தவெக பொதுக்குழு கூட்டத்தில் ஆதவ் ஆர்ஜுனா ஆவேச பேச்சு!

தமிழக வெற்றிக் கழகத்தில் எங்கே சாதி இருக்கிறது. 70 வருஷமாக சாதியை உருவாக்கிவிட்டு தேர்தல் அரசியல் செய்து கொண்டு இருக்கிறீர்கள் என்று ஆதவ் அர்ஜுனா விமர்சனம் செய்துள்ளார்.

Written by - RK Spark | Last Updated : Mar 28, 2025, 01:26 PM IST
  • தமிழக வெற்றிக் கழக பொதுக்குழு.
  • சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்றது.
  • ஆதவ் அர்ஜுனா திமுகவை விமர்சனம்.
தவெக பொதுக்குழு கூட்டத்தில் ஆதவ் ஆர்ஜுனா ஆவேச பேச்சு!

சென்னையில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் பொதுக்குழு கூட்டத்தில் கட்சியின் தேர்தல் பிரச்சார மேலாண்மைப் பொதுச் செயலாளர் ஆதவ் ஆர்ஜுனா பேச்சு திமுக மற்றும் மத்திய அரசை எதிர்த்து பேசியுள்ளார். ஆதவ் ஆர்ஜுனா பேசுகையில், "அண்ணாமலையை செட் செய்து திமுக வைத்துள்ளது. புலி அமைதியாக இருக்கும்போது ஆடு வந்து சம்பந்தம் இல்லாமல் பேசுகிறது. எங்கள் கட்சியையும், தலைவரையும் தொட்டால் உங்கள் உண்மை முகத்தை வெளிகாட்டுவோம். வொர்க் ப்ரம் ஹோம் அரசியல் இல்லை. உங்களை வீட்டுக்கு அனுப்பப்போகும் அரசியல். உங்களுக்கு எல்லாம் ஓய்வு கொடுக்கவே நாங்கள் தயாராகி கொண்டிருக்கிறோம்.

Add Zee News as a Preferred Source

மேலும் படிக்க | விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள 17 தீர்மானங்கள்!

தமிழக வெற்றிக் கழகத்தில் எங்கே சாதி இருக்கிறது. 70 வருஷமாக சாதியை உருவாக்கிவிட்டு தேர்தல் அரசியல் செய்து கொண்டு இருக்கிறீர்கள். யாருக்கு தெரியுதோ, எனக்கு தெரியும். அங்கிருந்துான் வேலை பார்த்துவிட்டு வந்தேன். எம்ஜிஆரும் 20 வருஷத்துக்கு மேலாக அங்கே வேலை பார்த்தார். உண்மை தெரிந்துவிட்டது வெளியே வந்துவிட்டார். திமுகவில் இருக்கும் போது அண்ணாவின் கொள்கையை நிறைவேற்ற முடியவில்லை. ஜெயித்த பிறகு வெளியே வந்து நிறைவேற்றினார். இன்று பெரியார், அண்ணாவின் குறிக்கோளை நிறைவேற்றக்கூடிய ஒரே தலைவர் எங்கள் தலைவர்.

காவல்துறையை யார் கன்ட்ரோல் பண்ணிக்கிட்டு இருக்கிறார். நம்முடைய அப்பா. ஹோம் மினிஸ்டர் சரியில்லை. எந்த ஜாதியாக இருந்தாலும் பரவாயில்லை. எங்களுக்கும், தலைவருக்கும் மனிதம் தான் முக்கியம். ஹிட்லர், முசோலினி அரசியல்போல மோடி, ஸ்டாலின் அரசியல் உள்ளது. அதிமுகவினர் நேரடியாக பாஜகவுடன் கூட்டணி வைத்தனர். அதைவிட மோசமானது மறைமுக கூட்டணி. களத்தில் போராட்டம் நடத்தவில்லை என விமர்சிக்கும் நீங்கள் என்ன போராட்டம் நடத்தியுள்ளீர்கள். கேள்வி கேட்க ஆளே இருக்கக் கூடாது என நினைக்கிறது திமுக. மீடியா முன்பும், மக்கள் முன்பும் மத்திய அரசுக்கு எதிராக போராடுவது போன்று நடிக்கிறது திமுக. போராட்டம் என்றால் என்னவென்று நாங்கள் காட்டுகிறோம். 2 மாதம் காத்திருங்கள். உண்மையான போராட்டம் என்னவென்பது குறித்து 2 மாதங்களில் விஜய் காண்பிப்பார்.

வைகோவை எப்படி காலி பண்ணினார்கள் தெரியுமா?  6 தொகுதிகளை கொடுத்துவிட்டு திமுக சின்னத்தில் நிற்க வைத்துவிட்டார்கள். இன்றைக்கு வைகோவுக்கு சட்டசபையில் உறுப்பினர்களே கிடையாது. கடைசியில் அவரது மகன் அமைச்சர் முன்னாடி கண் கலங்கி அழுகிறார். நான் சொந்த சின்னத்தில்தான் நிற்பேன் என்று. இதுதான் உங்கள் கூட்டணி முறையின் அடக்குமுறை. இதுதான் சர்வாதிகாரம். இதுதான் நாசிசம். இதுதான் ஹிட்லர்.  தமிழகத்தில் உள்ள பிரச்சினைகளுக்கு குரல் கொடுக்காமல் திமுக கூட்டணி கட்சிகள் ஏன் அமைதியாக இருக்கிறது. மேற்கு வங்கத்தில் கம்யூனிஸ்ட் கட்சி அமைதியாக இருக்கும்போது என்படி பிஜேபி 2வது இடத்துக்கு வந்ததோ, அதேபோல பிஜேபியை வளர்ப்பதற்கான எல்லா வேலைகளையும் செய்து கொண்டிருக்கிறது" என்று கேள்வி எழுப்பி உள்ளார்.

மேலும் படிக்க | தவெக OUT - பாஜக IN.. மாஸ்டர் பிளான் போட்ட இபிஎஸ்... முழுப் பின்னணி

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

About the Author

Trending News