அதிமுக - பாஜக கூட்டணி வரலாறு: இதுவரை சந்தித்த தேர்தல்களும்... வெற்றி, தோல்விகளும்...

AIADMK - BJP Alliance: தமிழ்நாடு தேர்தல் வரலாற்றில், அதிமுக - பாஜக கூட்டணி சந்தித்த வெற்றி, தோல்விகள் குறித்து இங்கு விரிவாக காணலாம்.

Written by - Sudharsan G | Last Updated : Apr 12, 2025, 09:23 AM IST
  • 1998இல் முதல்முறையாக அதிமுக - பாஜக கூட்டணி உருவானது.
  • பல முறை அதிமுக - பாஜக கூட்டணி முறிந்துள்ளது.
  • கடைசியாக 2021 சட்டப்பேரவை தேர்தலில் இந்த கூட்டணி போட்டியிட்டது.
அதிமுக - பாஜக கூட்டணி வரலாறு: இதுவரை சந்தித்த தேர்தல்களும்... வெற்றி, தோல்விகளும்...

AIADMK - BJP Alliance: 2026 தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு மீண்டும் அதிமுக - பாஜக கூட்டணி உருவெடுத்துள்ளது. அந்த வகையில், தமிழக தேர்தல் வரலாற்றில், அதிமுக - பாஜக கூட்டணி சந்தித்த வெற்றி, தோல்விகள் குறித்து இங்கு விரிவாக காணலாம். 

Add Zee News as a Preferred Source

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் தலைமையில்தான் தமிழ்நாட்டில் தேசிய ஜனநாயக கூட்டணி அமைகிறது என மத்திய உள்துறை அமைச்சரும், பாஜகவின் மூத்த தலைவருமான அமித்ஷா நேற்று (ஏப். 11) சென்னையில் அறிவித்தார். குறைந்தபட்ச செயல்திட்டம் அமைக்கப்படும் எனவும் 2026இல் NDA கூட்டணிதான் வெல்லும் என்றும் அமித்ஷா நம்பிக்கை தெரிவித்திருந்த நிலையில், அதிமுக - பாஜக கூட்டணியின் வரலாறை திரும்பிப் பார்ப்பது காலத்தின் கட்டாயம் ஆகிறது.

AIADMK - BJP Alliance: 1998 மக்களவை தேர்தல்

அதிமுக - பாஜக முதல்முறையாக கூட்டணி உருவானது. அப்போதைய அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதாவின் தலைமையில் கூட்டணி இந்த தேர்தலை சந்தித்தது. அதிமுக 23, பாமக, மதிமுக தலா 5, ஜனதா கட்சி 1, பாஜக 5 தொகுதிகளிலும் போட்டியிட்டன. 

இந்த தேர்தலில் அதிமுக 18, பாமக 4, பாஜக 3, மதிமுக 3, ஜனதா கட்சி 1, தமிழக ராஜிவ் காங்கிரஸ் 1 என 30 தொகுதிகளை இந்த கூட்டணி கைப்பற்றியது. ஆனால் ஓராண்டிலேயே கூட்டணி முறிந்து, வாஜ்பாயும் பிரதமர் பதவியை இழந்தார்.

மேலும் படிக்க | MGR, ஜெயலலிதா விசுவாசி... நெல்லையின் செல்லப்பிள்ளை - யார் இந்த நயினார் நாகேந்திரன்?

AIADMK - BJP Alliance: 2004 மக்களவை தேர்தல் 

பாஜக 1998 தேர்தலுக்கு பின் 1999 மக்களவை தேர்தல் மற்றும் 2001 சட்டப்பேரவை தேர்தலில் திமுகவுடன் கூட்டணி அமைத்தது. 2002 குஜராத் கலவரத்திற்கு பின்னர் திமுக பாஜக உடனான உறவை முறித்துக்கொண்டது. தொடர்ந்து 2004 மக்களவை தேர்தலில் அதிமுக மீண்டும் பாஜகவுடன் கூட்டணி வைத்தது. அதிமுக 33 தொகுதியிலும், பாஜக 6 தொகுதியிலும் போட்டியிட்டன. 

ஆனால், இந்த கூட்டணி ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறவில்லை. இதன்பின்னரும் கூட்டணி முறிந்தது. திமுக கூட்டணி 39 தொகுதிகளிலும் வென்றன. தெரிந்தோ, தெரியாமலோ பாஜக உடன் கூட்டணி வைத்துவிட்டதாகவும் இனி அப்படியொரு தவறைச் செய்யமாட்டேன் என்றும் ஜெயலலிதா அப்போது பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது. 

AIADMK - BJP Alliance: 2019 மக்களவை தேர்தல்

இதன்பின் ஜெயலலிதா மறையும் வரை அதிமுக, பாஜக உடன் கைக்கோர்க்கவில்லை. 2014 மக்களவை தேர்தலில் மோடி அலை வீசியபோது கூட ஜெயலலிதா, 'அந்த மோடி இல்லை, இந்த லேடியா' என பாஜகவுக்கு எதிர் மனநிலையில் பேசியது கவனிக்கத்தக்கது. அப்படியிருக்க, ஜெயலலிதா மறைவு, அதிமுகவில் நிலவிய குழப்பங்கள் ஆகியவை மீண்டும் அதிமுக - பாஜக கூட்டணிக்கான வாய்ப்புகளை உருவாக்கிக் கொடுத்தது. 
இந்த தேர்தலில் அதிமுக 20, பாமக 7, பாஜக 5, தேமுதிக 4, புதிய நீதி கட்சி, புதிய தமிழகம் மற்றும் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலா 1 தொகுதியில் போட்டியிட்டன. 39 தொகுதிகளிலும் அதிமுக - பாஜக கூட்டணி தோல்வியை தழுவியது. திமுக கூட்டணி 39 தொகுதிகளிலும் வென்றது.

மேலும் படிக்க | பாஜக மாநில தலைவரானார் நயினார் நாகேந்திரன்... போட்டியின்றி தேர்வு!

AIADMK - BJP Alliance: 2021 சட்டப்பேரவை தேர்தல்

எடப்பாடி பழனிசாமி - ஓபிஎஸ் தலைமையில் அதிமுக, பாஜகவுடன் இணைந்து இந்த தேர்தலை சந்தித்தது. இந்த கூட்டணியில் அதிமுக 179, பாமக 23, பாஜக 20, தமிழ் மாநில காங்கிரஸ் 6, பெருந்தலைவர் மக்கள் கட்சி, தமிழக மக்கள் முன்னேற்ற கழகம், மூவேந்தர் முன்னேற்ற கழகம், அனைத்திந்திய மூவேந்தர் முன்னணி கழகம், புரட்சி பாரதம், பசும்பொன் தேசிய கழகம் ஆகியவை தலா 1 தொகுதிகளில் போட்டியிட்டன. 

இதில் அதிமுக 66, பாமக 5, பாஜக 4 தொகுதிகளில் என 75 தொகுதிகளை மட்டுமே தேசிய ஜனநாயக கூட்டணி பெற்றது. இதன்பின்னர், எடப்பாடி பழனிசாமி - அண்ணாமலை இடையே நிலவிய மோதல் போக்கு காரணமாக கூட்டணி உடைந்தது. இரு தரப்பு தலைவர்களும் மாறி மாறி குறைக்கூறத் தொடங்கினர்.

AIADMK - BJP Alliance: யாருக்கு லாபம்?

தற்போது அதிமுக முழுமையாக எடப்பாடி பழனிசாமி வசம் உள்ளது. ஓ. பன்னிர்செல்வம், டிடிவி தினகரன் தரப்பு ஒன்றிணைந்துள்ளன. இது அதிமுகவுடன் ஐக்கியமாகுமா என்ற கேள்வியும் மற்றொரு புறம் இருக்க, தற்போது மீண்டும் பாஜகவுடனான கூட்டணியை புதுப்பித்துள்ளது அதிமுக. அதிமுக - பாஜக இடையேயான இத்தனை ஆண்டுகால தேர்தல் கூட்டணி வரலாற்றில் பாஜகவுக்கே அதிக லாபம் இருந்திருக்கிறது. 

1998 மக்களவை தேர்தலை தவிர்த்து மற்ற தேர்தல்களில் இந்த கூட்டணி சோபிக்கவில்லை. அப்படியிருக்க, 2026 சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு உருவாகியிருக்கும் தற்போதைய அதிமுக - பாஜக கூட்டணி ஜொலிக்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

மேலும் படிக்க | அமைச்சர் பொன்முடி திமுக கட்சி பொறுப்பில் இருந்து நீக்கம் - முழு விவரம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

About the Author

Sudharsan G

I’m Sudharsan G, Sub Editor at Zee Tamil News, with over five years of experience in Tamil content writing. I cover Tamil Nadu, national, and international news, along with sports stories that connect with readers. A follower of cricket, cinema, and politics, I bring depth and perspective to every piece. I also have on-screen camera experience, which helps me present news stories in a more engaging and impactful way. Outside work, I enjoy modern Tamil literature and discovering new voices in contemporary writing.

...Read More

Trending News