AIADMK BJP Alliance In Tamil Nadu: சென்னை கிண்டி ஐடிசி கிராண்ட் சோழா ஹோட்டலில் மத்திய அமைச்சர் அமித்ஷா (Amit Shah Press Meet) இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அந்த மேடையில் அமித்ஷா உடன் அதிமுக பொதுச்செயலாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி, அதிமுக முன்னாள் அமைச்சர்கள் கே.பி. முனுசாமி, எஸ்.பி. வேலுமணி, பாஜக சார்பில் அண்ணாமலை மற்றும் நயினார் நாகேந்திரன் ஆகியோர் அமர்ந்திருந்தனர்.
Amit Shah Press Meet: எடப்பாடி பழனிசாமி தலைமையில் கூட்டணி
செய்தியாளர் சந்திப்பில் பேசிய அமித்ஷா அதிமுக - பாஜக கூட்டணியை அறிவித்தார். "தேசிய அளவில் பிரதமர் மோடி, தமிழ்நாடு அளவில் எடப்பாடி பழனிசாமி (Edappadi Palanisamy) தலைமைய தேர்தலில் சந்திக்கிறோம். 1998ஆம் ஆண்டு முதல் அதிமுக - பாஜக கூட்டணி தொடர்ந்து அமைத்து வருகிறது. தேசிய ஜனநாயக கூட்டணி தமிழ்நாட்டில் நிச்சயம் ஆட்சி அமைக்கும்" என உறுதிப்பட தெரிவித்தார்.
Amit Shah Press Meet: அதிமுக எந்த நிபந்தனையும் விதிக்கவில்லை
ஒரு தேர்தலில் அதிமுக - பாஜக கூட்டணி 30 மக்களவைத் தொகுதிகளை வென்றது என்றும் அதிமுக எந்த நிபந்தனையும் விதிக்கவில்லை, இது இயல்பாக உருவான கூட்டணி ஆகும் என்றும் அமித்ஷா தெரிவித்தார். இந்த கூட்டணி இரு கட்சிகளுக்கும் பலன் தரக்கூடிய ஒன்று என அமித்ஷா பேசியிருந்தார். தொடர்ந்து பல்வேறு கேள்விகளுக்கும் அவர் பதிலளித்தார்.
Amit Shah Press Meet: டிடிவி, ஓபிஎஸ் கூட்டணியில் இருப்பார்களா?
மேலும், டிடிவி தினகரன் மற்றும் ஓபிஎஸ் ஆகியோரும் தற்போது தேசிய ஜனநாயக கூட்டணியில் இருக்கிறார்களா என்ற கேள்விக்கு பதில் அளித்த அமித் ஷா,"அதிமுகவின் உட்கட்சி விவகாரத்தில் பாஜக என்றுமே தலையிடாது. தேர்தலை எடப்பாடி பழனிசாமியின் தலைமையில், அவரின் ஆலோசனைபடி தேசிய ஜனநாயக கூட்டணி செயல்படும்" என்றார்.
அதிமுக - பாஜக கூட்டணி வெற்றி பெற்றால் கூட்டணி ஆட்சி உருவாகுமா, அமைச்சரவையில் பாஜகவினருக்கு வாய்ப்பு வழங்கப்படுமா என்ற கேள்விக்கு பதில் அளித்த அமித்ஷா,"இவையெல்லாம் தேர்தலில் வெற்றி பெற்ற பின்னர் அறிவிக்கப்படும்" என்றார். யார் யாருக்கு எவ்வளவு தொகுதிகள் என்பது பின்னர் முடிவு செய்யப்படும் என அமித்ஷா தெரிவித்தார்.
— Amit Shah (@AmitShah) April 11, 2025
Amit Shah Press Meet: குறைந்தபட்ச செயல்திட்டத்தை வகுப்போம்
மேலும், நீட் தேர்வை திமுக, அதிமுக ஆகியவை எதிர்த்து வரும் சூழலில், அதிமுக தற்போது தேசிய ஜனநாயக கூட்டணியில் இருப்பதால் பாஜகவின் நிலைப்பாடு என்ன என்ற கேள்விக்கு,"நாங்கள் அதிமுக உடன் கலந்து ஆலோசித்து குறைந்தபட்ச செயல்திட்டத்தை வகுத்து அதற்கேற்ப முடிவை எடுப்போம்" என்றார். மேலும், மக்கள் பிரச்னையை திசைத்திருப்புவதற்காகவே நீட் விவகாரம், மக்களவை தொகுதி வரையறை போன்ற பிரச்னைகளை திமுக எழுப்புவதாகவும் அமித்ஷா பேசியிருந்தார்.
Amit Shah Press Meet: திமுக மீதான ஊழல் குற்றச்சாட்டுகள்
திமுக மீது ஊழல் குற்றச்சாட்டை முன்வைத்த அமித்ஷா பேசியதாவது,"அரசு வேலைக்கு பணம், மண் கடத்தல் என பல ஊழல்கள் நடைபெற்றுள்ளன. மு.க.ஸ்டாலின் மற்றும் உதயநிதி ஸ்டாலின் இருவரும் ஊழல்வாதிகள். டாஸ்மாக் ஊழல், அரசு வேலைக்கு பணம், மண் கடத்தல் என பல ஊழல்கள் நடைபெற்றுள்ளன. தமிழ்நாட்டில் 39,000 கோடி ரூபாய் அளவுக்கு ஊழல் நடைபெற்றுள்ளது" என்றார். ஊழலை மறைக்க மும்மொழிக் கொள்கை விவகாரத்தை எழுப்பி திமுக திசை திருப்புகிறது என்றும் அமித்ஷா தெரிவித்தார். வரும் தேர்தலில் திமுக ஊழல், தலித், மகளிர் வன்கொடுமை போன்றவை எதிரொலிக்கும் என்றும் மக்களை திசை திருப்பவே நீட் உள்ளிட்ட பிரச்னைகளை திமுக கையில் எடுக்கிறது என்றும் அமித்ஷா பேசினார்.
Amit Shah Press Meet: இன்றும் அண்ணாமலை தான் தலைவர்
மாநிலத் தலைவர் மாற்றப்பட்ட பிறகு தான் அதிமுக கூட்டணி உறுதியானதா என்ற கேள்விக்கு,"அது தவறான புரிதல். இன்றும் அண்ணாமலை தான் தமிழ்நாட்டின் தலைவராக உள்ளார்" என பதிலளித்தார். அண்ணாமலையின் அடுத்த பதவி குறித்து கட்சி முடிவு செய்யும் என்றும் அமித்ஷா பேசினார்.
"திருக்குறளை பல்வேறு மொழிகளில் மொழிபெயர்த்துள்ளோம். பொறியியல் தேர்வுகளை பாஜக ஆட்சிக்குப் பிறகே தமிழில் எழுத முடிகிறது. பொறியியல், மருத்துவம் போன்ற படிப்புகளுக்கான பாடப்புத்தகத்தை தமிழில் கொண்டு வர வேண்டும் என பலமுறை இங்கு வரும்போது முதலமைச்சருக்கு கோரிக்கை வைத்துள்ளேன். ஆனால் தற்போது வரை அதற்கு எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை" என திமுகவை சாடி பேசியிருந்தார்.
மேலும் படிக்க | MGR, ஜெயலலிதா விசுவாசி... நெல்லையின் செல்லப்பிள்ளை - யார் இந்த நயினார் நாகேந்திரன்?
மேலும் படிக்க | அமைச்சர் பொன்முடி திமுக கட்சி பொறுப்பில் இருந்து நீக்கம் - முழு விவரம்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









