அஜித்குமார் மரணம்: நேரடி சாட்சியான சக்தீஸ்வரனுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு!

அஜித்குமார் லாக்கப் மரண வழக்கில் நேரடி சாட்சியான சக்தீஸ்வரனுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு வழங்க உத்திரவிடப்பட்டுள்ளது.   

Written by - R Balaji | Last Updated : Jul 3, 2025, 04:55 PM IST
  • அஜித்குமார் மரணம்
  • சாட்சியான சக்தீஸ்வரனுக்கு போலீஸ் பாதுகாப்பு
அஜித்குமார் மரணம்: நேரடி சாட்சியான சக்தீஸ்வரனுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு!

சிவகங்கை மாவட்டம் மடப்புரம் பத்ரகாளி அம்மன் கோவில் தற்காலிக காவலாளியாக வேலை பார்த்த அஜித்குமார் கடந்த வெள்ளிக்கிழமை (ஜூன் 27) அன்று நகை திருடியதாக விசாரணைக்கு போலீசார் அழைத்து சென்றனர். இந்நிலையில், விசாரணையின்போது, காவலர்களால் அடித்துக் கொல்லப்பட்டார். இச்சம்பவம் தமிழக முழுவதும் பெரும் அதிர்வலை ஏற்படுத்தியது. 

Add Zee News as a Preferred Source

இந்த விவகாரத்தில் 5 காவலர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மாவட்ட எஸ்பி ஆஷித் ராவத் காத்திருப்போர் பட்டியலுக்கும் மானாமதுரை டி.எஸ்.பி சண்முகசுந்தரம் பணியிட நீக்கம் செய்தும் உத்தரவிட்டப்பட்டுள்ளது. மேலும், கொலை செய்பவர் கூட இவ்வாறு கொடூரமாக தாக்கமாட்டார் என நீதிமன்றம் கடுமையாக சாடியது. இந்த நிலையில், கோவில் ஊழியர் ஆன சக்தீஸ்வரன் என்பவர் போலீசாரால் அஜித்குமார் சரமாரியாக தாக்கப்படும் வீடியோவை அவர் வெளியிட்டிருந்தார். அந்த வீடியோ வைரலாக பரவிய நிலையில், பார்ப்போர் நெஞ்சை பதற வைத்தது. 

தற்போது சக்தீஸ்வரன் வீடியோ வெளியிட்டதால் தொடர்ந்து மிரட்டல் வருவதாக அவர் பாதுகாப்பு கேட்டு நேற்று (ஜூலை 02) டிஜிபி உட்பட அனைத்து அதிகாரிகளுக்கும் மெயிலில் அனுப்பி உள்ளார். முன்னதாக சக்தீஸ்வரன் செய்தியாளரை சந்தித்து பேசினார். அப்போது, "எனக்கு பாதுகாப்பு கேட்டு அனைத்து அதிகாரிகளுக்கும் மெயில் அனுப்பி உள்ளேன். தொடர்ந்து மிரட்டல் வந்து கொண்டிருக்கிறது. எனக்கும் என்னை சுற்றி உள்ளவர்களுக்கும் பாதுகாப்பு கொடுக்கப்பட வேண்டும். எனது வீட்டை சுற்றி தற்போது  சிசிடிவி மாட்டியுள்ளேன். அதனால் பாதுகாப்பு கேட்டு அனைத்து அதிகாரிகளுக்கும் மெயில் அனுப்பி உள்ளேன் என கூறினார். 

மதுரை மாவட்ட நீதிபதி ஜான் சுந்தர்லால் சுரேஷ் நேற்று (ஜூலை 02) முதல் நீதிமன்ற விசாரணை மேற்கொண்டு வருகிறார். இவ்வழக்கில் சம்பந்தப்பட்டவர்களை விசாரித்து வருகிறார். இன்று(ஜூலை 03) இரண்டாவது நாள் என்பதால் விசாரணை காலை 8.30 மணிக்கு நீதிபதி காவல் நிலையம் அருகே உள்ள நெடுஞ்சாலை பயணியர் விடுதிக்கு வந்து விசாரணை தொடங்கியுள்ளார். இன்று வீடியோ வெளியிட்ட சக்தீஸ்வரன் உட்பட நான்கு பேருக்கு விசாரணையை மதுரை மாவட்ட நீதிபதி  ஜான் சுந்தரலால் சுரேஷ் இரண்டாவது நாளாக விசாரணையை மேற்கொண்டு வருகிறார். இந்த நிலையில், சக்தீஸ்வரனுக்கு பாதுகாப்பு வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதனையடுத்து தற்போது சக்தீஸ்வரனுக்கு, 24 மணி நேரமும் துப்பாக்கி ஏந்திய ஆயுதப் படை போலீஸ் பாதுகாப்பு வழங்க தமிழக அரசு உத்தரவிடடுள்ளது.

மேலும் படிங்க: ராமநாதபுரத்திற்கு குட் நியூஸ்... ரூ.1,853 கோடியில் வரப்போகும் மத்திய அரசின் மிரட்டல் திட்டம்!

மேலும் படிங்க: இன்று வெளியான 10th மறுமதிப்பீடு ரிசல்ட்... ஆன்லைனில் எப்படி பார்ப்பது?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

About the Author

Trending News