)
குமரி மாவட்டம்: குமரி மாவட்டம் களியல் அருகே போங்காலை பகுதியில் வசித்து வரும் கூலி தொழிலாளி சுந்தர்ராஜ். இவர் தனது குடும்பத்துடன் அப்பகுதியில் வசித்து வரும் நிலையில் கடந்த மே மாதம் பலத்த காற்றில் ரப்பர் மரம் முறிந்து விழுந்தது. இதன் காரணமாக சுந்தர்ராஜின் வீட்டில் உள்ள மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் களியல் மின்வாரிய அலுவலகத்தில் உள்ள தற்காலிக தொழிலாளி ஒருவர் தகவல் தெரிந்து மின் மீட்டரில் கொடுக்காமல் தற்காலிகமாக மின் இணைப்பை சீரமைத்து கொடுத்ததாக கூறப்படுகிறது.
இதுகுறித்து கூலி தொழிலாளி மின்வாரிய ஊழியர்களுடன் கேட்டபோது ஒரு சில நாட்களில் வந்து மீட்டரில் பொருத்தி மின் இணைப்பை வழங்குவதாக கூறி சென்றுள்ளனர். இந்த நிலையில் அவருக்கு முதலாவதாக 6000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டு அவர் அதையும் கட்டியுள்ளனர். தொடர்ந்து மின்வாரிய சிறப்பு அதிகாரிகள் திடீரென சோதனைக்கு வந்தபோது கூலி தொழிலாளி மின்சாரம் திருடியதாக கூறி மீண்டும் சுமார் 94 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து மின் இணைப்பை துண்டித்தனர்.
தொடர்ந்து கூலித்தொழிலாளி களியல் மின் வாரியத்தில் புகார் அளித்து அந்த புகாரின் பேரில் விசாரணை நடத்தி மின் இணைப்பு வழங்கிய ஊழியரை அடையாளம் காட்டி கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்த நிலையில் கூலி தொழிலாளி வீட்டிற்கு மின் இணைப்பு வழங்க மறுப்பு தெரிவித்து வருகின்றனர்.
தொடர்ந்து 24 நாட்களாக மின் இணைப்பு இல்லாமல் அவரது குடும்பம் இருளில் தவித்து வருகிறது. இதற்கிடையே வீட்டில் இருந்த மூதாட்டி மின்சாரம் இல்லாத காரணத்தால் பலமுறை வீட்டுக்குள் விழுந்து முகங்களில் காயம் ஏற்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து களியல் மின் வாரிய அலுவலகத்தில் கண் தெரியாத 87வயது மூதாட்டி உட்பட குடும்பத்துடன் வந்து நீதி கேட்டு முற்றுகை போராட்டம் நடத்தி வருகின்றனர்.
தனக்கு நீதி கிடைக்கும் வரை இந்த போராட்டத்தை தொடரப்போவதாக கூலித்தொழிலாளி கூறியுள்ளார். களியல் போலீஸ் சம்பவ இடத்திற்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ