கள்ளக்காதலுக்காக பெண்ணின் கணவரை வீடு புகுந்து வெட்டிய காதலன்.. நடந்தது என்ன?

Extramarital Affair Crime: வாணியம்பாடி அருகே கள்ளக்காதலுக்காக காதலியின் கணவரை வீடு புகுந்து வெட்டிய நபரை போலீசார் தேடி வருகின்றனர். 

Written by - R Balaji | Last Updated : Nov 13, 2025, 01:55 PM IST
கள்ளக்காதலுக்காக பெண்ணின் கணவரை வீடு புகுந்து வெட்டிய காதலன்.. நடந்தது என்ன?

Extramarital Affair Crime: திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி உமர் நகர் பகுதியை சேர்ந்தவர் அப்புன் ராஜ். இவரது மனைவி ஜீவா. இந்த தம்பதியினருக்கு 6 வயதில் ஒரு மகள் மற்றும் 2 வயதில் ஒரு மகன், என இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்த சூழலில், ஜூவா திருமணம் மீறிய உறவில் ஈடுபட்டுள்ளார். அவர் அதே பகுதியை சேர்ந்த பிரேம்குமார் என வாலிபருடன் காதல் வயப்பட்டு இருவரும் பழகி வந்ததாக கூறப்படுகிறது.  

Add Zee News as a Preferred Source

இது நாளடைவில் ஜீவாவின் கணவர் அப்புன் ராஜுக்கு தெரிய வந்துள்ளது. இதையடுத்து அவர் மனைவி ஜீவாவை கண்டித்துள்ளார். இதன் காரணமாக ஜீவா பிரேம்குமார் உடனான உறவை துண்டித்துள்ளார். இதனால் மனம் உடைந்து போன பிரேம்குமார் பிரிவுக்கு காரணமாக இருந்த அப்புன்ராஜ் மீது ஆத்திரம் அடைந்துள்ளார். 

இந்த நிலையில், நேற்று (நவம்பர் 12) நள்ளிரவு அப்புன் ராஜ் அவரது மனைவி ஜீவா இருவரும் தங்களது பிள்ளைகளுடன் உமர் நகர் பகுதியில் உள்ள வீட்டில் உறங்கிக் கொண்டிருந்தனர். அப்போது,  வீட்டின் பின்பக்க சுவரின் வழியாக ஏறி குதித்து உள்ளே வந்த பிரேம்குமார் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த அப்புன் ராஜ் இடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு கத்தியால் சரமாரியாக வெட்டி உள்ளார்.

இதில் தலை, கை, கால் உள்ளிட்ட 5 இடங்களில் படுகாயம் அடைந்த அப்புன் ராஜ் சிகிச்சைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், மேல் சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.மேலும் சம்பவத்தில் ஈடுபட்டு அப்புன் ராஜை வெட்டிவிட்டு தப்பி ஓடிய பிரேம்குமாரை கிராமிய காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

வாணியம்பாடியில் கள்ளக்காதல் விவகாரத்தில் வீடு புகுந்து கள்ளக்காதலுக்கு இடையூராக இருந்த கணவனை சரமாரியாக வெட்டிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் படிக்க: நாளை பவர் கட்.. தமிழகத்தில் மின்தடை ஏற்படும் பகுதிகளின் முழு லிஸ்ட்!

மேலும் படிக்க: சென்னை மக்களே நோட் பண்ணுங்க. வெளுத்து வாங்கப்போகும் மழை.. வெர்தர்மேன் கொடுத்த அலர்ட்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

 

 

About the Author

Trending News