)
Kamal Haasan Solution On Stray Dogs Issue : தெருநாய்கள் தொல்லை, சமூகத்தில் பெரிய பிரச்சனையாக உருவெடுத்திருக்கிறது. அதிலும், பிரபல டிவி நிகழ்ச்சியான நீயா-நானா-வில் இது குறித்து எழுந்த விவாதங்கள் தற்போது சமூகத்தை திரும்பி பார்க்க வைத்துள்ளது. இந்த நிலையில், நடிகரும் மாநிலங்களவை உறுப்பினருமான கமல்ஹாசனிடம் தெரு நாய் தொல்லையை தடுக்க என்ன வழி என்ற கேள்வி முன் வைக்கப்பட்டது.
கமல்ஹாசன், சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம், “தெருநாய்களால் பொதுமக்கள் பாதிக்கப்படுகின்றனர். அதே சமயத்தில் விலங்கு நல ஆர்வலர்களும் தெருநாய்களுக்கு ஆதரவாக இருக்கின்றனர். இதற்கு தீர்வு என்ன?” என்று ஒரு செய்தியாளர் கேட்டார். அதற்கு “தீர்வு ரொம்ப சிம்பிள்” என்று பதிலளித்த கமல்ஹாசன் அதனை விவரித்தார். விஷயம் தெரிந்தவர்கள், உலக சரித்திரம் தெரிந்தவர்கள், சமூக சுகாதாரம் என்ன என்று தெரிந்தவர்கள், கழுதை எங்கே காணும் என்று கவலைப்படுகிறார்களா? அவையனைத்தும் காணாமல் போய் விட்டதே, அவை நமக்காக எவ்வளவு பொதி சுமந்திருக்கிறாது? யாரும் கழுதையை காப்பாற்ற வேண்டும் என்று பேசுவதில்லை. எல்லா உயிர்களையும் காப்பாத்தனும், எவ்ளோ முடியுமோ காப்பாத்தனும். அவ்வளவுதான் என்னுடைய கருத்து” என்று பேசியிருக்கிறார். இதை கேட்ட மக்கள், வழக்கம் போல குழம்பி இருக்கின்றனர்.
கழுதைகள் முன்னர் போல இல்லாமல் இயல்பாக குறைந்து போயிருக்கின்றன. இவற்றை யாரும் கொன்று அழிக்கவில்லை. ஆனால், சமூக மாற்றத்தால் அவை தானாக மறைந்து போய்விட்டது. அதே போல தெருநாய்கள் பிரச்சனையும் காலப்போக்கில் சரியாகிவிடும். அதற்குள்ளாக எவ்வளவு முடியுமோ, அவ்வளவு உயிர்களையும் காப்பாற்ற வேண்டும் என்பது கமல் பதிலாக இருக்குமோ என்று சிலர் டீ-கோட் செய்து வருகின்றனர்.
பிரச்சனை தலைத்தூக்க காரணம் என்ன?
இந்தியாவிலேயே தமிழ்நாட்டில்தான் ரேபிஸ் நோய் பாதிப்பு அதிகம் என்று ஒரு புள்ளி விவரம் சொல்கிறது. தெருநாய்களால் ஏற்படும் இந்த ரேபிஸ் நோய் பாதிப்பை தடுப்பதற்கு ஊசிகள் மற்றும் மருந்துகள் இருந்தாலும், பாதிப்பு வீரியமாக இருக்கும் போது மனிதர்களை காப்பாற்றுவதற்கான மருந்துகள் இன்னும் தடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. சில நாட்களுக்கு முன்னர், தெரு நாய்களை அப்புறப்படுத்த உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால், விலங்கு நல ஆர்வலர்கள் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்ததால் இந்த தீர்ப்பில் இருந்து உச்ச நீதிமன்றம் பின்வாங்கியது.
விலங்கு நல ஆர்வலர்கள் அரசாங்கத்தின் மீது வைத்த ஒரே குற்றச்சாட்டு, “நாய்கள் அனைத்தையும் பிடித்துக்கொண்டு போனால், அவற்றை ஒரே அடியாக கொன்று விடுவீர்கள்” என்பதுதான். ஆனால் இதை ஆதரிக்கும் சான்றுகள் எதுவும் இல்லை. இதே விஷயம்தான் சமீபத்தில் நீயா நானா நிகழ்ச்சியிலும் விவாதிக்கப்பட்டது. 2001ல் இந்த பிரச்சனை எழுந்த போது, நாய்களுக்கு கருத்தடை செய்யக்கூடாது என்று விலங்கு நல ஆர்வளர்கள் அப்போது போராட்டம் நடத்தினர். இப்போது தெரு நாய்கள் பெருக்கத்திற்கும், ரேபிஸ் பரவுவதற்கும் அதுதான் காரணம் என்பது அரசின் கருத்தாக இருக்கிறது. தெரு நாய்கள் பிரச்சனைக்கு என்ன தீர்வு காணப்படும் என்பதை பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ