Sellur Raju About TVK: 2026ஆம் ஆண்டில் சட்டப்பேரவை தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணியும், அதிமுக - பாஜக அடங்கிய தேசிய ஜனநாயக கூட்டணியும் மோத உள்ளது. புதிதாக களம் காணும் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் திமுக, பாஜக உடன் கூட்டணி சேராமல், தனியாக போட்டியிட உள்ளதாக அறிவித்திருந்தது.
ஆனால், கரூர் கூட்டநெரிசல் சம்பவத்தை தொடர்ந்து, விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்திற்கு கடும் நெருக்கடி ஏற்பட்டிருப்பதாக கூறப்படும் நிலையில், அதிமுக கூட்டணியில் தவெக இணைய உள்ளதாக தகவல்கள் வெளியாகின. அதுமட்டுமின்றி, சமீபத்தில் எடப்பாடி பழனிசாமி, 'மக்களை காப்போம், தமிழகம் மீட்போம்' சுற்றுப்பயணத்தின்போது நாமக்கலில் பேசிக்கொண்டிருந்தார். கூட்டத்தில் இருந்த தொண்டர் ஒருவர் தவெக கொடியை அசைத்துக்கொண்டிருந்தார்.
Sellur Raju: பிள்ளையார் சுழி போட்டாச்சு - இபிஎஸ்
உடனே இதை பார்த்த இபிஎஸ், "இங்கே பாருங்க, தவெக பறக்குது, பிள்ளையார் சுழி போட்டாச்சு, குமாரபாளையத்தில் ஏற்பட்டுள்ள எழுச்சி, ஸ்டாலினின் செவியை கிழித்துக் கொண்டு செல்லப்போகிறது" என பேசியிருந்தார். இது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை உண்டாக்கியது. இருப்பினும், தவெக தரப்பில் இக்கூட்டணி குறித்து ஏதும் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தவில்லை. அதேநேரத்தில், நாமக்கல் குமாரப்பாளையத்தில் தவெக கொடியை அசைத்துக்கொண்டிருந்த தொண்டர் அணிந்திருந்த டீ-சர்டில் அதிமுக கரை இருந்தது. இந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வைரலானது.
இபிஎஸ் பங்கேற்கும் மற்ற கூட்டங்களில் தவெக கொடிகள் பறப்பதையும் பார்க்க முடிந்தது. மேலும் அதிமுக வேண்டுமென்றே ஆட்களை ஏற்பாடு செய்து கூட்டத்தில் தவெக கொடியை பறக்கவிடுவதாக பேச்சுகள் எழுந்தன, டிடிவி தினகரன் உள்ளிட்ட சிலரும் விமர்சித்தனர். இந்நிலையில், மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்த அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ இந்த விமர்சனங்களை முற்றிலும் மறுத்தார்.
Sellur Raju: தவெக தொண்டர்கள் இபிஎஸ்-ஐ விரும்புகிறார்கள்
இதுகுறித்து அவர் கூறுகையில், "எடப்பாடி பழனிசாமி பிரச்சாரக் கூட்டத்தில் தவெக கொடியை காட்டுகிறவர்கள், தவெக தொண்டர்கள். விஜய்க்காக குரல் கொடுத்தது எடப்பாடி பழனிசாமிதான். 'யாருமே எந்த அரசியல் தலைவர்களும் எங்களுக்காக குரல் கொடுக்கவில்லை. எங்களுக்காக குரல் கொடுத்து எங்கள் சூழ்நிலையை எடுத்துச் சொன்னவர் எடப்பாடி பழனிசாமி. எனவே அவர் வந்ததால் நாங்கலெல்லாம் வந்து கொடியை காட்டினோம்' என்று தவெக தொண்டர்கள் கூறுகிறார்கள்.
தவெக தொண்டர்கள் எடப்பாடி பழனிசாமியை விரும்புகிறார்கள், தன்னெழுச்சியாக கட்சி கொடியை காட்டுகிறார்கள். தனக்கு ஒரு பழம் கிடைக்கவில்லை என்றால் அந்த பழம் புளிக்கும் என சொல்வார்கள். அதுபோல தான் விஜய்யின் ஆதரவு கிடைக்காததால் டிடிவி அதிமுக குறித்து விமர்சிக்கிறார். தரம் தாழ்ந்து போகக்கூடிய கட்சி எங்கள் கட்சி கிடையாது.
Sellur Raju: அதிமுககாரன் இழிபிறவி இல்லை
அதிமுகவின் தொண்டர்கள் எவனாவது அடுத்த கட்சியின் கொடியை தூக்கிதாக வரலாறு உள்ளதா? கூட்டணி சேர்ந்தால் தோள் கொடுப்போம், தோளில் தூக்கி கொண்டாடுவோம். உங்களை எதிர்த்தால் தூக்கி போட்டு மிதித்து விடுவோம். இது அதிமுக தொண்டனின் வரலாறு. எங்கள் தலைவர்கள் சாமி என்றால் சாமி, சாணி என்றால் சாணி. எங்கள் தலைவர்கள் பொதுச்செயலாளர் யாரை சாமி என்று சொன்னால் அவரை நாங்கள் கும்பிடுவோம். அதிமுககாரன் அதுபோன்ற இழிபிறவி இல்லை.
அதிமுக பன்மடங்கு நன்றாக இருக்கிறது. ஒரு தொகுதியில் லட்சக்கணக்கான மக்கள் கூடுகிறார்கள். விசிக வன்முறை இயக்கத்தோடு சேர்ந்துவிட்டது. அவரது கட்சி தொண்டர்கள் அந்த வேகத்தை காட்டியிருப்பவர்கள். ஆனாலும் ஒரு கட்டுக்கோப்பு வேண்டும். விஜய் கட்சியை கட்டுக்கோப்பு வேண்டும் என்று சொல்கிறார்.
தன்னுடைய கட்சி தொண்டர்களின் நிர்வாகிகளையும் திருமாவளவன் கண்டிக்க வேண்டும். சேர்ந்த இடம் அப்படி திமுக எப்படியோ அப்படித்தான் விசிகவும் இருப்பார்கள். தலைவர் எம்ஜிஆர் என்றால் ஒரு கெத்து, தலைவருக்கு இணை யாரும் கிடையாது. சீனாவிலும் அரசியலிலும் கொடி நாட்டியவர் எம்ஜிஆர். எம்ஜிஆர் உடன் எவனையும் ஒப்பிட மாட்டோம், எந்த தலைவரையும் ஒப்பிட மாட்டோம்" என கடுமையாக பேசினார்.
மேலும் படிக்க | இபிஎஸ் கூட்டத்தில் தவெக கொடி! கூட்டணியில் விஜய்யா? - அண்ணாமலை சொன்ன பதில் என்ன?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









