AIADMK Latest News Updates: கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட அதிமுக சார்பில் ரவுண்டானா பகுதியில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆர்-ன் 109வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நேற்று (ஜனவரி 19) நடைபெற்றது. கிருஷ்ணகிரி மாவட்ட செயலாளரும், சட்டப்பேரவை உறுப்பினருமான அசோக்குமார் தலைமையில் நடைபெற்றது.
AIADMK Latest News Updates: 8வது கொடைவள்ளல் எம்ஜிஆர்
இந்த நிகழ்ச்சியில் அதிமுக துணை பொதுச்செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கே.பி. முனுசாமி கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். அப்போது பேசிய, சட்டமன்ற உறுப்பினர் கே.பி.முனுசாமி, "பொதுமக்களுக்கு நல்ல அறிவுரை வழங்கக்கூடிய கதாபாத்திரத்தில் தான் எம்ஜிஆர் நடித்துள்ளார். குடித்துவிட்டு கும்மாளம் போடும் கதாபாத்திரத்தில் நடித்தது கிடையாது. குடித்தவனை கண்டித்து திருத்தும் கதாபாத்திரத்தில்தான் எம்ஜிஆர் நடித்துள்ளார். படத்திலும் கூட நேர்மையான மனிதநேயமிக்க, தாய் பாசம் கொண்ட நல்லவராக நடித்தவர்.
அவர் சம்பாதித்த பணம் முழுவதையும் மக்களுக்காக கொடுத்தவர் அதனால்தான் அவரை எட்டாவது கொடைவள்ளல் என அழைப்பார்கள். எந்த நடிகனாவது அவ்வாறு கொடுத்து உள்ளார்களா...?. திமுகவின் பொதுச்செயலாளராக இருக்கக்கூடிய துரைமுருகனின் கல்வி செலவை கொடுத்தவர் எம்ஜிஆர். அதை துரைமுருகனே மேடையில் கூறியிருக்கிறார்" என்றார்.
AIADMK: அரசியலுக்கு வந்து என்ன செய்யப்போகிறார்கள்?
இயேசு பிரானை நாம் நேரில் பார்த்ததில்லை. ஆனால் அவர் சொன்ன கருவிற்கு சொந்தக்காரர் எம்ஜிஆர். தன்னுடைய கடைசி காலத்தில் தான் வாழ்ந்த வீட்டை தன்னுடைய உறவினர்களுக்கு கொடுக்கவில்லை, மாறாக மாற்றுத்திறனாளி குழந்தைகளின் கல்விக்காக வழங்கியவர்தான் எம்ஜிஆர். அப்படிப்பட்ட எம்ஜிஆர் போன்ற நடிகர் எங்கே, தற்பொழுது இருக்கக்கூடிய நடிகர்கள் எங்கே என்று சிந்தித்து பார்க்க வேண்டும்.
தற்போது இருக்கக்கூடிய நடிகர்கள் சாராயத்தை குடித்துவிட்டு, பாடல் போட்டு பெண்களுடன் நடனம் ஆடுகிறார்கள். 100 பேரை அடிப்பது போல் ஷோ காட்டுவார்கள். அவர்களெல்லாம் அரசியலுக்கு வந்து என்ன செய்யப் போகிறார்கள்...? ஒருவர் என்ன தொழில் செய்கிறார்கள் என்பது முக்கியமில்லை மக்களை நேசிக்க கூடியவர்களாக இருக்க வேண்டும்.
AIADMK: விஜய்யை அட்டாக் செய்யும் அதிமுகவினர்
ஏழை மக்களின் உணர்வுகளையும் அவர்களது நிலைகளையும் அறிந்து கொண்டு அவர்களுக்காக போராடக்கூடிய சிந்தனையுள்ள தலைவன் கட்சி நடத்த வேண்டும். நாட்டில் ஆட்சிக்கு வர வேண்டும், அப்படிப்பட்ட சிந்தனையுடைய தலைவர் (எம்ஜிஆர்) அதிமுகவை உருவாக்கியது மட்டும் இல்லாமல் கட்சியில் உள்ள ஒவ்வொரு தொண்டனையும் அதே தாய் உள்ளம் கொண்ட சிந்தனையோடு உருவாக்கியுள்ளார். அந்த தலைவருக்குதான் பிறந்தநாள் நிகழ்ச்சி எடுத்துள்ளோம், இந்த நாளில் மீண்டும் எம்ஜிஆர் ஆட்சி மலர வேண்டும் என நாம் சபதம் ஏற்போம்" என்றார்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உள்பட கட்சியின் முன்னணி தலைவர்கள் பலர் தற்போது விஜய்யை மறைமுகமாக சாடி வருகின்றனர். அந்த வகையில் அதிமுகவின் துணை பொதுச்செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கே.பி. முனுசாமியும் விஜய்யை மறைமுகமாக தாக்கியிருப்பதன் மூலம் அதிமுக தவெகவை டார்கெட் செய்யத் தொடங்கிவிட்டது என்பது உறுதியாகிறது.
மேலும் படிக்க | தவெகவை தாக்கும் அதிமுக... இபிஎஸ்-ன் அடுத்த கட்ட பாய்ச்சல் - என்ன செய்வார் விஜய்?
மேலும் படிக்க | ஜனநாயகன் விவகாரம்: மேல்முறையீடு மனு தள்ளுபடி - உச்ச நீதிமன்றம் அதிரடி
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









