Rajya Sabha Election 2025: தமிழகத்தில் காலியாக உள்ள 6 இடங்களுக்கான மாநிலங்களவை சீட்டுக்கான தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது. திமுக அதன் வேட்பாளர்களை ஏற்கெனவே அறிவித்த நிலையில், அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் இன்று அறிவிக்கப்பட்டனர். வழக்கறிஞர் இன்பதுரை, தனபால் போட்டியிடுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Rajya Sabha Election 2025: அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு
அதிமுகவே தற்போது 2 இடங்களிலும் போட்டியிடுகிறது. அதிமுக கூட்டணியில் இருக்கும் தேமுதிக, 1 மாநிலங்களவை தொகுதியை தங்களுக்கு கேட்டிருந்தது. இந்நிலையில், அதிமுக தேமுதிகவை சமாதானப்படுத்தும் வகையில் முக்கிய முடிவை எடுத்திருக்கிறது.
சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக அலுவலகமான எம்ஜிஆர் மாளிகையில் ஆலோசனை நடைபெற்று வருகிறது. கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் கே.பி.முனுசாமி, எஸ்.பி. வேலுமணி, கோகுல இந்திரா, வளர்மதி ஆகியோர் ஆலோசனையில் ஈடுபட்டனர். சென்னை மாவட்ட செயலாளர்கள் வெங்கடேஷ் பாபு, ஆதி ராஜாராம், சத்யா, ராஜேஷ், கே.பி.கந்தன் ஆகியோரும் வருகை தந்தனர்.
Rajya Sabha Election 2025: 2 வேட்பாளர்கள் யார் யார்?
இந்நிலையில், ஆலோசனை கூட்டத்தின் முடிவில் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டனர். அதிமுக ஆட்சிமன்ற குழுவில் பரிசீலித்து முடிவு எடுக்கப்பட்டதாக கே.பி.முனுசாமி தெரிவித்தார். மேலும், கே.பி.முனுசாமி செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் தேமுதிக குறித்து பேசினார். அவர் கூறுகையில், "அதிமுக கூட்டணியில் தேமுதிக தொடரும். 2026ஆம் ஆண்டில் ஒரு மாநிலங்களவை தேமுதிகவுக்கு வழங்கப்படும்" என வாக்குறுதி அளித்தார்.
2016 - 2021 காலகட்டத்தில் ராதாபுரம் தொகுதியில் ஐ.எஸ். இன்பதுரை சட்டப்பேரவை உறுப்பினராக இருந்தார். தற்போது அதிமுக வழக்கறிஞர் பிரிவுச் செயலாளராக உள்ளார். மேலும் மற்றொரு வேட்பாளரான தனபால், திருப்போரூர் தொகுதியில் கடந்த 1991 - 1996 வரை சட்டப்பேரவை உறுப்பினராக இருந்தார். தற்போது அதிமுக செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட அவைத் தலைவர், மாவட்ட ஊராட்சிக் குழு முன்னாள் தலைவர் ஆவார். ஆதிதிராவிடர் வகுப்பைச் சார்ந்த பிஎச்டி முடித்தவர். நன்கு படித்தவர் என்பதாலும் இவருக்கு மாநிலங்களவைக்கு செல்ல வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது என கூறப்படுகிறது.
Rajya Sabha Election 2025: 6 இடங்கள் காலி
மாநிலங்களவையில் திமுகவை சேர்ந்த வில்சன், சண்முகம், அப்துல்லா, மதிமுகவின் வைகோ, அதிமுகவை சேர்ந்த சந்திரசேகரன், பாமக தலைவர் அன்புமணி ஆகிய 6 பேரின் பதவிக்காலம் ஜூலை 24ஆம் தேதியுடன் நிறைவு பெறுகிறது. காலியாக உள்ள இந்த 6 இடங்களுக்கு வரும் ஜூன் 19ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Rajya Sabha Election 2025: திமுக சார்பில் போட்டியிடும் 4 வேட்பாளர்கள்
இதற்கான வேட்புமனு தாக்கல் நாளை (ஜூலை 2) தொடங்கி ஜூன் 9ஆம் தேதி வரை நடைபெறுகிறது. பெரும்பாலும் போட்டியின்றி இந்த 6 பேரும் தேர்வு செய்யப்படுவார்கள். திமுக சார்பில் வில்சன், எஸ்.ஆர். சிவலிங்கம், கவிஞர் சல்மா ஆகியோரும், திமுக கூட்டணி சார்பில் மநீம தலைவர் கமல்ஹாசன் போட்டியிடுகிறார்.
மேலும் படிக்க | ரூ.1.50 கோடி தொழில் கடன் வேண்டுமா? தமிழ்நாடு அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
மேலும் படிக்க | கட் ஆப் மதிப்பெண் என்றால் என்ன? அது எவ்வாறு கணக்கீடு செய்யப்படுகிறது தெரியுமா?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









