)
Alankulam MLA Manoj Pandian: 2026 சட்டப்பேரவை தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ளன. இதனால், தமிழகத்தில் அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. மீண்டும் ஆட்சி கட்டிலில் அமர திமுக முனைப்பு காட்டி வரும் நிலையில், அதிமுக எப்படியாவது ஆட்சியை பிடிக்க வியூகம் அமைத்து வருகிறது. தேர்தலுக்கு சில மாதங்களே இருப்பதால், அனைத்து கட்சியை பலப்படுத்தவும், தொகுதிகள் வாரியாக கட்சியை அனைத்து மட்டத்திலும் வலுப்படுத்த தீவிரம் காட்டி வருகிறது.
இதற்கிடையில், தேர்தலுக்கு ஓராண்டு முன்பே, அதிமுக பாஜக கூட்டணி அமைத்தது. ஆனால், கூட்டணி அமைந்ததில் இருந்ததே சலசலப்புகளுக்கு பட்சம் இல்லாமல் இருக்கிறது. இதற்கிடையில், அதிமுகவில் இருந்து மூத்த தலைவர்கள் திமுகவில் இணைந்து வருகின்றனர். சமீபத்தில் கூட, அதிமுகவில் இருந்த மூத்த தலைவர் அன்வர் ராஜா திமுகவில் இணைந்தார். இதனை அடுத்து, திமுகவில் அவருக்கு முக்கிய பொறுப்பு வழங்கப்பட்டது.
அதனை தொடர்ந்து, தற்போது ஓ.பன்னீர்செல்வத்தின் வலது கரமான மனோஜ் பாண்டியன் திமுகவில் இணைந்துள்ளார். இவர் ஆலங்குளம் தொகுதி எம்எல்ஏவாக இருந்து வருகிறார். இவர் திமுக பக்கம் சாய்ந்த நிலையில், வரும் 2026 சட்டப்பேரவை தேர்தலில் ஆலங்குளம் தொகுதியில் மனோஜ் பாண்டியன் திமுக சார்பில் போட்டிய அதிக வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது.
ஏற்கனவே, ஆலங்குளத்தில் முன்னாள் அமைச்சர் ஆலடி அருணா குடும்பம் செல்வாக்குமிக்க குடும்பமாக இருந்து வருகிறது. ஆனால், அவர்களது குடும்பத்தில் தற்போது அதிகார போட்டி நிலவி வருவதால், அந்த குடும்பத்தை தவிர, வேறு ஒருவருக்கு வாய்ப்பு தர திமுக திட்டமிட்டதாக கூறப்படுகிறது. இந்த முயற்சியில் எம்.பி. கனிமொழியும் ஈடுபட்டதாக தெரிகிறது.
இதற்கிடையே, முதலமைச்சர் ஸ்டாலினை சந்தித்து ஓ.பன்னீர்செல்வம் பேசியது தமிழ்நாட்டு அரசியலில் பேசுபொருளானது. இச்சூழலில்தான், ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளரான மனோஜ் பாண்டியன், தங்கள் கட்சியில் இணைக்க திமுக முயற்சி மேற்கொண்டது. இந்த நிலையில் தான், ஆலங்குளம் தொகுதி எம்எல்ஏவான மனோஜ் பாண்டியன் திமுகவில் இணைந்துள்ளார். 2026 சட்டப்பேரவை தேர்தலில் ஆலடி அருணா குடும்பத்தை தவிர்த்துவிட்டு, மனோஜ் பாண்டியனை ஆலங்குளம் தொகுதி வேட்பாளராக இறக்குவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளதாக தெரிகிறது. இதன் மூலம், தென் மாவட்டத்தில் திமுக பலம் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
திருநெல்வேலி மாவட்டம் ஆலங்குளம் சட்டமன்ற தொகுதி எம்எல்ஏவாக இருப்பவர் மனோஜ் பாண்டியன். தமிழக சட்டமன்றத்தின் சபாநாயகர் பி.எச்.பாண்டியனின் மகனும் ஆவார். மனோஜ் பாண்டியன் ஜெயலலிதா காலத்திலேயே செல்வாக்கு மிக்க நபராக இருந்தார். ஜெயலலிதா மறைவுக்கு பிறகு, அதிமுக கட்சி இரண்டாக உடைந்த போது, ஓ.பன்னீர்செல்வம் தரப்பு ஆதரவாளராக தொடர்ந்து வந்தார். இந்த நிலையில், அவர் அதிமுகவில் இருந்து திமுகவில் இணைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ