அதிமுக ஆட்சி அமைந்தவுடன் திமுக வாங்கிய கடன் குறித்து விசாரிக்க விசாரணை கமிஷன் போடப்படும் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கோவையில் தேர்தல் பரப்புரை மேற்கொண்டுள்ளார். கோவை மாவட்டத்தில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தேர்தல் பரப்புரை பிரச்சார பயணத்தை துவக்கியுள்ளார். கோவை துடியலூர் பகுதியில் திறந்தவெளி வாகனத்தில் எடப்பாடி பழனிச்சாமி பொதுமக்களை சந்தித்து பிரச்சாரம் மேற்கொண்டார்.

அப்போது பேசிய அவர், கோவை மாவட்டம் ராசியான மாவட்டம். வரும் வழியில் மக்கள் வெள்ளத்தில் நீந்தி வந்து உள்ளேன். தேர்தலில் 100 சதவீதம் வெற்றி கொடுத்த மாவட்டம். வரக்கூடிய 2026 சட்டமன்றத் தேர்தலில் 10 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும். கவுண்டம்பாளையம் சட்டமன்ற தொகுதி அதிமுகவின் இரும்பு கோட்டை, யாராலும் வெல்ல முடியாது. அத்திகடவு அவிநாசி திட்டத்தில் மாநகர் பகுதியில் பல இடங்களில் குடிநீர் தேவையை நிறைவேற்றி உள்ளது.
கோவையில் எந்த பகுதியில் மக்கள் பிரச்சனை திமுக சரி செய்யவில்லை. அதிமுக ஆட்சியில் சாலைகள் மேம்படுத்தப்பட்டது. திமுக ஆட்சி ஊழல் ஆட்சி, ஊழலுக்காக் கலைக்கப்பட்ட ஆட்சி என்றால் இந்தியாவில் திமுக மட்டும் தான். தினமும் புதிய திட்டம் தொடங்குவார், அவ்வளவுதான் அதன் பின்னர் அதை கண்டுக் கொள்ள மாட்டார். திமுக ஆட்சியில் எந்த சாதனையும் இல்லை. மின்கட்டணம் 50 சத்வீதம், வீட்டு வரி 100 சதவீதம் உயர்த்தி உள்ளனர். குடிநீர், குப்பை வரி போட்டது தான் திமுகவின் சாதனை. மக்களுக்கு என்ன செய்தாய்.
கடன் வாங்கி மகளிருக்கு ஆயிரம் ரூபாய் கொடுக்கும் ஸ்டாலின் உனக்கு வெட்கமாக இல்லை, யார் அந்த கடனை அடைப்பது நாம் தான் அடைக்க வேண்டும். திமுக ஆட்சி அதிக அளவில் கடன் வாங்கி உள்ளனர். 5 இலட்சம் கோடி கடனை திமுக தமிழக மக்கள் தலையில் வைத்து உள்ளது. கொரோனா காலக்கட்டத்தில் அதிமுக அரசு சிறப்பாக கையாண்டது.
அதிமுக ஆட்சி அமைந்தவுடன் திமுக வாங்கிய கடன் குறித்து விசாரிக்க விசாரணை கமிஷன் போடப்படும். அதிமுக வாக்கு போடுங்கள் உரிமையுடன் கேட்கிறோம். நெஞ்சை நிமிர்தி கேட்கிறோம்.. அவ்வளவு திட்டங்கள் செய்து உள்ளோம்.கோவை மக்களுக்கு என்ன செய்தீர். ஆனால் விளம்பரம் மட்டும் தான் செய்து வருகின்றனர் என தெரிவித்தார்.
மேலும் படிக்க | திருச்செந்தூர் குடமுழுக்கு விழா: விண்ணதிர முழங்கிய ‘அரோகரா’ முழக்கம்....!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









