கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே டெய்லர் சரியாக தைக்காததால், வாடிக்கையாளர் ஆத்திரமடைந்து கத்திரிக்கோலால் குத்தி படுகொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. நாகர்கோவில் பெண்கள் கிறிஸ்தவ கல்லூரி சந்திப்பு அருகே டெய்லர் கடை நடத்தி வந்தவர் செல்வம். இவர் நேற்று (மே 22) மாலை அவருடைய கடையில் தலை, காது உள்ளிட்ட பகுதிகளில் கத்தரிக்கோலால் குத்தப்பட்டு உயிரிழந்து கிடந்துள்ளார்.
இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் டெய்லர் செல்வத்தின் உடலை மீட்டனர். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து குற்றவாளியை தேடினர். அந்த பகுதியில் இருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர்.
அதில், தூத்துக்குடியைச் சேர்ந்த சந்திரமணி என்ற நபர் அங்கு வந்து சென்றது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் மேற்கொண்ட விசாரணையில், சந்திரமணி பேண்ட் ஒன்றை திருத்துவதற்காக செல்வத்திடம் கொடுத்துள்ளார்.
ஆனால் அதை சரியாக செல்வம் தைக்கவில்லை என்று கூறி, நேற்று (மே 22) மாலை சந்திரமணி அவரிடம் சென்று கேட்டுள்ளார். அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதுள்ளது. இதில் ஆத்திரமடைந்த சந்திரமணி, அங்கிருந்த கத்தரிக்கோலை எடுத்து டெய்லர் செல்வத்தை சரமாரியாக குத்தி கொலை செய்துள்ளார். டெய்லர் ஒழுங்காக தைக்காததால், ஆத்திரமடைந்த வாடிக்கையாளர் கத்திரிக்கோலால், அவரை குத்தி கொலை செய்தது அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மேலும் படிங்க: தவெக-வின் சின்னம் என்ன? விஜய் தீவிர ஆலோசனை! எதை தேர்வு செய்வார்?
மேலும் படிங்க: தவெக-வில் இருந்து திமுக-விற்கு தாவிய 20 வயது இன்ஸ்டா பிரபலம்! யார் இந்த வைஷ்ணவி?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ