)
Aavin Recruitment 2026 Latest: தமிழகம் முழுவதும் ஆவின் நிறுவனங்கள் செயல்பட்டு வருகிறது. ஆவின் நிறுவனத்தில் அவ்வப்போது வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகி வருகிறது. ஆவின் நிறுவனம் பால் மட்டுமில்லாமல் நெய், பனீர், ஐஸ்கிரீம் போன்றவற்றை தயாரித்து மாநிலம் முழுவதும் விற்பனை செய்து வருகிறது.
இதற்கான பணியிடங்கள் அந்தந்த மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் நிறுவனம் மூலம் தமிழக அரசு நிரப்பி வருகிறது. ஆவின் வேலைவாய்ப்புக்காக பலரும் காத்திருப்பார்கள். அந்த வகையில், தற்போது சேலம், திருப்பூரில் ஆவின் வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. ஆவின் வேலைவாய்ப்பு குறித்து விரிவாக பார்ப்போம்.
இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிவிப்பில், சேலம் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியம் நாள் ஒன்றுக்கு 6.80 இலட்சம் லிட்டர் பால், 777 பிரதம கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்கங்களிடமிருந்து கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது.
இந்நிலையில் பால் உற்பத்தியாளர்களின் கால்நடைகளுக்குத் தேவையான வாராந்திர கால்நடை சிகிச்சை, அவசரகால சிகிச்சைகள் கால்நடை காப்பீடு மற்றும் அரசுத் திட்டங்களை தங்குத் தடையின்றி கொண்டு சேர்க்கும் வகையில் கால்நடை சிகிச்சைகளை மேற்கொள்ள தற்சமயம் காலியாக உள்ள 01 கால்நடை மருத்துவ ஆலோசகர் பணிக்கு ஒன்றியத்தின் மூலம் நியமனம் மேற்கொள்ள தகுதி வாய்ந்த நபர் ஒருவரை தேர்ந்தெடுக்கும் வகையில் வருகின்ற 18.06.2026 அன்று காலை 10.00 மணியளவில் சேலம் பால் பண்ணை வளாகம், பயிற்சி நிலையத்தில் நடைபெற உள்ள நேர்முகத் தேர்விற்கு தகுந்த ஆவணங்களுடன் நேரில் கலந்து கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கால்நடை மருத்துவ ஆலோசகர் பணிக்கு கல்வித்தகுதியை பொறுத்தவரை B.V.Sc & AH படித்திருக்க வேண்டும். மேலும், கால்நடை மருத்துவ ஆலோசகர் பணிக்கு மருத்துவ கவுன்சில் பதிவுச்சான்று அவசியம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, தகுதியுள்ள நபர்கள் ஜூன் 18ஆம் தேதி நடக்கும் நேர்முகத் தேர்வில் கலந்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருப்பூர் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியத்தில் உள்ள 3 கால்நடை மருத்துவர் ஆலோசகர் காலிப் பணியிடத்தை ஓராண்டு ஒப்பந்த அடிப்படையில் நியமனம் செய்யும் பொருட்டு மே 15ஆம் தேதி அன்று காலை 11:00 மணியளவில் நேர்முகத் தேர்வு நடைபெற உள்ளது.
நேர்முகத் தேர்வு ஆவின் பால் குளிரூட்டும் நிலையம், வீரபாண்டி பிரிவு, பல்லடம் சாலையில் நடைபெறும். கல்வித் தகுதி வாய்ந்த நபர்கள் அசல் சான்றிதழ்களுடன் நேர்முகத் தேர்வில் கலந்து கொள்ளலாம். கால்நடை மருத்துவ ஆலோசகர் பணிக்கு கல்வித்தகுதியானது B.V.Sc & AH படித்திருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.