Manoj Bharathiraja: நடிகர் மனோஜ் பாரதிராஜா காலமானார் - பிரபலங்கள் இரங்கல்

Manoj Bharathiraja Passed Away: நடிகர் மற்றும் இயக்குநருமான மனோஜ் பாரதிராஜா உடல்நலக்குறைவு காரணமாக இன்று காலமானார்.

Written by - Sudharsan G | Last Updated : Mar 25, 2025, 09:03 PM IST
  • மனோஜ் பாரதிக்கு வயது 48 ஆகும்.
  • தாஜ் மஹால் திரைப்படம் மூலம் அறிமுகமானார்.
  • மணிரத்னத்திடம் உதவி இயக்குநராக பணியாற்றி உள்ளார்.
Manoj Bharathiraja: நடிகர் மனோஜ் பாரதிராஜா காலமானார் - பிரபலங்கள் இரங்கல்

Manoj Bharathiraja Passed Away: நடிகர் மற்றும் இயக்குநருமான மனோஜ் பாரதிராஜா உடல்நலக்குறைவு காரணமாக இன்று காலமானார். அவருக்கு வயது 48. மாலை 6 மணி அளவில் சேத்துப்பட்டில் உள்ள அவரது வீட்டில் இருக்கும்போது, திடீரென மாரடைப்பு ஏற்பட்டு காலமானார். 

Add Zee News as a Preferred Source

Manoj Bharathiraja: மாலை 6 மணியளவில் காலமானார் மனோஜ்

ஒரு மாதத்திற்கு முன்பு, சென்னை வடபழனி சிம்ஸ் மருத்துவமனையில் மனோஜ் பாரதிராஜாவிற்கு ஓப்பன் ஹார்ட் அறுவை சிகிச்சை நடந்துள்ளது. அதன் பிறகு, வீட்டில் இருந்தவாறு சிகிச்சை எடுத்து வந்துள்ளார். இரண்டு, மூன்று தினங்களாக உடல் நலக் குறைவு ஏற்பட்டு இருக்கிறது. திடீர் உடல்நலக்குறைவால் இன்று மாலை 6 மணி அளவில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். அவர் ஏற்கனவே மரணம் அடைந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்ததை அடுத்து அவரது உடல் தற்போது சென்னை சேத்துப்பட்டில் உள்ள  இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது.

Manoj Bharathiraja: தாஜ்மஹால் திரைப்படம் மூலம் அறிமுகமானார்

இவர் இயக்குநர் பாரதிராஜாவின் மகன் ஆவார். அந்த வகையில், பாரதிராஜா தான் இயக்கிய 'தாஜ்மஹால்' திரைப்படத்தின் மூலம் மனோஜை கதாநாயகனாக அறிமுகம் செய்தார். தொடர்ந்து, சமுத்திரம், மாநாடு, அல்லி அர்ஜுனா, வருஷமெல்லாம் வசந்தம், ஈஸ்வரன், மாநாடு, விருமன் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். கடந்தாண்டு இவர் இயக்கிய முதல் திரைப்படமான 'மார்கழி திங்கள்' வெளியானது. குஷி, கற்றது தமிழ் திரைப்படங்களில் நடிக்க வந்த வாய்ப்புகள் தான் தவறவிட்டுவிட்டதாக அவரே ஒரு பேட்டியில் குறிப்பிட்டுள்ளார். இவர் மணிரத்னத்திடம் உதவி இயக்குநராக பணியாற்றி உள்ளார். முதல் படமாக பம்பாயில் இயக்குநர் மணிரத்னத்திடம் உதவி இயக்குநராக பணியாற்றி உள்ளார்.

ஈரநிலம், சாதுரியன் உள்ளிட்ட படங்களில் நடித்தபோது அதில் கதாநாயகியாக நடித்த நடிகை நந்திதா உடன் காதல் ஏற்பட்டது. பின்னர் இந்த ஜோடிக்கு 2006ஆம் ஆண்டில் திருமணம் நடைபெற்றது. மனோஜ் - நந்திதா ஜோடிக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர்.

Manoj Bharathiraja: முதல்வர் இரங்கல்

பாரதிராஜாவின் மகனும், நடிகரும் இயக்குநருமான மனோஜ் பாரதி மறைந்த செய்தி அறிந்து மிகவும் வருத்தமுற்றேன். தனது தந்தையின் இயக்கத்தில் தாஜ்மகால் திரைப்படம் மூலம் அறிமுகமாகி, சமுத்திரம், அல்லி அர்ஜுனா, வருஷமெல்லாம் வசந்தம் எனத் தொடர்ந்து பல திரைப்படங்களில் நடித்து தனக்கென அடையாளத்தை உருவாக்கிக் கொண்டவர் மனோஜ். இயக்கம் உள்ளிட்ட துறைகளிலும் முயன்று பார்த்தவர் மனோஜ்.

இளம் வயதில் அவர் எதிர்பாராதவிதமாக மறைந்துவிட்டது மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது. அன்பு மகனை இழந்து வாடும் இயக்குநர் இமயம் பாரதிராஜா அவர்களுக்கும், அவரது குடும்பத்தினருக்கும், திரைத்துறையைச் சேர்ந்த நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

மேலும் படிக்க | புற்றுநோயால் பாதிப்பு! நடிகர் ஷிஹான் ஹூசைனி மரணம்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

About the Author

Sudharsan G

I’m Sudharsan G, Sub Editor at Zee Tamil News, with over five years of experience in Tamil content writing. I cover Tamil Nadu, national, and international news, along with sports stories that connect with readers. A follower of cricket, cinema, and politics, I bring depth and perspective to every piece. I also have on-screen camera experience, which helps me present news stories in a more engaging and impactful way. Outside work, I enjoy modern Tamil literature and discovering new voices in contemporary writing.

...Read More

Trending News