அந்தணர்களை பொதுவெளியில் தரம் தாழ்த்தி விமர்சனம் செய்வதை நிறுத்திட வேண்டும் என கும்பகோணத்தில் நேற்று இரவு நடைபெற்ற அந்தணர்கள் பாதுகாப்பு மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்து மக்கள் கட்சி சார்பில் கும்பகோணத்தில் நேற்று இரவு அந்தணர்கள் பாதுகாப்பு மாநாடு நடைபெற்றது. இதில் இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜுன் சம்பத், நடிகை கஸ்தூரி, புரட்சித் தமிழகம் கட்சியை சார்ந்த ஏர்போர்ட் மூர்த்தி உள்ளிட்ட பாஜக கூட்டணியில் இடம் பெற்றுள்ள பாமக, தமாக, பிரமுகர்கள் மற்றும் அதிமுகவை சேர்ந்த ராமநாதன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் பேசிய அனைவரும் திமுகவையும், திமுக தலைமையையும் விமர்சனம் செய்து பேசினர்.
மேலும் படிக்க | நாங்கள் இந்திக்கு எதிரானவர்கள் அல்ல - திமுக அமைச்சர் ரகுபதி பேச்சு!
இந்தக் கூட்டத்தில் சிறப்புரையாற்றிய அர்ஜுன் சம்பத் பேசும்போது, அந்தணர்கள் பிரச்சினையை அந்த சங்கப் பிரதிநிதிகளை அழைத்து தமிழக முதல்வர் பேசி தீர்வு காண வேண்டும். அதுவரை தங்களது போராட்டம் தொடரும் என அர்ஜுன் சம்பத் தெரிவித்தார். பொதுவெளியில் ஒன்றிய நிதி அமைச்சரை கூட (ஊறுகாய் மாமி என) தரம் தாழ்த்தி விமர்சனம் செய்து வருகின்றனர். அதையெல்லாம் நிறுத்த வேண்டும். இதற்கு தங்களது போராட்டத்தை தமிழ்நாட்டோடு நிறுத்தி விடாமல் தேசிய அளவில் போராட்டங்களை கொண்டு செல்ல வேண்டும் என அர்ஜுன் சம்பத் தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய நடிகை கஸ்தூரி, நாடாளுமன்ற தொகுதி மறு சீரமைப்பு என்று இல்லாத ஒன்றை முன்வைத்து தேசிய அளவில் தனது கருத்துக்கு நான்கு பேர் தேவை என தமிழக முதல்வர் கூட்டங்கள் நடத்தி வருகிறார். நாடாளுமன்ற தொகுதி மறு சீரமைப்பு என்று ஒன்றிய அமைச்சருக்கு தெரியாததை கூட இவர்கள் பேசி வருகின்றனர். தொகுதி மறு சீரமைப்பு என ஒன்றிய அரசின் திட்டத்தில் இல்லாததை இவர்கள் இருப்பதாக கூறி வருவதாக நடிகை கஸ்தூரி குற்றம் சாட்டினார். இந்தியாவில் மூன்று மொழிக் கொள்கையை நடைமுறைப்படுத்துவதில் தமிழ்நாட்டைத் தவிர வேறு எந்த மாநிலத்திலும் பிரச்சனை இல்லை என்றும் தான் தெலுங்கானாவில் வசிப்பதாகவும், தனது குழந்தை படிக்கும் பள்ளியில் தெலுங்கு கட்டாயம் என்றும் மற்ற மொழி பாடங்கள் அவரவர் விருப்பமென உள்ளது என்று நடிகை கஸ்தூரி தெரிவித்தார்.
முன்னதாக கும்பகோணம் மகாமக குளக்கரையில் இருந்து கூட்டம் நடைபெற்ற இடம் வரை சுமார் 300க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்ட பேரணி நடைபெற்றது. அந்தணர்கள் பாதுகாப்பு மாநாட்டின் முக்கிய பேச்சாளர் அர்ஜுன் சம்பத் பேசும் போதே பார்வையாளர்கள் பகுதியில் இருந்த நபர்கள் வெளியேறி இருக்கைகள் காலியாக இருந்தது. அந்தணர்கள் பாதுகாப்பு மாநாட்டில் பொது வெளியில் அந்தணர்களை பற்றி அவதூறாகவும், கிண்டலும் கேலியுமாக பேசுவதை நிறுத்த வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதாக இந்து மக்கள் கட்சியின் செயலாளர் குருமூர்த்தி தெரிவித்தார்.
மேலும் படிக்க | Fact Check : தமிழ்நாடு மாற்றுத் திறனாளிகளுக்கு உதவித்தொகை மத்திய அரசு வழங்குகிறதா?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









