)
TVK Thadi Balaji About Karur Stampede: திருநெல்வேலியில் தனியார் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் உறுப்பினரும், நடிகருமான தாடி பாலாஜி வருகை தந்தார். நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், "கரூர் சம்பவத்தில் ஏற்பட்ட உயிரிழப்புகள் (தவெக) தலைவர் விஜய்க்கு மன வருத்தத்தை அளித்துள்ளது. அவர் மிகவும் மன உளைச்சலில் இருக்கிறார். நான் பாதிக்கப்பட்ட குடும்பங்களை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தேன். 'இது தலைவருக்கு தெரியாமல் நடந்த ஒரு நிகழ்வு, இதில் அவர் என்ன செய்ய முடியும்?' என்று அவர்களே கூறினார்கள்" என பேசினார்.
மேலும் தொடர்ந்து பேசிய அவர், "தலைவர் விஜய், பாதிக்கப்பட்ட குடும்பத்தினருடன் காணொளி காட்சி மூலம் பேசி ஆறுதல் கூறியுள்ளார். அவருக்கு சிறிது கால அவகாசம் தேவைப்படுகிறது. விரைவில் அவர் அவர்களை நேரில் சந்திப்பார்" என்றும் பாலாஜி நம்பிக்கை தெரிவித்தார்.
மேலும் அவர், "கரூர் போன்ற ஒரு குறுகலான இடத்தில் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது தலைவருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தான் இடத்தின் தன்மை மற்றும் மக்கள் கூட்டம் குறித்து தலைவரிடம் தெரிவித்திருக்க வேண்டும். இது ஒரு விபத்தாக இருந்தாலும், இதன் பின்னணியில் தலைவர் மீது பழி சுமத்தும் நோக்கில் ஏதேனும் சதி நடந்திருக்குமோ என்ற சந்தேகம் எழுகிறது. மேலும், அங்கு காவல்துறையின் பாதுகாப்பும் போதுமானதாக இல்லை.
தலைவர் விஜய் இந்த சம்பவம் குறித்து பேசினால், அது மிகப் பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தும். விரைவில் அவர் பத்திரிகையாளர்களை சந்தித்து, கரூர் சம்பவம் தொடர்பான பல மறைக்கப்பட்ட உண்மைகளை வெளிப்படுத்துவார் என்று நான் நம்புகிறேன்" என்றார்.
கட்சியின் பதவிகள் குறித்து பேசிய அவர், "தலைமைக்கும், தலைவருக்கும் உண்மையாகவும், விசுவாசமாகவும் இருப்பவர்களே பதவிகளுக்கு வர வேண்டும். பதவியை பெற்றுக்கொண்டு செயல்படாமல் இருக்கக் கூடாது, உண்மையாக உழைக்க வேண்டும்" என்று கேட்டுக்கொண்டார்.
TVK News: எப்போது கரூர் செல்கிறார் விஜய்?
கடந்த செப். 27ஆம் தேதி கரூரில் நடைபெற்ற பரப்புரை கூட்டத்தில் ஏற்பட்ட கூட்டநெரிசலில் சுமார் 41 பேர் உயிரிழந்தனர். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு மத்திய அரசு தரப்பில் ரூ.2 லட்சம், தமிழ்நாடு அரசு தரப்பில் ரூ.10 லட்சம், தவெக தரப்பில் ரூ.20 லட்சம் நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது. காயமடைந்தவர்களுக்கும் நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுவரை தவெக விஜய் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்திக்கவில்லை. இதையொட்டி விஜய் கரூர் செல்வதற்கு டிஜிபி அலுவலகத்தில் அனுமதி கேட்டிருந்தார். இதையொட்டி விஜய் வரும் அக். 17ஆம் தேதி கரூர் செல்ல இருப்பதாகவும், நட்சத்திர ஹோட்டலில் பாதிக்கப்பட்டவர்களை சந்திக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. கடும் பாதுகாப்பு, கட்டுப்பாடுகளுடன் பாதிக்கப்பட்டவர்களை விஜய் சந்திக்க இருக்கிறார். விஜய் எப்போது, எங்கு பாதிக்கப்பட்டவர்களை சந்திக்கிறார் என்பது இன்னும் உறுதியாகவில்லை.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ