அலங்காநல்லூரில் அமர்களமான ஜல்லிக்கட்டு... விசிட் அடிக்கும் முதல்வர்... தங்க மோதிரங்கள் பரிசு

Alanganallur Jallikattu 2026: உலக புகழ்பெற்ற மதுரை அலங்காநல்லூரில் இன்று தொடங்கிய நிலையில், முதல்வர் ஸ்டாலின் அங்கு வருகை தர இருக்கிறார். போட்டியில் வழங்கப்படும் பரிசுகள் என்னென்ன என்பதை இங்கு காணலாம். 

Written by - Sudharsan G | Last Updated : Jan 17, 2026, 09:07 AM IST
  • காலை 8 மணியளவில் போட்டி தொடங்கியது.
  • 11 சுற்றுகளாக போட்டி நடைபெறும்.
  • தேர்ந்தெடுக்கப்படும் வெற்றியாளர்கள் அனைவரும் இறுதிச்சுற்றில் பங்கேற்பார்கள்.
அலங்காநல்லூரில் அமர்களமான ஜல்லிக்கட்டு... விசிட் அடிக்கும் முதல்வர்... தங்க மோதிரங்கள் பரிசு

Alanganallur Jallikattu 2026: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மதுரை மற்றும் அதனைச் சுற்றியுள்ள மாவட்டங்களில் எக்கச்சக ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற இருக்கின்றன. 

Add Zee News as a Preferred Source

நேற்று முன்தினம் (ஜன. 15) தைப்பொங்கல் அன்று அவனியாபுரத்திலும், நேற்று (ஜன. 16) மாட்டுப் பொங்கல் அன்று பாலமேட்டிலும் ஜல்லிக்கட்டு போட்டிகள் வெற்றிகரமாக நடத்தப்பட்டன. எக்கச்சக்க காளைகளும், மாடுபிடி வீரர்களும் பரிசுகளை வென்றனர்.

Alanganallur Jallikattu 2026: முதல்வர் ஸ்டாலின் வருகை

அந்த வகையில், உலகப் புகழ்பெற்ற மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி இன்று காலையில் வீரர்கள் உறுதிமொழி ஏற்புடன் தொடங்கியது. பத்திரப்பதிவுத் துறை அமைச்சர் மூர்த்தி கொடியசைத்து ஜல்லிக்கட்டு போட்டியை தொடங்கிவைத்தார். வீரர்கள் உறுதிமொழி ஏற்புடன் போட்டி தொடங்கி முதலில் அலங்காநல்லூர் கோவில் காளைகள் வாடிவாசல்  அவிழ்த்துவிடப்பட்டது. இதையடுத்து காலை 10 மணிக்கு மேல் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் போட்டியை பார்வையிட்டு மாடுபிடி வீர்ர்கள் மற்றும் காளை உரிமையாளர்களுக்கு தங்க மோதிரங்களை பரிசாக வழங்க உள்ளார்.

Alanganallur Jallikattu 2026:  மொத்தம் 11 சுற்றுகள்

இந்த போட்டியில் 1100 காளைகள், 550 மாடுபிடி வீரர்களும் பங்கேற்க ஆன்லைன் டோக்கன் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு சுற்றிலும் 50 வீரர்கள் அனுமதிக்கப்படுவார்கள். மொத்தம் 11 சுற்றுகளாக போட்டி நடத்தப்பட உள்ளது. ஒவ்வொரு சுற்றுகளிலும் காளைகளை பிடிப்பவர்களின் அடிப்படையில் சிறந்த மாடுபிடி வீரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். பின்னர் 11 சுற்றுகளிலும் சிறப்பாக விளையாடி தேர்வான  மாடுபிடி வீரர்கள் மட்டும் இறுதிச்சுற்றில் பங்கேற்பார்கள்.

Alanganallur Jallikattu 2026: பரிசுகள் என்னென்ன?

போட்டியில் சிறப்பாக விளையாடி முதல் இடத்தை பிடிக்கும் சிறந்த காளைக்கு முதலமைச்சர் சார்பில் டிராக்டரும், சிறந்த மாடுபிடி வீரருக்கு காரும் பரிசாக வழங்கப்பட உள்ளது. இரண்டாவது பரிசாக பைக் மூன்றாவது பரிசாக ஸ்கூட்டி பரிசு வழங்கப்படவுள்ளது. போட்டியில் கலந்துகொள்ளும் அனைத்து காளைகளுக்கும் தங்க காசு வழங்கப்பட உள்ளது.

இதேபோன்று போட்டியின்போது சிறப்பாக விளையாடி வெற்றிபெறக்கூடிய காளைகள் மற்றும் மாடுபிடி வீரர்களுக்கு, மிக்சி, மெத்தை, சைக்கிள், கிரைண்டர், கட்டில், குக்கர், அண்டா போன்ற பல்வேறு பரிசுகளும் வழங்கப்பட்டு வருகின்றன. ஆன்லைன் மூலமாக பதிவுசெய்யப்பட்ட காளைகள் மற்றும் மாடுபிடி வீரர்களுக்கு போட்டியில் கலந்துகொள்வதற்கான மருத்துவ பரிசோதனை நடைபெறுகிறது. இதற்காக கால்நடைத்துறை மருத்துவர்கள் மற்றும் பொது மருத்துவர்கள் குழு பரிசோதனை பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Alanganallur Jallikattu 2026: டிஜிட்டல் ஸ்கோர் போர்ட்

போட்டியின் போது மாடுபிடி வீரர் ஆள்மாறாட்டத்தை தடுக்கும் வகையில் வீரர்களை கண்காணிக்க சிறப்புகுழு அமைக்கப்பட்டுள்ளது.காளைகளை கண்காணிக்க விலங்குகள் நல வாரிய மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை ஆகியோர் இணைந்த குழு அமைக்கப்பட்டுள்ளது. 

இந்த போட்டியை காண்பதற்காக வெளிநாடுகள் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் பார்வையிடுவதற்காக தனி பார்வையாளர் இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில்  ஒவ்வொரு சுற்றின் முடிவிலும் டிஜிட்டல் ஸ்கோர் போர்ட் மூலமாக முடிவுகள் வெளியிடப்பட உள்ளது.

மேலும் படிக்க | பாலமேடு ஜல்லிக்கட்டு: சிறந்த காளைகள், மாடுபிடி வீரர்களுக்கு... என்னென்ன பரிசுகள் கிடைக்கும்?

மேலும் படிக்க | பாலமேடு ஜல்லிக்கட்டு: தொடங்குவதில் தொடர் தாமதம்... மக்கள் ஆவேசம்- உதயநிதி காரணமா?

மேலும் படிக்க | அவனியாபுரத்தில் மாடுபிடி வீரரை தூக்கி வீசிய காளை

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

About the Author

Sudharsan G

I’m Sudharsan G, Sub Editor at Zee Tamil News, with over five years of experience in Tamil content writing. I cover Tamil Nadu, national, and international news, along with sports stories that connect with readers. A follower of cricket, cinema, and politics, I bring depth and perspective to every piece. I also have on-screen camera experience, which helps me present news stories in a more engaging and impactful way. Outside work, I enjoy modern Tamil literature and discovering new voices in contemporary writing.

...Read More

Trending News