'இந்துக்களை புண்படுத்துவதே வேலை' கொந்தளித்த அதிமுக, பாஜக - சேகர்பாபு செய்தது என்ன?

TN Latest News Updates: முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நினைவிடத்தில், கோபுரம் படத்தை வைத்து சேகர்பாபு வெளியிட்ட புகைப்படத்திற்கு கடும் எதிர்ப்புகள் கிளிம்பியிருக்கின்றன.

Written by - Sudharsan G | Last Updated : Apr 17, 2025, 12:34 PM IST
  • இன்று சட்டப்பேரவையில் இந்து அறநிலையத்துறை மானிய கோரிக்கை விவாதம்
  • அதிமுக, பாஜக தரப்பில் கடும் கண்டனங்கள் எழுந்துள்ளன.
  • அண்ணாமலையும் இதற்கு கடுமையாக எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
'இந்துக்களை புண்படுத்துவதே வேலை' கொந்தளித்த அதிமுக, பாஜக - சேகர்பாபு செய்தது என்ன?

Tamil Nadu Latest News Updates: தமிழ்நாடு சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த மார்ச் 14ஆம் தேதி தொடங்கியது. மார்ச் 14ஆம் தேதி பொது பட்ஜெட்டும், மார்ச் 15ஆம் தேதி வேளாண் பட்ஜெட்டும் சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. மார்ச் 21ஆம் தேதி வரை பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்றது.

Add Zee News as a Preferred Source

TN Latest News Updates: நடப்பு சட்டப்பேரவை தொடர்

அதன்பின், கடந்த மார்ச் 24ஆம் தேதியில் இருந்து விடுமுறை நாள்களை தவிர்த்து, தொடர்ந்து துறை ரீதியான மானிய கோரிக்கை விவாதம் நடைபெற்று வருகிறது. வரும் ஏப்ரல் 30ஆம் தேதிவரை இந்த சட்டப்பேரவை கூட்டத்தொடர் நீடிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சட்டப்பேரவையில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முதலமைச்சர் ஸ்டாலின் 110 விதியின்கீழ் பல்வேறு அறிவிப்புகளையும் வெளியிட்டிருந்தார். நேற்று முன்தினம் மாநில உரிமைகளை பாதுகாக்க ஓய்வுபெற்ற முன்னாள் நீதிபதி குரியன் ஜோசப் தலைமையிலான உயர்நிலை குழு அமைக்கப்படும் என முதல்வர் அறிவித்தார். தொடர்ந்து, சட்டப்பேரவையில் உள்ளாட்சி அமைப்புகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு பிரதிநிதித்துவம் மசோதாவும் நேற்று (ஏப். 16) தாக்கல் செய்யப்பட்டது.

TN Latest News Updates: பரபரப்பை கிளப்பும் சேகர்பாபு பகிர்ந்த புகைப்படங்கள்

இந்நிலையில், சட்டப்பேரவையில் இந்து சமய அறநிலையத்துறையின் மீதான மானியக் கோரிக்கை விவாதம் நடைபெற இருக்கிறது. இதை முன்னிட்டு, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு அவரது X பக்கத்தில்,"முதலமைச்சர் ஸ்டாலினின் நல்வழிகாட்டுதலின்படி, இன்று (ஏப். 17) 2025-26 நிதியாண்டிற்கான மானியக் கோரிக்கையை முன்னிட்டு, பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர் கருணாநிதி ஆகியோரின்  நினைவிடங்களுக்கு சென்று மலர் தூவி மரியாதை செலுத்தினேன்" என குறிப்பிட்டு அவர் நினைவிடங்களில் மரியாதை செலுத்தும் புகைப்படங்களையும் பதிவிட்டிருந்தார்.

TN Latest News Updates: சமாதியில் கோபுரம்...

அந்த புகைப்படங்களில், சமாதியின் மீது மலர் அலங்காரம் செய்யப்பட்டு அதற்கு மேல் இந்து அறநிலையத்துறை என குறிப்பிட்டு கோயில் கோபுரத்தின் புகைப்படம் ஒன்றும் வைக்கப்பட்டிருந்தது. இது முக்கிய எதிர்க்கட்சிகளான அதிமுக மற்றும் பாஜக இடையே கடும் எதிர்ப்புகளை சம்பாதித்துள்ளது. இந்து மத உணர்வுகளை புண்படுத்தும் வகையில், இந்த செயல் உள்ளதாக கண்டனம் தெரிவித்துள்ளனர்.

TN Latest News Updates: 'தீயசக்தியின் புதைவிடத்தில் கோபுரம்'

இதுகுறித்து அதிமுக தொழில்நுட்ப அணி அதன் X பக்கத்தில், கருணாநிதி சமாதி மேல் கோயில் கோபுரம். மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பு தரத் தெரியாத ஸ்டாலின் மாடல் அரசு என்றும் இறந்தவர் சமாதியில் அடிப்படை அறிவு உள்ள எவராவது கோபுரம் வைப்பார்களா? என்றும் குற்றஞ்சாட்டியிருக்கிறது. 

மேலும், அந்த பதிவில்,"உங்கள் தலைவரை மகிழ்விக்க, குடும்ப எஜமானர்களுக்கு விசுவாசம் நிரூபிக்க, கோடிக்கணக்கான மக்களின் உணர்வுகளைக் கொச்சைப் படுத்துகிறீர்களா சேகர்பாபு?. 'ஒன்றே குலம் ஒருவனே தேவன்' என்றார் அண்ணா. ஆனால், அந்த கொள்கைக்கும் மதிப்பளிக்காமல், அடிபொடிகளை ஏவிவிட்டு கடவுள் நிந்தனைகளை செய்வதையே முழுநேர வேலையாகக் கொண்ட தீயசக்தியின் புதைவிடத்தில் கோபுரத்தை வைப்பதை விட, சமயத்திற்கும் மக்களின் கடவுள் நம்பிக்கைக்கும் இந்த ஸ்டாலின் மாடல் அரசு செய்யக்கூடிய துரோகம் ஏதேனும் உண்டா?" என பதிவிடப்பட்டுள்ளது.

TN Latest News Updates: 'தொழில் பேட்டியில் வரம்பு மீறிய சேகர்பாபு' 

அமைச்சர் சேகர்பாபுவின் செயலுக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் தமிழ்நாடு பாஜகவின் முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலையும் அவரது X பக்கத்தில் பதிவு ஒன்றை போட்டுள்ளார். அதில், "திமுக அமைச்சர்கள் இடையே, முதலமைச்சர் குடும்பத்துக்கு யார் சிறந்த கொத்தடிமையாக இருப்பது என்ற போட்டியில், மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் நினைவிடத்தை, கோவில் கோபுரம் போன்று அலங்கரித்து, தொழில் போட்டியில் வரம்பு மீறிச் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார் அமைச்சர் சேகர்பாபு.

கடவுள் நம்பிக்கையே இல்லாதவர்கள் என்று கூறிக்கொள்ளும் திமுகவினர், காலகாலமாக இந்து சமய மக்கள் நம்பிக்கைகளைப் புண்படுத்துவதையே தொழிலாகக் கொண்டிருக்கிறார்கள். பொதுமக்கள் பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டு. 

TN Latest News Updates: 'நாத்திகம் என்ற பெயரில் நாடகமாடி'

தனது தொழில் போட்டிக்கு, இந்து சமய அறநிலையத் துறையைப் பயன்படுத்துவதை அமைச்சர் சேகர்பாபு இத்தோடு நிறுத்திக் கொள்ள வேண்டும். மறைந்த தனது தலைவர் மீது அத்தனை பாசம் என்றால், அமைச்சர் சேகர்பாபு, தனது வீட்டு பூஜையறையில் அவரது புகைப்படத்தை வைத்து வணங்கட்டும். நாத்திகம் என்ற பெயரில் நாடகமாடி, இந்து மத நம்பிக்கைகளை அவமானப்படுத்துவதை இனியும் தொடர்ந்தால், மக்கள் சரியான பாடம் புகட்டுவார்கள்" என குறிப்பிட்டுள்ளார்.

மேலும் படிக்க | அதிமுக - பாஜக கூட்டணி: ஆட்சியில் பங்கு கிடையாது... இபிஎஸ் உறுதி!

மேலும் படிக்க | கலைஞர் மகளிர் உரிமைத்தொகை புதியவர்களுக்கு வரப்போகும் தேதி இதுதான்..!!

மேலும் படிக்க | மாணவன் சின்னதுரை மீது மீண்டும் தாக்குதல்... தாக்கியது யார்...? முழு பின்னணி இதோ

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

About the Author

Sudharsan G

I’m Sudharsan G, Sub Editor at Zee Tamil News, with over five years of experience in Tamil content writing. I cover Tamil Nadu, national, and international news, along with sports stories that connect with readers. A follower of cricket, cinema, and politics, I bring depth and perspective to every piece. I also have on-screen camera experience, which helps me present news stories in a more engaging and impactful way. Outside work, I enjoy modern Tamil literature and discovering new voices in contemporary writing.

...Read More

Trending News