தேனியில் இன்று (மே 21) 2026 சட்டமன்ற தேர்தல் குறித்து தேனி திமுக வடக்கு மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் தேனி எம்பி தங்க தமிழ்செல்வன், ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் ஐ. பெரியசாமி, நிதி மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு ஆகியோர் கலந்து கொண்டு நிர்வாகிகளுக்கு ஆலோசனை வழங்கினர்.
இந்த நிலையில்தான், அமைச்சர் ஐ. பெரியசாமி, வரும் 2026 தேர்தலில் அதிமுக எதிர்க்கட்சியாக கூட இருக்கக்கூடாது. அதுவே நமது குறிக்கோள் என தெரிவித்துள்ளார். அவர் பேசியதாவது, அதிமுக என்ற கட்சி எதிர்கட்சியாக கூட இருக்கக்கூடாது என்பதை நமது குறிக்கோளாக கொண்டு தேர்தல் பணியாற்ற வேண்டும்.
இந்த தேர்தல் நமக்கு பெரிய சவால். திமுக ஆட்சியில் அமர்ந்த பின்பு இரண்டாவது முறை ஆட்சி அமைக்காது என்று சொல்கிறார்கள். நான் கூறுகிறேன் இந்ததேர்தல் மட்டுமல்ல இதற்கு அடுத்து வரும் தேர்தலில் திமுக தான் தொடர்ந்து வெற்றி பெற்றுக் கொண்டே இருக்கும்" என தெரிவித்தார்.
கூட்டத்தில் அமைச்சர் தங்கம் தென்னரசு பேசும்போது, "ஒவ்வொரு தொகுதியிலும் தலைவர் ஸ்டாலின் போட்டியிடுகின்றார் என்று நாம் பணி செய்தால் தமிழ்நாட்டுக்கு திராவிட மாடல் ஆட்சியின் 2.0 திட்டங்கள் கிடைக்கும். ஒவ்வொரு வீட்டிற்கும் பயன்பெறும் வகையில் இந்த நான்கு ஆண்டு கால ஆட்சி உள்ளது. முதல்வர் மீது தமிழ்நாட்டு மக்கள் அதிக நம்பிக்கை வைத்துள்ளனர், அந்த நம்பிக்கையை நாம் வாக்குகளாக மாற்ற வேண்டும். இந்த தேர்தலில் 100 சதவீதம் வெற்றியை பெற்று தரவேண்டும் என்பதே முதலமைச்சருக்கு நாம் செய்ய வேண்டிய கடமை" என்றார்.
மேலும் படிங்க: "ஏக்கருக்கு ரூ. 5,000 மானியம் வழங்க வேண்டும்" - அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்!
மேலும் படிங்க: "ஈபிஎஸ் பொய் கூறி வருகிறார்".. உளறிய முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ