலியல் வன்கொடுமை போன்ற சம்பவங்கள் அதிகரித்து வருவதாக எதிர்கட்சி தரப்பில் குற்றம் சாட்டி வருகின்றனர்.
அந்த வகையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, இந்த கொடூர சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் தனது எக்ஸ் பக்கத்தில் கூறியதாவது, போதைப் பொருள் கலாச்சாரத்தில் மூழ்கியுள்ள ஸ்டாலின் மாடல் ஆட்சியில், 80வயது மூதாட்டியைக் கூட பாலியல் வன்கொடுமையில் ஈடுபடும் அவலம்!
கடலூர் மாவட்டம், பண்ருட்டியில் 5 வாலிபர்கள் கஞ்சா போதையில் மூதாட்டியை பாலியல் வன்கொடுமை செய்ததாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது. ஸ்டாலின் ஆட்சியில், தமிழ்நாடு எங்கே போகிறது? என்று தெரியாத நிலையிலேயே உள்ளது. இதுபோன்ற சம்பவங்கள் தமிழகம் முழுவதும் நடைபெற்றாலும், கும்பகர்ண தூக்கத்தில் இருக்கும் பொம்மை முதல்வர் மு.க. ஸ்டாலின், இனியும் போதைப்பொருள் ஒழிக்கவோ, சட்டம் ஒழுங்கைக் காக்கவோ நடவடிக்கை எடுப்பார் என்ற நம்பிக்கை மக்களுக்கு துளியும் இல்லை.
6 வயது சிறுமி முதல் 80 வயது மூதாட்டி வரை, "அவர்களே அவர்களை காப்பாற்றிக்கொள்ள வேண்டிய" அவலச் சூழலை தமிழகத்தில் ஏற்படுத்திய இந்த விடியா திமுக ஸ்டாலின் மாடல் அரசுக்கு எனது கடும் கண்டனம். இதுபோன்ற சம்பவங்களுக்கு அடிப்படை ஆதாரமாக உள்ள போதைப்பொருள் கலாச்சாரத்தை ஒழிக்க உறுதியான நடவடிக்கை எடுக்காத, காவல்துறையை தன் நேரடி கட்டுப்பாட்டில் வைத்திருப்பதாக சொல்லும் பொம்மை முதலமைச்சர் தமிழக மக்களுக்கு பதில் சொல்லியாக வேண்டும். இப்படிப்பட்ட கேவலமான ஆட்சியைக் கண்டு கொதிப்படைந்துள்ள மக்கள், இதற்கான தண்டனையை நிச்சயம் 2026-ல் இந்த திமுக அரசுக்கு வழங்கத் தான் போகிறார்கள் என தெரிவித்துள்ளார்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ