திமுகவுக்கு சவாலாகும் அதிமுக - பாஜக கூட்டணி? விஜய் வாக்கு வங்கி யாரை பாதிக்கும்?

Tamilnadu Assembly Election : தமிழ்நாட்டை பொருத்தவரை திமுக - அதிமுக தான் மாறி மாறி ஆட்சியமைக்கும். இப்போது ரேசில் விஜய்யின் தவெக இணைந்திருந்தாலும், அவருக்கான வெற்றி வாய்ப்பு பெரிதாக இல்லை. சமீபத்தில் அதிமுக மீண்டும் பாஜகவுடன் கூட்டணி அமைத்துக்கொண்டது. இந்த சூழலில் இவர்களுக்கான வெற்றி வாய்ப்பு குறித்து பார்க்கலாம்.

Written by - Bhuvaneshwari P S | Last Updated : Apr 17, 2025, 07:07 PM IST
  • சூடுபிடிக்கும் தமிழ்நாடு தேர்தல் களம்
  • அடுத்த ஆண்டு சட்டப்பேரவை தேர்தல்
  • அதிமுக - பாஜக கூட்டணியில் இணையும் கட்சிகள்
திமுகவுக்கு சவாலாகும் அதிமுக - பாஜக கூட்டணி? விஜய் வாக்கு வங்கி யாரை பாதிக்கும்?

Tamilnadu Assembly Election News : 2021 தேர்தலில் அதிமுக - பாஜக கூட்டணி அமைத்தது. ஆனால் அந்த கூட்டணி வெற்றி பெறவில்லை. அடுத்ததாக நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுகவும் பாஜகவும் தனித்து போட்டியிட்டு படுதோல்வி அடைந்தது. எதிர்கட்சியான அதிமுக ஒரு சீட் கூட வெற்றி பெறவில்லை. அதன்பின்பு பாஜகவும், டிடிவி தினகரன், ஓபிஎஸ் என தேவையில்லாமல் கூட்டணி வைத்ததாக வருந்தியது. ஆனால் இப்போது எடப்பாடி பழனிசாமியை முதல்வர் வேட்பாளராக ஏற்றுக்கொண்டு பாஜக மீண்டும் அதிமுகவுடன் கூட்டணி அமைத்துள்ளது. அதோடு அண்ணாமலை தொடர்ந்து அதிமுகவை சீண்டிய நிலையில், அவரும் கூட்டணி அமையும் நாளன்று மாற்றப்பட்டார்.

Add Zee News as a Preferred Source

கடந்த 5 தேர்தல்களை எடுத்துப் பார்த்தால், திமுக 2 முறையும், அதிமுக 3 முறையும் வென்றுள்ளது. 2001, 2011,2016-ல் நடந்த தேர்தல்களில் அதிமுகவும், 2006, 2021-ல் நடந்த தேர்தல்களில் திமுகவும் வெற்றி பெற்றுள்ளன. இதில் 2001-ல் திமுக கூட்டணி 31 இடங்களிலும், 2011-ல் 23 இடங்களிலும் திமுக வெற்றி பெற்றது. 2011-ல் எதிர்கட்சி அந்தஸ்தை கூட திமுக பெறவில்லை. அதேபோல அதிமுக 2006-ல் 61 இடங்களிலும், 2021-ல் 66 இடங்களிலும் மட்டுமே வென்றிருந்தது. 

இப்போது திமுக காங்கிரசுடன் கூட்டணியில் உள்ளது. அதிமுக பாஜகவுடன் கூட்டணியில் உள்ளது. மத்தியில் காங்கிரசுக்கு பெரிய மவுசு இல்லாத நிலையில், 3வது முறையாகவும் பாஜக தான் வென்றது.  திமுக கூட்டணியில் உள்ள விசிகவுக்கு தலித் ஓட்டு வங்கி உள்ளது. அதோடு கம்யூனிஸ்டுகளின் ஆதரவும் உள்ளது. காங்கிரசுக்கு பெரிய அளவு வாக்கு வங்கி இப்போது இல்லை. அதோடு இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக், மதிமுகவும் கூட்டணியில் உள்ளது. 

அதிமுகவில் பாஜக கூட்டணி தவிர வேறு பெரிய கூட்டணி சொல்லிக்கொள்ளும் படி இல்லை. தேமுதிக கூட்டணியில் இருந்தாலும், விஜயகாந்த் மறைவுக்குப் பிறகு கட்சி சற்று வலுவிழந்து காணப்படுகிறது. பாமகவில் இப்போது அப்பா மகனுக்கு பிரச்சனை இருப்பதால் கட்சியின் எதிர்காலம் தடுமாறுகிறது. இதனால் அதிமுக - பாஜக கூட்டணி வலுவானதாக பார்க்கப்படுகிறது. அதிமுக கிராப்புறங்களில் வலுவாக இருந்தாலும், நகரப்புறங்களில் சற்று வாக்கு வங்கியில் பின் தங்கியே உள்ளது. அதேபோல பாஜக நகரப்புறங்களில் மட்டுமே வலுவாக உள்ளது. பாஜகவின் புதிய மாநில தலைவரான நயினார் நாகேந்திரன் வசிக்கும் தென்மாவட்டங்களிலும் கணிசமான வாக்குகளை அதிமுக - பாஜக கூட்டணி பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இப்போது அதிமுக - பாஜக கூட்டணி மேற்கு மற்றும் தெற்கு தமிழகத்தில் வலுவாக உள்ளது என்று கூறப்படுகிறது. கடந்த மக்களவை தேர்தலில் அதிமுக மற்றும் பாஜக தனித்து போட்டியிட்டன. அப்போது திமுக கூட்டணி 47 சதவீத வாக்குகளை பெற்றது. அதேநேரம், அதிமுக 23 சதவீத வாக்குகளையும், பாஜக கூட்டணி 18 சதவீத வாக்குகளையும் பெற்றது. ஒருவேளை அதிமுக மற்றும் பாஜக கூட்டணி அமைத்து போட்டியிட்டு இருந்தால், அதிகபட்சம் 13 தொகுதிகள் வரை வெற்றி பெற்று இருக்கலாம் என அப்போது கணிக்கப்பட்டது. மக்களவை தேர்தலில் பெற்ற வாக்கு சதவீத அடிப்படையில் 221 சட்டமன்ற தொகுதிகளில் திமுக கூட்டணி முன்னிலை பெற்றது. அதிமுக 10 தொகுதிகளிலும், பாஜக 3 தொகுதிகளிலும் மட்டுமே வெற்றி பெற்றது. சேர்ந்து போட்டியிட்டு இருந்தால், 84 தொகுதிகள் வரை அதிமுக - பாஜக கூட்டணி முன்னிலை பெற்று இருக்கலாம். ய

தற்போது முதலமைச்சர் ஸ்டாலின் பிரபலமானவராக இருக்கிறார். அவர் இந்தி திணிப்பு, மாநில அரசு உரிமைகள் என தொடர்ந்து பேசி வருகிறார். பாஜக கூட்டணிக்கு சென்றதால் இனி அதிமுக எப்படி செயல்படும் என்பதை பொருத்திருந்து தான் பார்க்க வேண்டும். அதிமுக - பாஜக கூட்டணியை அக்கட்சியின் தொண்டர்கள் எப்படி பார்க்கிறார்கள்? தேர்தலில் இணைந்து பணியாற்றுவார்களா என்பதை எல்லாம் பார்த்து தான் கட்சியின் வாக்குவங்கி முடிவாகும். அதிமுக - பாஜக கூட்டணி திமுகவுக்கு சற்று சவால் என்றாலும், விஜய்யின் வாக்குவங்கி யாரை பாதிக்கும் என்பதும், கணிக்கமுடியாத ஒன்றாகவே உள்ளது.

மேலும் படிக்க | 'இந்துக்களை புண்படுத்துவதே வேலை' கொந்தளித்த அதிமுக, பாஜக - சேகர்பாபு செய்தது என்ன?

மேலும் படிக்க | Live | அமைச்சரவை கூட்டத்தில் முக்கிய முடிவுகள்; ஆளுநர் திடீர் டெல்லி பயணம், MI vs SRH மேட்ச் அப்டேட்ஸ்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News