கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் அதிமுக சார்பில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் 77 பிறந்தநாள் விழா எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் 71 வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம், மாவட்ட செயலாளர் இரா குமரகுரு தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு அக்கட்சியின் பொதுச் செயலாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி கலந்து கொண்டு 126 அடி உயரமுள்ள பிரம்மாண்ட கொடிக்கம்பத்தில் அதிமுக கட்சிக் கொடியை ஏற்றி வைத்தார். பின்னர் 5771 பயனாளிகளுக்கு லேப்டாப், மிக்ஸி கிரைண்டர் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கினார். பிறகு பொதுக்கூட்டத்தில் பேசிய எடப்பாடி பழனிச்சாமி, அதிமுக இதோடு முடிந்துவிட்டது என ஸ்டாலின் கூறுகிறார். ஸ்டாலின் அவர்களே உங்கள் கனவு பகல் கனவு பலிக்காது.
2026- சட்டமன்ற தேர்தலில் அதிமுக அதிக இடங்களில் வென்று தனிப் பெரும்பான்மையாக ஆட்சி அமைக்கும். அம்மா மறைவிற்குப் பிறகு கருணாநிதி எவ்வளவு முயற்சித்தார். அதிமுகவை அழிக்க முடியவில்லை. எனவே ஸ்டாலின் அவர்களே உங்கள் கனவு பலிக்காது. அதிமுகவை உடைக்க நினைத்த ஸ்டாலின் சட்டசபையில் இருந்து சட்டையை கிழித்து கொண்டு சென்றபோதும் ஸ்டாலின் கனவு பலிக்கவில்லை. மக்களை ஏமாற்றி பொய்யான தேர்தல் வாக்குறுதிகளை கவர்ச்சிகரமாக கூறி கொல்லைப்புறமாக வந்தது திமுக ஆட்சி. அதிமுக இதோடு முடிந்துவிட்டது என ஸ்டாலின் கூறுகிறார். ஸ்டாலின் அவர்களே உங்கள் கனவு பகல் கனவு பலிக்காது.. 2026- சட்டமன்ற தேர்தலில் அதிமுக அதிக இடங்களில் வென்று தனிப் பெரும்பான்மையாக ஆட்சி அமைக்கும்
100 நாள் வேலை திட்டத்தில் வேலை செய்யும் பெண்களுக்கு சேர்த்து வழங்குவதாக கூறினீர்கள் அதையும் வழங்கவில்லை. ஏழை மாணவர்கள் கல்விக்கடந்த இரத்து செய்வோம் என திமுக தேர்தல் வந்து கூறியது அனைவரும் ரத்து செய்யவில்லை. முதியோர் உதவி தொகை உயர்த்தப்படும் எனக் கூறினர் அதுவும் உயர்த்தப்படவில்லை. அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வு ஊதிய திட்டத்தை கொண்டு வராமல் நாமத்தை போட்டதுதான் திமுக அரசு எனவும் குற்றச்சாட்டு. 4 லட்சம் அரசியல் காலிப்பணியிடங்களை நிரப்புவோம் என திமுக வினர் கூறினர்.ஆனால் இன்று 50 ஆயிரம் பேருக்கு மட்டும் தான் வேலை வாய்ப்பு வழங்கியுள்ளனர். இன்று திமுக ஆட்சிகக்கு வந்தவுடன் வீட்டு வரி, மின்கட்டணம் விலைவாசி உயர்ந்து விட்டது. அதிமுக ஆட்சியில் அமெரிக்கன் படைப்புழு தாக்க பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு 148 கோடி நிவாரணம் வழங்கியது.
ஸ்டாலினையும், உதயநிதியையும் நம்பி கூட்டுறவு சங்கத்தில் நகைக்கடன் பெற்றவர்கள் ஏமாந்தது தான் மிச்சம். ஸ்டாலின் ஆட்சியில் எங்கு பார்த்தாலும் கொலை கொள்ளை போதை பொருட்கள் கஞ்சா போதை பொருள் என அனைத்தும் அதிகரித்து விட்டது. இளைஞர்கள் போதைக்கு அடிமையாகி தவறு செய்வதை கட்டுப்படுத்த முடியாத ஆட்சி திமுக ஆட்சி... இன்று அனைத்து அரசு அலுவலங்களிலும் லஞ்சம் தலைவிரித்து ஆடுகிறது. கமிஷன், கரப்ஷன், கலெக்ஷன் என மாறிவிட்டது. டாஸ்மாக்கில் குவார்ட்டர் வாங்கினால் ரூ 10 கொடுக்கனும்.. அதனால் 10 - ரூபாய் பாலாஜி சிறைக்கு சென்றார்... ஆண்டுக்கு 4 ஆயிரம் கோடி டாஸ்மாக்கில் ஊழல் நடைபெற்றது.... எங்கள் ஆட்சி காலத்தில் எண்ணற்ற சாலைகள், பாலங்கள் தடுப்பனைகள் கட்டப்பட்டது ... அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்டது என்பதற்காக தலைவாசல் கால் ஆராய்ச்சி கொண்டு வரப்பட்டது என்பதால் அதை 4 ஆண்டுகளாக பூட்டி கிடப்பில் போட்டது திமுக அரசு... விவசாயிகளின் விரோத ஆட்சியை ஸ்டாலின் நடத்தி வருகிறார்.
எங்கள் ஆட்சி காலத்தில் எண்ணற்ற சாலைகள், பாலங்கள் தடுப்பனைகள் கட்டப்பட்டது ... அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்டது என்பதற்காக தலைவாசல் கால் ஆராய்ச்சி கொண்டு வரப்பட்டது என்பதால் அதை 4 ஆண்டுகளாக பூட்டி கிடப்பில் போட்டது திமுக அரசு... விவசாயிகளின் விரோத ஆட்சியை ஸ்டாலின் நடத்தி வருகிறார்... தமிழகம் முழுவதும் ஏழை மக்களுக்கு கொண்டு வந்த அம்மா மினி கிளினிக்குகளை முடக்கிய அரசு திமுக அரசு... மருத்துவமனைகளில் செவிலியர்கள் , மருத்துவர்கள் ஊழியர்கள், மருந்து மாத்திரைகள் இல்லாத அவல நிலை உள்ளது. ஏழை மாணவ, மாணவிகளுக்கு 7,500 - கோடியில் கொண்டு மடிக்கணினி திட்டமும் திமுக அரசால் கைவிடப்பட்டு விட்டது... அதிமுக ஆட்சி காலத்தில்தான் ஆரப்பள்ளி, உயர்நிலைப்பள்ளி, மேல்நிலைப் பற்றி அனைத்து பிரிவு கல்லூரிகளையும் அதிக எண்ணிக்கையில் கொண்டு வந்தது அதிமுக அரசு அதனால்தான் இன்று இந்திய அளவில் உயர்கல்வியில் முதல் இடம் பிடித்தது....
முதல்வர் ஸ்டாலின் 4800 கோடி எடப்பாடி நெடுஞ்சாலைத்துறையில் ஊழல் செய்து விட்டார் எனக் கூறினார்..அந்த துறைக்கு ஒதுக்கப்பட்ட நிதியே 4,400 கோடி ரூபாய் தான் ... வழக்கு தொடர்ந்து தொடர்ந்தவர்களே திரும்ப பெற்றனர். நான் நீதிமன்றத்தில் தொடர்ந்து வாதாடி நிரபராதி என நிருபித்தேன்... திமுக அமைச்சர்கள் மீது நடைபெறும் வழக்குகள் நாங்கள் ஆட்சிக்கு வந்த பின் மீண்டும் தொடர்ந்து நடைபெறும். ஸ்டாலின் அவர்களே இதுவரை பார்த்த பழனிச்சாமி வேறு இனிமேல் பார்க்க போகும் பழனிச்சாமி வேற என ஈ.பி.எஸ் எச்சரிக்கை .... வருகின்ற 2026 ஆம் ஆண்டு தேர்தல் திமுக என்ற கட்சிக்கு விழா தேர்தலாக அமைய வேண்டும். திமுக என்ற அராஜக ஆட்சி தீய சக்தி திமுக சக்தியை அகற்ற வேண்டிய தேர்தலாக அமைய வேண்டும் என கூறினார். இந்த கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் பா மோகன் , எம் எல் ஏ செந்தில்குமார், முன்னாள் எம்எல்ஏக்கள் பிரபு அழகுவேல் பாபு உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டுள்ளனர்.
மேலும் படிங்க: மகளிர் உரிமை தொகை பெற இனி இந்த ஆவணங்கள் மிக முக்கியம்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









