'சீமான் என்னை திட்டினாலும் பரவாயில்லை...' திமுகவை எதிர்க்க கஸ்தூரி சொல்லும் பிளான் - என்ன தெரியுமா?

Actress Kasthuri: பிராமணர்கள் ஏதாவது குரல் கொடுத்தால் அவர்கள் மீது பொய் வழக்கு போடுகின்றனர் என்றும் திமுகவை எதிர்க்கும் அனைவரும் ஒரே குடையின் கீழ் சேர்ந்து செய்ய வேண்டும் என்றும் நடிகை கஸ்தூரி தெரிவித்துள்ளார். 

Written by - Sudharsan G | Last Updated : Dec 8, 2024, 02:16 PM IST
  • உதயநிதிக்கு தரை குறைவாக பேசுவது ஒன்றும் புதிதல்ல - கஸ்தூரி
  • வெள்ளத்தில் தண்ணீர் வடிந்ததற்கு காரணம் மின்மோட்டார் - கஸ்தூரி
  • சீமான் என்னை திட்டினாலும் பரவாயில்லை - கஸ்தூரி
'சீமான் என்னை திட்டினாலும் பரவாயில்லை...' திமுகவை எதிர்க்க கஸ்தூரி சொல்லும் பிளான் - என்ன தெரியுமா?

Actress Kasthuri Latest News Updates: இந்து மக்கள் கட்சி சார்பில் சனாதன ஆதரவு வழக்கறிஞர்களுக்கான கருத்தரங்கு திருச்சி ஸ்ரீரங்கத்தில் இன்று (டிச. 8) நடைபெற்றது இந்த கூட்டத்தில் இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜுன் சம்பத் நடிகை கஸ்தூரி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இக்கூட்டத்திற்கு பின்னர் நடிகை கஸ்தூரி செய்தியாளர்களை சந்தித்தார்.

Add Zee News as a Preferred Source

அதன்பின்,"நவம்பர் 3ஆம் தேதி இந்து மக்கள் கட்சி சார்பில் சென்னையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் என்ன விஷயங்கள் பேசப்பட்டதோ அது பெரிய விஷயமாகாமல் கஸ்தூரி பேசாத விஷயம்தான் மிகப்பெரிய செய்தியானது. அன்று பேசிய விஷயங்களை மீண்டும் எப்படி ஆக்கபூர்வமாகவும் சட்ட ரீதியாகவும் அணுகுவது என்பது குறித்து இந்த கூட்டத்தில் விவாதித்தோம். பிராமணர்கள் ஏதாவது குரல் கொடுத்தால் அவர்கள் மீது பொய் வழக்கு போடுவதும் அவர்களுக்கு எதிராக பிரச்சாரம் செய்வதும் நடக்கிறது. இதை எப்படி எதிர்கொள்வது என்பது குறித்து இந்த கூட்டத்தில் விவாதித்தோம்.

'தரைக்குறைவாக பேசும் உதயநிதி'

2026இல் திமுக கூட்டணி மைனஸில் செல்லும் என விஜய் கூறியுள்ளார். அப்படி நடந்தால் விஜய்க்கு ஆதரவு கொடுக்கலாம். நீண்ட நாட்களாக திமுகவுடன் வாக்கப்பட்டு விசிக அவர்களுடன் இருக்கிறது. திமுக கூட்டணியில் இருந்து விசிக வெளியே வர வாய்ப்பில்லை. விசிகவில்  திருமாவளவன் இருக்க வேண்டும் அல்லது ஆதவ் அர்ஜூன் இருக்க வேண்டும் என்கிற நிலை தற்போது உருவாகி உள்ளது.

மேலும் படிக்க | ரூ. 3 லட்சம் வரை கடன்... தமிழக அரசின் புதிய திட்டம் - விண்ணப்பிப்பது எப்படி? யார் யாருக்கு உண்டு?

சினிமா செய்திகளை பார்க்கவில்லை என உதயநிதி கூறியுள்ளது ரெட்ஜெயிண்ட் குறித்து பேசியுள்ளார் என்பது தெரிகிறது. உதயநிதிக்கு தரை குறைவாக பேசுவது ஒன்றும் புதிது அல்ல. ஏற்கனவே உதயநிதி சனாதனம் குறித்து பேசி உள்ளார். ரஜினி குறித்தும் தரக்குறைவாக பேசியுள்ளார். தற்போது விஜய், ஆதவ் அர்ஜூன் குறித்தும் அப்படி பேசி உள்ளார். திரும்பத் திரும்ப அவர் அப்படி தான் பேசுகிறார்.

அனைவரும் ஒரே குடையின் வர வேண்டும்...

உதயசூரியனுக்கு எதிர் இரட்டை இலை தான் என கடந்த 60 ஆண்டுகளாகமாய் இருந்து வருகிறது. விஜய்யை பயன்படுத்தி அதிமுகவின் உண்மையான வீச்சையும் அவர்களின் முகத்தையும் மறைக்கிறார்கள். இது ஒரு வியாபார தந்திரம். ஒரு கட்சியின் கூட்டணிக்கு எதிராக அனைத்து கட்சிகளும் தனி தனியாக போராடிக் கொண்டிருக்கிறார்கள். அனைத்து கட்சிகளும் ஒரே குடையின் கீழ் வந்தால் நன்றாக இருக்கும்.  வெள்ளத்தில் தண்ணீர் வடிந்ததற்கு காரணம் மின்மோட்டார் கொண்டு தண்ணீரை உறிஞ்சியதுதான். தானாக தண்ணீர் வடியவில்லை. விஜய், எடப்பாடி பழனிசாமி, அண்ணாமலை ஆகியோரை உசுப்பேத்திவிட்டு திமுக பிரித்தாலும் சூழ்ச்சியை செய்து கொண்டிருக்கிறார்கள். சீமான் என்னை திட்டினாலும் பரவாயில்லை, திமுகவை வீழ்த்த அவர் கொள்கையை ஒதுக்கி வைத்துவிட்டு ஓர் அணியில் ஒன்றிணைய வேண்டும். மக்களின் ஒரே ஆசை திமுகவை வெளியேற்ற வேண்டும் என்பதுதான். அதை திமுகவை எதிர்க்கும் அனைவரும் ஒரே குடையின் கீழ் சேர்ந்து செய்ய வேண்டும்" என்றார்.

மேலும் படிக்க | அகம்பாவம், ஆணவம் இல்லை! திமுகவிற்கு ஆதரவாக பேசிய டிடிவி தினகரன்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

About the Author

Sudharsan G

I’m Sudharsan G, Sub Editor at Zee Tamil News, with over five years of experience in Tamil content writing. I cover Tamil Nadu, national, and international news, along with sports stories that connect with readers. A follower of cricket, cinema, and politics, I bring depth and perspective to every piece. I also have on-screen camera experience, which helps me present news stories in a more engaging and impactful way. Outside work, I enjoy modern Tamil literature and discovering new voices in contemporary writing.

...Read More

Trending News