வரிச்சலுகை முதல் பயணச்சலுகை வரை: மூத்த குடிமக்கள் அட்டை பயன்கள், தகுதிகள், விண்ணப்பிக்கும் வழிமுறைகள்!

Senior Citizen News: மூத்த குடிமக்கள் அடையாள அட்டையின் (Senior Citizen ID Card) பயன்கள், ₹3 லட்சம் வரையிலான வரிச் சலுகை, பயணச் சலுகைகள் மற்றும் தகுதிகள் பற்றி அறிக. இந்த அட்டைக்கு எப்படி விண்ணப்பிக்கலாம்? தேவையான ஆவணங்கள் என்னென்ன? முழு விவரம் இங்கே!

Written by - Shiva Murugesan | Last Updated : Dec 10, 2025, 05:52 PM IST
  • 60 வயதுக்கு மேல் உள்ளவரா நீங்கள்? அரசு வழங்கும் ₹3 லட்சம் வரிச்சலுகை & பயணச் சலுகைகள்!
  • மூத்த குடிமக்கள் அடையாள அட்டை 2024: சலுகைகள், தகுதிகள், மற்றும் தேவையான ஆவணங்கள் என்னென்ன?
  • உங்கள் பெற்றோருக்காக இதை உடனே பகிருங்கள்! மூத்த குடிமக்கள் அட்டை தரும் மருத்துவ, வங்கிச் சலுகைகள்!
வரிச்சலுகை முதல் பயணச்சலுகை வரை: மூத்த குடிமக்கள் அட்டை பயன்கள், தகுதிகள், விண்ணப்பிக்கும் வழிமுறைகள்!

Senior Citizen Benefits India: நமது வீட்டில் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் இருந்தால், அவர்களுக்கு மூத்த குடிமக்களுக்கான அடையாள அட்டை கண்டிப்பாக வாங்கி வைத்துக்கொள்ளுங்கள். மூத்த குடிமக்கள் அடையாள அட்டை மூலம் பல ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள சலுகைகளை அனுபவிக்க முடியும். மூத்த குடிமக்கலுக்கு இடது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். ஒருவேளை மூத்த குடிமக்களுக்கான அடையாள அட்டை இல்லையென்றால், என்ன செய்ய வேண்டும்?, அந்த அட்டை பெறுவதற்கு என்ன செய்ய வேண்டும்? மூத்த குடிமக்களுக்கான அடையாள அட்டை மூலம் என்னென்ன சலுகைகள் கிடைக்கும்? அரசு கொடுக்கக்கூடிய முக்கியமான சலுகைகள் என்ன?, எப்படி விண்ணப்பிப்பது? தேவையான ஆவணங்கள் என்ன? போன்ற விவரங்களை பார்ப்போம்.

Add Zee News as a Preferred Source

மூத்த குடிமக்களுக்கான அடையாள அட்டை (Senior Citizen ID Card)

இந்த அட்டை, 60 வயதுக்கு மேற்பட்ட இந்தியக் குடிமக்களுக்கு மாநில அரசால் வழங்கப்படும் ஒரு அதிகாரப்பூர்வ ஆவணமாகும். முதியோர்களுக்கு அரசின் நலத்திட்டங்களை நேரடியாக கொண்டு சேர்ப்பதே இதன் முக்கிய நோக்கம். மேலும் மூத்த குடிமக்கள் அடையாள அட்டையை மத்திய அரசு ஊக்குவித்தாலும், அதன் செயல்பாடும், விநியோகமும் பெரும்பாலும் மாநில அரசுகளின் பொறுப்பில் உள்ளன.

அடையாள அட்டை பெறுவதற்கான தகுதிகள் என்ன?

வயது: 60 வயதோ அல்லது அதற்கு மேற்பட்டவராக இருக்க வேண்டும்.
குடியுரிமை: இந்தியக் குடிமகனாக இருக்க வேண்டும்.

அடையாள அட்டை மூலம் கிடைக்கும் சலுகைகள் என்ன?

வரிச் சலுகை: ஆண்டு வருமானம் ₹3 லட்சம் வரை இருந்தால், வரி செலுத்தத் தேவையில்லை.

பயணச் சலுகை: அரசுப் பேருந்துக் கட்டணத்தில் சலுகை மற்றும் விமானக் கட்டணத்தில் சலுகை.

வங்கிச் சலுகை: ஃபிக்ஸட் டெபாசிட் போன்ற கணக்குகளுக்கு சாதாரண வாடிக்கையாளர்களை விட கூடுதல் வட்டி வழங்கப்படும்.

மருத்துவச் சலுகை: மருத்துவமனைக் கட்டணங்களில் சலுகை (ஹாஸ்பிடல் ஃபீஸில் கன்செஷன்).

அடையாள  அட்டையைப் பெற தேவையான ஆவணங்கள் என்ன?

1. வயதுக்கான சான்று (Age Proof):

  • ஆதார் அட்டை அல்லது
  • பிறப்புச் சான்றிதழ் (Birth Certificate)

2. முகவரிச் சான்று (Address Proof):

  • வாக்காளர் அடையாள அட்டை அல்லது
  • ரேஷன் கார்டு

3. அடையாளச் சான்று (Identity Proof):

  • பான் கார்டு

4. புகைப்படம் (Photo):

  • இரண்டு பாஸ்போர்ட் அளவு புகைப்படங்கள்
  • அனைத்து ஆவணங்களின் நகல்களையும் (ஜெராக்ஸ்) கையில் வைத்திருக்க வேண்டும்.

மூத்த குடிமக்களுக்கான அடையாள  அட்டை விண்ணப்பிக்கும் முறை:

ஆன்லைன் (Online) அல்லது ஆஃப்லைன் (Offline) மூலம் விண்ணப்பிக்கலாம்.

தமிழ்நாட்டில் மூத்த குடிமக்கள் அடையாள அட்டை (Senior Citizen ID Card) நிலை என்ன?

தமிழ்நாடு: தமிழ்நாடு அரசு இந்தத் திட்டத்தை விரைவில் நடைமுறைப்படுத்தலாம் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. எனினும், இதற்கான அதிகாரப்பூர்வ இணையதளம் (Official Website) அல்லது விண்ணப்ப செயல்முறை (Application Process) குறித்த அறிவிப்புகள் இன்னமும் வெளியாகவில்லை.

செயலி (Mobile App): சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை சார்பில், மூத்த குடிமக்களுக்கான திட்டங்கள், அரசு அலுவலகங்கள், மருத்துவ மையங்கள் போன்றவற்றை அறிய உதவும் ஒரு 'Senior Citizen Tamilnadu – Mobile App' வெளியிடப்பட்டுள்ளது. இது சலுகை அட்டை அல்ல, தகவல் அறிய உதவும் செயலி.

மாநில வாரியான நடைமுறை: மூத்த குடிமக்கள் அடையாள அட்டையை மத்திய அரசு ஊக்குவித்தாலும், அதன் செயல்பாடும், விநியோகமும் பெரும்பாலும் மாநில அரசுகளின் பொறுப்பில் உள்ளன. கர்நாடகா, மகாராஷ்டிரா, குஜராத், டெல்லி போன்ற சில மாநிலங்களில் இந்த அட்டை விநியோகத்தில் உள்ளது.

தமிழ்நாட்டில் மூத்த குடிமக்களுக்கான சலுகைகள் என்ன?

தமிழ்நாட்டில் அடையாள அட்டை இல்லாவிட்டாலும், மூத்த குடிமக்களுக்கான சில முக்கிய சலுகைகள் ஏற்கனவே நடைமுறையில் உள்ளன:

இலவச பேருந்துப் பயணம்: சென்னை உள்ளிட்ட நகரங்களில், 60 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள், போக்குவரத்துத் துறையால் வழங்கப்படும் டோக்கன்களைப் பயன்படுத்தி மாநகரப் பேருந்துகளில் (சாதாரண மற்றும் விரைவுப் பேருந்துகளில்) இலவசமாகப் பயணிக்கலாம்.

தாயுமானவர் திட்டம்: குறிப்பிட்ட மூத்த குடிமக்கள் பயனாளிகளுக்கு, ரேஷன் பொருட்கள் வீடு தேடிச் சென்று வழங்கப்படும் திட்டம் உள்ளது.

ஓய்வூதியம்: 60 வயதைத் தாண்டியவர்களுக்கு முதியோர் ஓய்வூதியம் வழங்கும் திட்டம் நடைமுறையில் உள்ளது.

மேலும் படிக்க - பட்டா மாறுதல் முதல் முதியோர் உதவித்தொகை வரை - அரசு இ-சேவை மைய அப்டேட்

மேலும் படிக்க - இனி ரூ.10 லட்சம்! மூத்த குடிமக்களுக்கு ஜாக்பாட்.. ஆயுஷ்மான் திட்டத்தில் மேஜர் மாற்றம்!

மேலும் படிக்க - மூத்த குடிமக்களுக்கு குட் நியூஸ்.. பணி ஓய்வுக்கு பிறகு வருமானம் பெறுவது எப்படி?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

About the Author

Shiva Murugesan

Shiva Murugesan

...Read More

Trending News