)
திமுக மீண்டும் ஆட்சி அமைக்கும் என்றும், பாஜக தேஜ கூட்டணி ஆட்சி என கூறும்போது அதிமுக தலைவர் மீண்டும் அம்மா ஆட்சி அமைப்போம் என கூறாமல் இருப்பது EDயை பார்த்து பயந்து தானா? என ஓசூரில் புகழேந்தி பேட்டி அளித்துள்ளார். கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூரில் அதிமுக தொண்டர்கள் மீட்பு குழுவை சேர்ந்த பெங்களூரு புகழேந்தி பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், அதிமுக என்கிற கட்சியை டெல்லி தெருக்களில் அடமானம் வைத்து விட்டார்களோ என்கிற வகையில் விற்பனை அக்ரிமெண்ட் மட்டும் தான் போடப்படவில்லை அதுவும் நடக்கும். அதிமுக அலுவலகம் டெல்லிக்கு மாற்றப்பட்டுள்ளதா என்கிற கேள்வி எழுந்துள்ளது.
டெல்லி சென்ற எடப்பாடி பழனிசாமி அதற்கு முன்னதாக பத்திரிகையாளர்கள் சந்திப்பில் மும்மொழி கொள்கை, தொகுதி மறுவரை உள்ளிட்ட காரணங்களுக்காக மத்திய அமைச்சர் அமித் ஷா அவர்களை சந்திக்க செல்கிறோம் என சொல்லாமல் மறுத்தது ஏன்? அதிமுக பாஜக உடன் தான் கூட்டணி என்பது நாடறிந்த உண்மை, உள்துறை அமைச்சரை அப்பாயிண்மெண்ட் வாங்காமல் சந்தித்திருக்க முடியுமா இரவு நேரத்தில் ரகசியமாக சந்தித்தது ஏன்? மீண்டும் ஆட்சி அமைப்போம் என்றும் திமுகவினர் கூறுகிறார்கள். தேசிய ஜனநாயக கூட்டணி தான் தமிழகத்தில் ஆட்சி அமைக்கும் என அமித்ஷா டிவிட்டரில் தெரிவிக்கிறார். மீண்டும் எம்ஜிஆர் ஆட்சி என எடப்பாடி கூறாதது ஏன்? மீண்டும் அம்மா ஆட்சி அமைப்போம் என கேபி.முனுசாமி உள்ளிட்ட தலைவர்கள் கூறாமல் இருப்பது ஏன் அமலாக்கத்துறை வந்துவிடும் என்கிற பயமா? என கேள்வி எழுப்பினார்.
செல்லூர் ராஜூ பேட்டி
செய்தியாளர்களை சந்தித்து பேசிய செல்லூர் ராஜு,"கூட்டணி என்பது எடப்பாடி பழனிச்சாமி சொன்னது தான் நிதர்சனமான உண்மை. அமித்ஷா அவருடைய கருத்தை பதிவு செய்துள்ளார். அதிமுகவை எப்படி வழிநடத்த வேண்டும் என்ற அவருக்கு தெரியும். சட்டமன்றத்தில் எதிர்கட்சியாக இருந்துகொண்டு ஆளுங்கட்சியை விரல் விட்டு ஆட்டிக் கொண்டுள்ளார். சட்டமன்றத்தில் கேட்கின்ற கேள்விகளுக்கு தவறான பதில்களை முதலமைச்சரும், அமைச்சர்களும் சொல்கிறார்கள். திமுக எதிர்கட்சியாக இருந்தபோது சட்டமன்றத்தில் சபையின் மாண்பை காப்பாற்றினார்களா? சபாநாயகர் இருக்கையில் அமர்ந்துவிட்டு ஜனநாயகத்தை பற்றி பேசுகிறார்கள்.
E.P.S - செங்கோட்டையன் ஏன் தனித்தனியாக அமித்ஷா வை சந்திக்க வேண்டும் என்ற கேள்விக்கு, ஏன் தனித்தனியாக சந்தித்தீர்கள் என செங்கோட்டையனிடம் கேளுங்கள். அதிமுக வில் செங்கோட்டையன் மூத்த நிர்வாகி மதிக்கக்கூடியவர். மதிக்ககப்பட்டவர். செங்கோட்டையன் அவரது கருத்தை சொல்லியுள்ளார்.E.P.S யிடம் - செங்கோட்டையன் சொல்லிவிட்டு சென்றாரா? இல்லையா? எனக்கு தெரியாது. செங்கோட்டையன் கூட்டணி தொடர்பாக பேசினார் என்று செய்திகள் வந்ததா? அதிமுக பிரியவில்லை. அனைவரும் ஒற்றுமையாக உள்ளோம். ஒன்றிரண்டு பேர் போவது வழக்கமான ஒன்று.ஒரு தலைவர் சென்றால் அவர் பின்னால் 4 பேர் இருப்பார்கள்" என்றார்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ