‘என் பிள்ளை போல் நினைத்து யாசினை படிக்க வைப்பேன்’ -ரஜினி!!

சாலையில் கிடந்த ரூ. 50 ஆயிரத்தை போலீசாரிடம் ஒப்படைத்த ஈரோடு சிறுவனை நேரில் அழைத்து ரஜினிகாந்த் பாராட்டுத் தெரிவித்தார்!

Last Updated : Jul 17, 2018, 05:17 PM IST
‘என் பிள்ளை போல் நினைத்து யாசினை படிக்க வைப்பேன்’ -ரஜினி!! title=

சாலையில் கிடந்த ரூ. 50 ஆயிரத்தை போலீசாரிடம் ஒப்படைத்த ஈரோடு சிறுவனை நேரில் அழைத்து ரஜினிகாந்த் பாராட்டுத் தெரிவித்தார்!

ஈரோட்டில் துணி வியாபாரம் செய்து வரும் பாட்சா - அப்ரோஸ் பேகம் தம்பதியின் இளைய மகன் முகமது யாசின். அவர் சின்ன சேமூர் அரசி பள்ளியில் 2 ஆம் வகுப்பு படித்து வரும் யாசின், பள்ளி அருகே கிடந்த ரூ.50 ஆயிரம் பணத்தை தனது வகுப்பு ஆசிரியரிடம் கொடுத்துள்ளார்.
 
சிறுவனின் இந்த நேர்மையைக் கண்டு ஆச்சர்யப்பட்டுப்போன ஆசிரியர்கள், யாசினை நேரடியாக ஈரோடு எஸ்.பி.யிடமே அழைத்துச் சென்று அந்தப் பணத்தை ஒப்படைத்திருக்கிறார்கள். இந்தச் சிறுவனின் செயலை பொதுமக்களும் பிரபலங்களும் வெகுவாக பாராட்டி வருகின்றனர். இந்நிலையில் யாசினின் வீட்டுக்குச் சென்ற ரஜினி மன்ற நிர்வாகிகள் சிறுவனையும், அவனின் பெற்றோர்களையும் கௌரவித்துள்ளனர்.

பெற்றோரால் நேர்மையாக வளர்க்கப்பட்ட பிள்ளை என சிறுவன் யாசினிற்கு ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சக்தி கணேசன் புகழ் மாலை சூட்டினார். யாசினின் குடும்ப நிலையை அறிந்து அனைவரும் உதவ முன்வந்த நிலையில், அதை ஏற்காமல் நன்றியை மட்டுமே அவனது குடும்பத்தினர் தெரிவித்தார்கள். அப்போது, நடிகர் ரஜினிகாந்தை சந்திக்க வேண்டும் என யாசின் தெரித்திருந்தான். மேலும், யாசினுக்கு தங்க செயினை பரிசளித்ததொடு அவரின் படிப்பு செலவை நடிகர் ரஜினிகாந்த் பார்த்துக் கொல்லுவதாகவும் தெரிவித்துள்ளார். 

 

Trending News