)
Aadhaar Jobs 2026 Latest: இந்தியா முழுவதும் ஆதார் சேவை மையங்கள் செயல்பட்டு வருகிறது. ஆதார் சேவை யைமத்தில் பல லட்சம் பேர் வேலை செய்து வருகிறது. மத்திய அரசு வேலை, கைநிறைய சம்பளம் என்பது ஆதார் சேவை மையத்தில் வேலை பார்க்க பலரும் காத்திருக்கின்றனர். ஆதார் மத்திய அரசின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வருகிறது. ஆதார் சேவை மையத்தில் வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு அவ்வப்போது வெளியிடப்பட்டு வருகிறது. அந்த வகையில், தற்போது ஆதார் சேவை மையத்தில் வேலை வாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.
நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் ஆதார் சேவை மையத்தில் ஆபரேட்டர் பணிக்கு காலிப் பணியிடங்கள் இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் 337 காலிப் பணியிடங்கள் இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கர்நாடகா, தமிழகத்தில் ஆதார் சேவை மையத்தில் காலிப் பணியிடங்கள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக தமிழகத்தில் பெரம்பலூர் மாவட்டத்தில் ஆதார் சேவை மையத்தில் காலிப் பணியிடங்கள் இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பெரம்பலூர் ஆதார் சேவை மையத்தில் ஒரு காலிப் பணியிடங்கள் இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆதார் சேவை மையத்தில் ஆபரேட்டர் வேலைக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் 12ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 10ஆம் வகுப்பில் தேர்சி, ஐடிஐ படித்திருக்க வேண்டும். அல்லது 10ஆம் வகுப்பு தேர்ச்சி 3 ஆண்டுகள் பாலிடெக்னின் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும். இந்திய தனித்துவ அடையாள ஆணையம் அங்கீகாரம் பெற்ற testing and certifyin agency மூலம் வழங்கப்பட்ட ஆதார் ஆபரேட்டர்/ supervisor certificate விண்ணப்பதாரரிடம் கட்டாயமாக இருக்க வேண்டும்.
ஆதார் சேவை மையத்தில் ஆபரேட்டர் பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் 18 வயது பூர்த்தி அடைந்தவராக இருக்க வேண்டும். இந்த பணிக்கு நேர்காணல் மற்றும் சான்றிதழ் சரிபார்க்கும் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். ஆதார் சேவை மையத்தில் ஆபரேட்டர் பணிக்கு ரூ.25000 வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
1.ஆதார் சேவை மையத்தில் ஆபரேட்டர் பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் முதலில் csc.gov.in என்ற இணையதளத்திற்கு செல்ல வேண்டும்.
2. அங்கு aadhaar operator என்ற ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும்.
3. உங்கள் மாவட்டத்தை (District) தேர்வு செய்து, அறிவிப்பை முழுமையாக படித்து தெரிந்து கொள்ளுங்கள்.
4. பிறகு, apply now என்ற ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும்.
5. விண்ணப்ப படிவத்தில் கேட்கப்பட்டுள்ள விவரங்களை பூர்த்தி செய்து விண்ணப்பிக்க வேண்டும்.
ஆதார் சேவை மையத்தில் ஆபேரட்டர் பணிக்கு விண்ணப்பிக்க மே 20ஆம் தேதி கடைசி நாளாகும். எனவே, விண்ணப்பிக்க தகுதியுள்ள நபர்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பு.
| வேலை | ஆதார் சேவை மையம் |
| பணியின் பெயர் | ஆபரேட்டர் பணி |
| மொத்த காலிப் பணியிடங்கள் | 337 |
| தமிழகத்தில் பெரம்பலூர் | 1 பணியிடம் |
| மாத சம்பளம் | ரூ.25000 |
| விண்ணப்பிக்கும் முறை | ஆன்லைன் |
| அதிகாரப்பூர்வ இணையதளம் | csc.gov.in |
| விண்ணப்பிக்க கடைசி நாள் | மே 20ஆம் தேதி |