மனதை உருக்கும் 90 வயது மூதாட்டி! உணவுக்கு கையேந்தும் அவலநிலை

கல்மனம் கொண்ட பிள்ளைகளால், சொந்த வீட்டில் இருந்து விரட்டி விடப்பட்டு, 90 வயதில் உணவுக்கு கையேந்தும் தாயின் அவலநிலை

Written by - ZEE Bureau | Edited by - Malathi Tamilselvan | Last Updated : Nov 15, 2021, 11:10 AM IST
  • 90 வயது மூதாட்டி உணவுக்கு கையேந்தும் அவலநிலை
  • தாயை வீட்டை விட்டு துரத்திய மகன்கள்
  • அரசின் அறிவுறுத்தலையும் புறக்கணித்த அவலம்
மனதை உருக்கும் 90 வயது மூதாட்டி! உணவுக்கு கையேந்தும் அவலநிலை

90 வயது மூதாட்டியை மழையில் விரட்டிவிட்ட பிள்ளைகளின் செயல், கேட்பவர்களை பதற வைக்கிறது. சொந்தவீடு இருந்தும் சாலையோரம் சாப்பாட்டிற்கு கையேந்தும் அவலம் கேட்பவர்களுக்கு வருத்தத்தை ஏற்படுத்துகிறது.  

மயிலாடுதுறை அருகே உள்ள வாணாதிராஜபுரத்தை சேர்ந்த  தாவூத்பீவி என்ற 90 வயது மூதாட்டி, தனது  வீட்டில்  இளைய மகன் அசரப் அலியுடன் வசித்து வந்துள்ளார். கணவனை இழந்த இந்த மூதாட்டியின் மகன் வெளிநாடு சென்றுவிட்டார். அதன்பிறகு, மருமகள் கடந்த மாதம்  வீட்டைவிட்டு விரட்டிவிட்டார்.  

அதே ஊரில் வசித்துவரும் தனது பெரிய மகனிடம் பீவி சென்றார் அவரும் விரட்டிவிட்டார், மகள் வீட்டிற்கு சென்ற தாவூத்பீவியை அவரும்  ஏற்றுகொள்ளவில்லை,  வானாதிராஜபுரம் ஊர் பஞ்சாயத்தார் கூறிய அறிவுரைகளையும் மகன்கள் கேட்கவில்லை. மகன் குவைத்தில் இருந்து நன்றாக சம்பாதித்தாலும், சொந்த வீடு இருந்தாலும், அக்கம்பக்கத்தினர் அளித்த உணவை உண்டு வாழும் அவலநிலைக்கு தள்ளப்பட்டார் மூதாட்டி. 

மயிலாடுதுறையில் கடந்த மாதம் 4ம் தேதி  மாவட்ட ஆட்சியரின் மனுநீதி நாள் முகாமில் கலந்துகொண்ட தாவூத்பீவி, மகன்கள் மீது புகாரளித்தார். தனது வீட்டை பிடுங்கிக் கொண்ட பிள்ளைகள் அதில் வீடுகட்டி வசித்து வருகின்றனர்.  ஒருவேளை உணவு கொடுக்கக்கூட விருப்பம் இல்லாமல் துரத்திவிட்டார்கள். எனக்கு உரிய சொத்தை அளித்தாலே இறுதிவரை நிம்மதியாக வாழ்வேன், இல்லை என்றால் கருணை கொலை செய்துவிடுங்கள் என்று உருக்கமாக கோரிக்கை விடுத்தார்.

இதையடுத்து நடவடிக்கை எடுத்த வருவாய்துறையினர், மூதாட்டியை, அவரது மகன் அசரஃப் அலியின் வீட்டில் ஒப்படைத்து, தாயை பத்திரமாக பார்த்துக்கொள்ள சொல்லி அறிவுறுத்தி விட்டு சென்றனர்.  

ஆனால், கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு மழை நேரத்தில் வீட்டைவிட்டு துரத்திய குடும்பத்தினர் வாசற்கதவை பூட்டிவிட்டனர், மழையில் நனைந்தபடியே வெளியில் அலைபாயும் 90 வயது பெண்மணி, அக்கம்பக்கத்து வீட்டில் கிடைக்கும் உணவீல் உயிர் வாழ்கிறார். தனக்கு நியாயம் வழங்கவேண்டும், என்றும் உயிர்வாழ நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று அந்த மூதாட்டி கோரிக்கை வைத்துள்ளார். இது, கேட்பவர் நெஞ்சத்தை உருக்கும் சம்பவமாக இருக்கிறது. 

READ ALSO | பார்ட்டியில் உல்லாசமாய் கலக்கும் பெண்களின் கலாட்டா

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

More Stories

Trending News